ட்ரீம் வாரியர்ஸின் 21வது படத்தில் ஜோதிகா; எஸ்.ராஜ் இயக்குகிறார்

ட்ரீம் வாரியர்ஸின் 21வது படத்தில் ஜோதிகா; எஸ்.ராஜ் இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jyothika2-வது சுற்றில் தான் நடிக்கும் படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த ’36 வயதினிலே’ படம் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’ படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. தனக்கு முக்கியத்துவம் தரும் கதை மட்டும் தான் வேண்டும் என்றில்லாமல், நிஜ வாழ்க்கையோடு ஒன்றி போகும் கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் கவனமாக இருக்கிறார். இதன் மூலம் முன்பை விட அதிக ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார். அதற்கு சான்றாக இந்த வாரம் வெளியாகிறது அவர் நடித்த ‘காற்றின் மொழி’. இப்படம் வெளியாவதற்கு முன்பே ஜோதிகாவைப் பற்றியும், படத்தைப் பற்றியும் மிகுந்த எதிர்பார்ப்பை (குறிப்பாக பெண்களிடம்) ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், ஜோதிகாவை வைத்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது 21-வது படத்தைத் தயாரிக்கவுள்ளது. இதற்கான பூஜை இன்று (14.11.2018) நடத்தப்பட்டது. இந்த வார இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும். இப்படத்தை அறிமுக இயக்குநர் S.ராஜ் இயக்குகிறார்.

இதில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : இசை – ஸீன் ரோல்டன், ஒளிப்பதிவு – கோகுல் பென்னி, படத்தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை – பவல் குமார், வசனம் – பாரதி தம்பி, சண்டைப்பயிற்சி – சுதேஷ், தயாரிப்பு நிர்வாகம் – அரவிந்த் பாஸ்கரன், மேலாளர்கள் – சிராஜ் & ராஜாராம் மற்றும் மக்கள் தொடர்பு – ஜான்சன்

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் மற்றும் SR பிரபு தயாரிக்கும் இவர்கள்- செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘நந்த கோபால kumaran’ NGK படத்தை தயாரித்து வருகிறார்கள்.

Breaking தளபதி 63 அதிகாரப்பூர்வ அறிவிப்பு; மீண்டும் மெர்சல் கூட்டணி

Breaking தளபதி 63 அதிகாரப்பூர்வ அறிவிப்பு; மீண்டும் மெர்சல் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atlee AR Rahman team up again for Vijays Thalapathy 63 movie with AGSவிஜய் நடித்த சர்கார் படம் வெளியாகி இன்னும் 2 வாரங்கள் கூட ஆகவில்லை. ஆனால் அதற்குள் தன் அடுத்த பட அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக தளபதி 63 படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விஜய்யின் 63 வது படமாக இரு உருவாகவிருப்பதால் தளபதி 63 எனப் பெயரிட்டுள்ளனர்.

அட்லி இயக்க, ஏஆர். ரஹ்மான் இசையைமக்கிறார். இவர்கள் ஏற்கெனவே மெர்சல் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

இப்படத்தை அடுத்த வருடம் 2019 தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஒளிப்பதிவு ஜிகே. விஷ்னு
எடிட்டிங் ரூபன் எல். ஆண்டனி
கலை இயக்குனர் முத்துராஜ்
சண்டை அனல் அரசு
பாடல்கள் விவேக்
நிர்வாக தயாரிப்பு வெங்கட் மாணிக்கம்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

Atlee AR Rahman team up again for Vijays Thalapathy 63 movie with AGS

பூஜை போட்டாச்சு.; அட்லி இயக்கும் “தளபதி 63” பட முக்கிய அறிவிப்பு

பூஜை போட்டாச்சு.; அட்லி இயக்கும் “தளபதி 63” பட முக்கிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 63 movie pooja happened Official announcement today eveningஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் கடந்த 6ஆம் தேதி வெளியானது.

தமிழக அரசியலில் பல சர்ச்சைகளை கிளப்பிய இப்படம் இன்றும் வெற்றிக்கரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து தனது 63ஆவது படத்திற்காக மீண்டும் அட்லியுடன் இணைகிறார் விஜய்.

ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வெளியான தெறி மற்றும் மெர்சல் ஆகிய இரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இப்படத்தின் பணிகள் இன்று மைலாப்பூரில் உள்ள ஒரு கோயிலில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாக உள்ளது.

இப்படத்திற்கு ஆளப்போறான் தமிழன் என பெயரிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாயகியாக சமந்தா அல்லது நயன்தாரா அல்லது கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thalapathy 63 movie pooja happened Official announcement today evening

Breaking ரஜினியுடன் மோதல்.?; பொங்கலுக்கு வர்றோம் என சிம்பு அறிக்கை

Breaking ரஜினியுடன் மோதல்.?; பொங்கலுக்கு வர்றோம் என சிம்பு அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbus statement regarding his next movie release on 2019 Pongalதன்னுடைய நஷ்டத்தை தராமல் எந்த படத்திலும் சிம்பு நடிக்க கூடாது என அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்திருந்தார்.

இருந்தபோதிலும் சுந்தர் சி இயக்கும் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சிம்புக்கு தடை என்ற செய்திகள் பரவ தொடங்கிய நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலுக்கு எதிராக சிம்பு ரசிகர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சற்றுமுன் சிம்புவின் மக்கள் தொடர்பாளர் சி.என். குமார் அவர்கள் சிம்பு தரப்பில் இருந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில்.. என் அன்பான ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். தற்போது திரைத்துறையில் நடந்து வரும் தகவல்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்.

தனிப்பட்ட எந்த நபரும் முடிவு எடுக்க முடியாது. அதற்கு என்று ஒரு குழு உள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட தனி நபரையும் தாக்கி பேச வேண்டாம்.

அன்பை பகிருங்கள். உங்கள் அன்பிற்கு நன்றி. நீங்க இல்லாம நானில்லை.

நம் கடமையை செய்வோம். முடிவு தானாக வரும். இறுதியாக பொங்கலுக்கு வர்றோம் என அந்த அறிக்கையில் சிம்பு குறிப்பிட்டுள்ளார்.

சற்றுமுன் தான் ரஜினியின் பேட்ட படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஒரு மணி நேர இடைவெளியில் சிம்பு இந்த அறிக்கையை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டது இங்கே கவனிக்கத்தக்கது.

Simbus statement regarding his next movie release on 2019 Pongal

simbu str statement

பாட்ஷா-வுக்கு பிறகு ரஜினிகாந்த் வைக்கும் பொங்கல் விருந்து

பாட்ஷா-வுக்கு பிறகு ரஜினிகாந்த் வைக்கும் பொங்கல் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Baasha movie Rajini giving Petta treat on Pongalரஜினிகாந்த் படங்கள் ரிலீஸ் என்றாலே அவரது ரசிகர்கள் திருவிழா போல் கோலாகலத்துடன் கொண்டாடுவார்கள்.

அதுவும் தீபாவளி, பண்டிகை போன்ற தினங்களில் வெளியானால் கேட்கவே வேண்டாம். டபுள் ட்ரீட் என மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்பார்கள்.

இது போன்ற பண்டிகை தினங்களில் பல படங்கள் வெளியானாலும் பாட்ஷா திரைப்படம் தான் இறுதியாக பொங்கல் தினத்தில் வெளியானது. அதுபோல் முத்து படம்தான் தீபாவளி திருநாளில் வெளியானது.

அதன்பின்னர் கடந்த 23 வருடங்களாக ரஜினியின் திரைப்படங்கள் பண்டிகை தினங்களில் ரிலீஸாகவில்லை.

எனவே ரஜினி பட ரிலீஸ் தேதியை பண்டிகையாக கொண்டாடி வந்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் பாட்ஷா படத்திற்கு பிறகு அதாவது 23 வருடங்களுக்கு ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சற்றுமுன் இந்த அறிவிப்பு வெளியானதை நம் தளத்தில் புதிய போஸ்டருடன் பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

After Baasha movie Rajini giving Petta treat on Pongal

*பேட்ட* பொங்கலுக்கு பராக்.; குழப்பத்தில் அஜித்-சிம்பு ரசிகர்கள்

*பேட்ட* பொங்கலுக்கு பராக்.; குழப்பத்தில் அஜித்-சிம்பு ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Petta release date confirmation made Ajith and Simbu fans confusionரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படம் அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் வெளியாகும் என சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பேட்ட பொங்கலுக்கு பராக் என போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் இதே பொங்ல் திருநாளில்தான் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் “வந்தா ராஜாவாதான் வருவேன்” என்ற திரைப்படமும் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

ரஜினி படங்கள் ரிலீஸ் தேதி தெரிந்தால் மற்ற படங்களை அந்த நாளில் வெளியிட மாட்டார்கள்.

காரணம் ரஜினி படங்கள் மட்டுமே அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்யப்படும்.

தற்போது ரஜினி தன் பேட்ட ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டதால் “விஸ்வாசம்” மற்றும் “வந்தா ராஜாவாதான் வருவேன்” ஆகிய திரைப்படங்கள் வெளியாகுமா? என்ற குழப்பம் அஜித், சிம்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Petta release date confirmation made Ajith and Simbu fans in confusion

More Articles
Follows