‘என்னை பழிவாங்க இது நேரம் அல்ல…’ விஷால் உருக்கம்

‘என்னை பழிவாங்க இது நேரம் அல்ல…’ விஷால் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய இளைஞர்கள் குரல் கொடுத்தனர்.

மேலும் அந்த அமைப்பில் தொடர்புடையதாக கூறப்படும் த்ரிஷா, விஷால் உள்ளிட்டவர்கள் அதிலிருந்து விலக வேண்டும் எனவும் குரல் கொடுத்தனர்.

த்ரிஷாவுக்கு அதில் தொடர்பில்லை என அவரது தாயார் உமா தெரிவித்த இருந்தார் என்பதை பார்த்தோம்.

தற்போது, இது தொடர்பாக விஷால் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது…

“மறுபடியும் என்னை பற்றி தவறான செய்தி இணையங்களில் பரவி வருகிறது.

மாணவர்கள் மீது தடியடி சரிதான் என்று நான் கூறியதாக அந்த செய்தி வெளியாகியுள்ளது.

தயவு செய்து சொல்கிறேன் என்னை பழி வாங்க இது நேரம் அல்ல, அப்படி என்னை பழி வாங்க வேண்டுமா அதற்கு வேறு தளம் தேடுங்கள்.

இந்த மாணவர்கள் போராட்ட விஷயத்தில் வேண்டாம்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Dont take revenge on me in students protest issue says Vishal

‘தமிழக அரசை குறை சொல்லாதீர்கள்…’ கமல் ஓபன் டாக்

‘தமிழக அரசை குறை சொல்லாதீர்கள்…’ கமல் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal hassanஜல்லிக்கட்டு போராட்டம், போலீஸ் தடியடி உள்ளிட்டவைகளை பற்றி தன் கருத்தை தெரிவிக்க தற்போது கமல் பத்திரிகையாளர்கள் சந்தித்து வருகிறார்.

அப்போது அவர் பேசியதாவது….

நம் இளைஞர்கள், மாணவர்கள் அறவழியில் போராட்டங்களை நடத்தினார்கள்.

அவர்களுக்கு தலைவன் இல்லை. ஆனால் அவர்களின் நோக்கம் ஒரே குரல்தான். அது ஒரே குரலாக ஒலித்தாலே போதும்.

சிலர் இன்றும் (ஜனவரி 24, 2017) மெரினாவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கலாம்.

அதற்காக அவர்களை சதிகாரர்கள், விஷமிகள் என கேவலப்படுத்தாதீர்கள்.

அதுபோல் தமிழக அரசும் தன்னால் முயன்ற அனைத்தையும் செய்துள்ளனர்.

இன்னும் சிறப்பாக அவர்கள் செய்திருந்தால் சந்தோஷம்.

அதற்காக அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என கூறை சொல்லாதீர்கள்.

வன்முறையில் ஈடுபட்ட போலீஸாரின் காட்சிகளை பார்த்த போது, இது காவல்துறையாக இருக்காது என்றே நம்பினேன்.

என்னைப்போல் சில நடிகர்களாக இருப்பார்கள் என்றே நம்புகிறேன். அவர்கள் தண்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக விளக்கம் வரும் என நம்புகிறேன்.

இது சாதாரண மனிதனை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். எப்போது வேண்டுமானாலும், நாம் அவர்களால் பாதிக்கப்படக்கூடும் என பயம் கொள்வான்” என்று பேசினார்.

மேலும் சபாஷ் நாயுடு சூட்டிங்கில் விரைவில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

‘பீட்டாவுக்கு தடை தேவையில்லை..’ கமல் பரபரப்பு பேச்சு

‘பீட்டாவுக்கு தடை தேவையில்லை..’ கமல் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalஜல்லிக்கட்டு போராட்டம் முடிவடையும் நிலையில், திடீரென கலவரமானது.

இது தொடர்பாக தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி வருகிறார் கமல்ஹாசன்.

அப்போது அவர் கூறிவருவதாவது…

ஜல்லிக்கட்டை தடை செய்ய Peta சொல்வதால், நாம் பீட்டாவை தடை செய்யுங்கள் என்று சொல்ல வேண்டாம்.

ஆனால், அதில் சிலவிதிமுறைகளை மாற்ற வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் கார்களில் அடிப்பட்டு நாய்கள் கொல்லப்படுகின்றன. அதற்காகவும் அவர்கள் குரல் கொடுக்கின்றனர்.

கார்களில் மனிதர்கள் கூட அடிப்படுகிறார்கள். அதற்காக காரை தடை செய்ய முடியுமா?

சில இடங்களில் ஸ்பீட் பிரேக் மற்றும் ஸ்பீட் லிமிட் செய்வது போல் ஒழுங்கப்படுத்த வேண்டும்.

ஆனால் மாட்டை சாப்பிடுவதற்கு அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர்.

இவர்கள் இல்லையென்றால் நாளை வேறு ஒரு அமைப்பு வரலாம். அதற்காக எல்லாம் அமைப்புகளை தடை செய்ய சொல்ல முடியாது.

அவர்கள் அமைப்பில் சில விதிமுறைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும்.” என்று பேசினார்.

தங்கத்தால் எழுதப்பட வேண்டிய போராட்டத்தை முடிக்க ரஜினி வேண்டுகோள்

தங்கத்தால் எழுதப்பட வேண்டிய போராட்டத்தை முடிக்க ரஜினி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இன்று போராட்டத்தை கைவிட கூறிய காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.

இதனால் தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

இந்திய சரித்திரத்தில் தங்க எழுத்துக்களால் எழுதக்கூடிய அமைதி போராட்டத்தை தமிழக மக்கள் அனைவரும் இணைந்து நடத்தியுள்ளனர்.

உலகின் கவனத்தை ஈர்த்த இந்த போராட்டம் வெற்றி மாலை சூடும் வேளையில், தற்போது நடந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்த்து நான் மிகவும் வேதனையடைகிறேன்.

மத்திய, மாநில அரசாங்கங்களிடமிருந்து பெரிய பெரிய நீதியரசர்கள், வக்கீல்களிடமிருந்து நிரந்தர ஜல்லிக்கட்டுக்கு இவ்வளவு C22V7Q1UkAE7hppஉறுதி கூறியபிறகு அதற்கு கெளரவம் கொடுத்து அவர்கள் கூறிய நாள்கள் வரை அமைதி காப்பதுதான் கண்ணியமான செயலாகும்.

சில சமூக விரோதிகள் இவ்வளவு போராடிய உங்கள் உழைப்புகும் முயற்சிக்கும் நீங்கள் சம்பாதித்த நற்பெயருக்கும், உறுதுணையாக இருந்த காவல்துறையினருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதற்கு நீங்கள் இடம் கொடுக்காமல் உடனே அமைதியாக இந்த அறவழிப் போராட்டத்தை முடித்துக்கொள்ளவேண்டும்” என்று கூறியுள்ளார்.

‘மோடியிடம் சொல்லிவிட்டேன்; ஓபிஎஸிடம் பேசிவிட்டேன்..’ – கமல்

‘மோடியிடம் சொல்லிவிட்டேன்; ஓபிஎஸிடம் பேசிவிட்டேன்..’ – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhaasanஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என தமிழக இளைஞர்கள் ஒரு வாரம் போராடி வந்தனர்.

இன்று காலை போலீஸ் தடியடி செய்து கலைத்தனர்.

இதனால் தமிழகம் போர்களம் போல் காட்சியளித்து வருகிறது.

இந்த சம்பவங்கள் குறித்து கமல் கூறியுள்ளதாவது…

இதுவரை பொதுச்சொத்திற்க்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம் அமைதி இழக்கக்கூடாது.

இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும். செய்யும்.

வீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸை. அறவழிப் போராளிகள் ரத்தக் காயம் படுவது இதுவரை நிகழாததல்ல.

அமைதி காக்கும் கடமை உமது. வெகுளாதிருத்தலே விவேகம். சட்டமன்றத்தில் என்ன கூறப்போகிறார்கள் என்று மாணவர் சமுதாயம் காத்திருந்தபோது அவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவேண்டும்?

மாண்புமிகு தமிழக முதலமைச்சரிடம் பேசினேன். முக்கியமான கேள்வியை அவரிடம் எழுப்பினேன்.

அவர் விரைவில் பதில் அளிப்பார். அவர்கள் உங்களைத் திருப்திப்படுத்த ஆவலாக உள்ளார்கள்.

அமைதியாக இருக்கவும். என்னுடைய தொடர்புகளின் மூலம் பிரதமருக்கும் தகவல் தெரிவித்தேன். எனவே அனைவரும் அமைதி காக்கவேண்டும்.

என்று கமல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பதட்டம்… ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி

தமிழகத்தில் பதட்டம்… ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chn policeகடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை முதலே தமிழகம் முழுவதும் உள்ள போராட்டக்களத்தில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து அதிகாலையில் போராட்டத்தை கலைத்து இளைஞர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் சம்பவங்களை தொகுத்துள்ளோம்.

 • திருவல்லிக்கேணியில் போராட்டக்காரர்களின் தாக்குதலைத் தொடர்ந்து வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு
 • சென்னை அவ்வை சண்முகம் சாலையில் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டம் கலைப்பு.
 • மெரினாவில் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
 • மதுரை அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தும் இளைஞர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 • அனைவரும் அவரவர் ஊர்களில் நடக்கும் போராட்டக்களத்திற்கு உடனே வரவும். மாணவருடன் மக்கள் கைகோர்க்கவும் – மக்களுக்கு போராட்டகளம் அழைப்பு.
 • மெரினாவில் உள்ள போராட்டக்காரர்களுக்கு உணவு எடுத்து செல்ல தடை தற்போது மெரினாவில் உள்ள போராட்டக்காரர்களுக்கு கடல் வழியாக படகு மூலம் உணவு எடுத்து வந்து உணவு வழங்கும் பணி தீவிரம்.
 • வலுக்கட்டாயமாக மாணவர்களை அப்புறப்படுத்தியது கண்டனத்திற்குரியது என்று தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.
 • திருச்சியில் 5 நாட்களாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது 5 கோரிக்கைகளை முன் நிறுத்தி போராட்டத்தை வாபஸ் பெற்றனர் இளைஞர்கள்.
 • கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என திருச்சி இளைஞர்கள் அறிவித்துள்ளனர். நெல்லையிலும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர் இளைஞர்கள்.
 • காஞ்சிபுரம் , பரமக்குடி அரியலூர் , சேலம் , பெரம்பலூர் , கருர் ஆகிய உள்ள மாணவர்கள் வெளியேற்றம்.
 • சென்னை ராயப்பேட்டையில் பேரணியாக சென்ற இளைஞர்கள் மீது தடியடி.
 • சென்னையில் பொது மக்கள் கொந்தளிப்பு ஆங்காங்கே பொது மக்ககளும் அமர்ந்து சாலை மறியல்.
 • திருச்சி எம்ஜிஆர் சிலை அருகே நடைபெற்ற போராட்ட களத்திலிருந்து பிரிந்து சென்ற மற்ற பிரிவினர் சாலையில் அமர்ந்து போராட்டம்.
 • மெரினாவில் வலுக்கட்டாயமாக வெளியேற்றபடுவதால் இளைஞர்கள் கடலில் இறங்கி போராட்டம்.
 • சென்னை மெரினாவில் போராட்டக்காரர்கள் போலீசார் மீது மணல், செருப்பு வீச்சு
 • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
 • அலங்காநல்லூர் போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை.
 • சென்னை ராயப்பேட்டையில் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தது போலீஸ்
 • போராட்டத்தின் காரணமாக சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 • மதுரை தமுக்கம் மைதானத்தில் இளைஞர்கள்- காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு
 • சென்னை கடற்கரை பகுதிகளில் கண்ணீர் புகை குண்டு வீசி கலைக்க முயற்சி
 • சேலம் சிறை பிடிக்கப்பட்டிருந்த ரெயிலை அதிரடியாக போலீஸ் மீட்டது ரெயிலின் முன்பிருந்த ஆர்பாட்டக்காரர்கள் விரட்டியடிக்கப் பட்டனர்.
 • ஆனாலும் போராட்டத்தை நடத்துவோம் என மாணவர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

 

More Articles
Follows