பாஜக-வினர் ஏன் மெர்சலை அரசியலாக்குகிறார்கள்? – எஸ்.ஏ.சந்திரசேகர்

பாஜக-வினர் ஏன் மெர்சலை அரசியலாக்குகிறார்கள்? – எஸ்.ஏ.சந்திரசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sac

மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஜிஎஸ்டி வசனங்கள் பாஜ கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இதற்கு அந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து பாஜக.வினருக்கு பல்வேறு தரப்பினரும் அவர்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதன்முறையாக விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்ஏ.சந்திரசேகர் அவர்கள் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டின் குடிமகனாக நான் பேசுகிறேன். கருத்து சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம்.

அரசியல் தொடர்புள்ளவர்கள்தான் சென்சார் வாரியத்திலும் உள்ளனர். அவர்கள்தான் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்துள்ளனர்.

ஆனால், சென்சார் அனுமதித்த ஒரு படத்தில் காட்சிகளை நீக்க ஆளும் கட்சி சொல்கிறது. அவர்கள் ஏன் இதை அரசியலாக்குகிறார்கள்? என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Dont know Why BJP making Mersal in Political issue says SA Chandrasekar

இந்தியளவில் விவாதிக்கப்படும் மெர்சல் சர்ச்சை; ராகுல்-ஸ்டாலின் ஆதரவு

இந்தியளவில் விவாதிக்கப்படும் மெர்சல் சர்ச்சை; ராகுல்-ஸ்டாலின் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ragul gandhi stalinஜிஎஸ்டி வசனங்களால் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் இந்தியளவில் பிரபலமாகியுள்ளது.

இந்த விவகாரம் இணையத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ட்விட்டரில் #MersalVsModi மற்றும் #TamiliansVsModi என்ற ஹேஷ்டாக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் மெர்சலுக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் அவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதில் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகக் குறிப்பிட்டு ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

அதில்…

‘மிஸ்டர் மோடி, திரைப்படம் என்பது தமிழ் கலாசாரம் மற்றும் மொழியின் பெருமையைப் பிரதிபலிப்பதாகும்.

தமிழர்களின் பெருமையை மதிப்பிழக்கச் செய்ய முயல வேண்டாம்’ என பதிவிட்டுள்ளார்.

இவரைப்போல் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் தன் ஆதரவு கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில்… கருத்து சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும்.

விமர்சனத்தை முடக்க நினைக்கும் பாஜகவின் முயற்சி, ஜனநாயக விதிகளுக்கு முரணானது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi and MK Stalin support for Mersal movie

எம்ஜிஆர் பேரன் நடிப்பில் ஜல்லிக்கட்டு போராட்டம் சினிமாவாகிறது

எம்ஜிஆர் பேரன் நடிப்பில் ஜல்லிக்கட்டு போராட்டம் சினிமாவாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MGR grandson Ramachandran in WhatsApp movieஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் SPK Films ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் & செல்வ குமார் இணைந்து தயாரிக்கும் படம் தான் ‘வாட்ஸ் அப்’.

இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளின் தம்பி மகள் சுதா விஜயகுமாரின் மகன் தான் இந்த வி.ராமச்சந்திரன்.. இவருக்கு தன்னுடைய பெயரையே சூட்டியதும் கூட எம்.ஜி.ஆர் தான்.

இப்படத்தில் ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தீப்தி நடிக்கிறார்.

இவர்கள் தவிர ‘அஞ்சல்’ மோகன் – ஜீவிதா, அர்ஜுன் – சாட்ரியா , சங்கர் விஜய் – ரக்ஷிதா, காதல் சுகுமார் – லாலித்தியா என இன்னும் நான்கு ஜோடிகள் நடிக்கின்றனர்.

இயக்குனர் ரஷீத் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் JV இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த வருட துவக்கத்தில் தமிழகத்தை மட்டுமல்லாமல் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஆறு இளைஞர்கள், எங்கிருந்தோ வந்த ஒரு தனியார் அமைப்பு தங்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய முனைவதை கண்டு பொங்கி எழுகின்றனர்..

அலங்காநல்லூரில் அவர்கள் போராட்டத்தின் வீச்சு குறைவாக இருக்கவே, போராட்டக்களத்தை சென்னை மெரீனா பீச்சுக்கு மாற்றுகின்றனர்.

அதன்பின் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.. வரும் நவம்பர் -15ல் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. உடுமலை, பொள்ளாச்சி, மூணாறு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

தொழிநுட்ப கலைஞர்கள் விபரம்

இயக்கம் : A.R. ரஷீத்

இசை : JV

ஒளிப்பதிவு : பெட்ரிக்

தயாரிப்பு : ஷஜினா ஷஜின் மூவிஸ் & SPK Films சார்பாக ஷாஜகான் & செல்வ குமார்.

கபாலி சாதனையை பைரவா முறியடிக்காமல் மெர்சல் முறியடித்தது எப்படி.?

கபாலி சாதனையை பைரவா முறியடிக்காமல் மெர்சல் முறியடித்தது எப்படி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

How Mersal beat Kabali records instead of Bairavaaஓரிரு தினங்களுக்கு முன் அக். 18ல் விஜய் நடித்த மெர்சல் படம் ரிலீஸ் ஆனது.

இப்படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ. 1.5 கோடி வசூலை ஈட்டி கபாலி சாதனைகளை முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்தாண்டு 2017 தொடக்கத்தில் பொங்கல் சமயத்தில் விஜய்யின் பைரவா படம் வெளியானது.

ஆனால் 2016ல் வெளியான கபாலி சாதனையை பைரவா முறியடிக்காமல் விட்ட சாதனையை மெர்சல் மட்டும் எப்படி முறியடித்தது? என்ற சந்தேகம் பல பேருக்கு வந்திருக்கலாம்.

2017ல் ஜீலை மாதம் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமுல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து தமிழக அரசின் கேளிக்கை வரியும் அமுலுக்கு வந்தது.

இதனால் டிக்கெட் விலை ரூ. 40-50 வரை கடுமையாக உயர்ந்துவிட்டது.

அதன்பின்னரே மெர்சல் படம் வெளியானது.

எனவே கபாலி சாதனையை மெர்சல் முறியடிக்க மத்திய, மாநில அரசுகளின் வரியும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

How Mersal beat Kabali records instead of Bairavaa

சினிமாவுக்கு கருத்து சுதந்திரம் கிடையாதா? மெர்சல் விவகாரத்தில் நடிகர் சங்கம் அறிக்கை

சினிமாவுக்கு கருத்து சுதந்திரம் கிடையாதா? மெர்சல் விவகாரத்தில் நடிகர் சங்கம் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadigar Sangam support in Mersalவிஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தில் பெற்றுள்ள ஜிஎஸ்டி வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள்.

இதனால் தமிழக அரசியலிலும் சினிமா உலகிலும் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தற்போது ‘மெர்சல்’ திரைப்படத்தில் வரும் கருத்துகள் வசனங்கள் அனைத்தும் சில அரசியல் அமைப்புகள் பத்திரிகைகள் ஊடகங்கள், இணைய தளங்கள், சமூக வலைதளங்கள் மூலமாகவும் விமர்சித்து வருபவை தான்.

ஒரே நாட்டில் அவர்களுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் சினிமா ஊடகத்திற்கும் கலைஞர்களுக்கும் கிடையாதா?

மத்திய அரசால் நிர்வாகிக்கப்படும் தணிக்கைக்குழு அதற்கான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனுமதியளித்த பின் வெளியிடப்படும் திரைப்படங்களை தனி நபர்களின் விமர்சனங்களுக்காக மாற்றியமைப்பதோ அல்லது திரையிடாமல் தடுப்பதோ கருத்து சுதந்திரத்தை கேள்விக் குறியாக்குகிறது.

தணிக்கை செய்யப்பட்டு வெளி வந்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் உள்ளவைகளை யாருக்காகவும் நீக்கக் கூடாது என்பதும் இது போன்ற செயல்கள் பிற்காலத்தில் பல பெரிய பிரச்சினைகள் உருவாக காரணமாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nadigar Sangam support in Mersal

ரஜினிக்காக ரூ.12 கோடி செலவில் செட் அமைத்த ஷங்கர்

ரஜினிக்காக ரூ.12 கோடி செலவில் செட் அமைத்த ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shankar spend Rs 12 crores for Rajini song in 2point0சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய்குமார் ஆகியோர் நடித்துள்ள 2.0 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, லைக்கா நிறுவனம் ரூ. 400 கோடி செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது.

சில தினங்களுக்கு முன் இப்படத்தில் இடம் பெறவுள்ள ஒரு பாடலை படமாக்கவுள்ளதாக ஷங்கர் தெரிவித்திருந்தார்.

தற்போது அந்த பாடலுக்கான செலவு பற்றிய தகவல்கள் வந்துள்ளது.

கிட்டதட்ட ரூ. 12 கோடி வரை அந்த பாடலுக்கு செலவு செய்திருக்கிறார்களாம்.

இப்பாடலுக்கு கலை இயக்குநர் முத்துராஜ் பணியாற்றியிருக்கிறார்.

வருகிற அக்டோபர் 27ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடைபெறவுள்ளது.

Shankar spend Rs 12 crores for Rajini song in 2point0

More Articles
Follows