தல-தளபதியே வந்தாலும் அசராத ரஜினி-மோகன்லால்

Kabali and Pulimurugan movies making records in Box Officeசினிமா உலகில் வெற்றிகரமாக 200வது நாள், 100வது நாள், வெற்றி விழா என்று செய்திகளை பார்ப்பது மிக அரிதாக விட்டது.

ஒரு படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஓடினால் பெரிய விஷயம் என்றாகிவிட்டது.

இதனையும் கடந்து, தல தளபதி உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் 50 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

இவர்களுக்கு தமிழகத்தில் பெரிய ரசிகர் வட்டம் உள்ளது நாம் அறிந்ததே.

இருந்தபோதிலும், இவர்களுக்கு சவால் விடும் வகையில் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக சினிமாவில் கோலோச்சி கொண்டிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த் மற்றும் மோகன்லால்.

ரஜினியின் கபாலி திரைப்படம் மதுரையில் உள்ள மணி இம்பாலா தியேட்டரில் அண்மையில் 250 நாட்களை கடந்துள்ளது.

அதுபோல் மோகன்லால் நடித்து மலையாள சினிமாவில் வசூல் வேட்டை செய்த புலிமுருகன் படம் 200 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

கபாலி படத்தின் ரிலீஸ் கேரள உரிமையை பெற்ற மோகன்லால், அதற்காக தன் புலிமுருகன் படத்தை ஒத்தி வைத்தது இங்கே கவனிக்கத்தக்கது.

Kabali and Pulimurugan movies making records in Box Office

Overall Rating : Not available

Latest Post