தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
எனவே அன்றைய தினத்தில் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் திடீரென ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு விவேகம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.
எனவே மற்ற படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவுள்ள அந்த படங்களை தற்போது பார்ப்போம்.
ராம் இயக்கத்தில் வசந்த்ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடித்துள்ள தரமணி. யுவன் இசையைமைத்துள்ளார்.
தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி, நிவேதா, சூரி நடித்துள்ள பொதுவாக எம்மனசு தங்கம். இமான் இசையமைத்துள்ளார்.
நித்திலன் இயக்கத்தில் விதார்த், பாரதிராஜா நடித்துள்ள குரங்கு பொம்மை.
ஸ்ரீகண்டன் இயக்கியுள்ள தப்பு தண்டா.
தயாரிப்பாளர் சிவி குமார் முதன்முறையாக இயக்கியுள்ள மாயவன்.
ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இத்துடன் சிபிராஜின் சத்யா, விக்ரம் பிரபுவின் நெருப்புடா ஆகிய படங்களும் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
விஐபி 2 ரிலீஸ் தேதி இன்று மாலை வெளியாகவுள்ளது.
இவற்றைத் தொடர்ந்து வேறு சில படங்களும் இதே நாளில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
Due to Vivegam postponed 6 movies announced their release date on 11th Aug 2017