ஆச்சரியங்கள் நிறைந்த ரஜினியின் ‘கபாலி’ ட்ராக் லிஸ்ட்..!

Here's the full track list of Rajinikanth's Kabaliகலைப்புலி தாணு தயாரிப்பில், முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி.

ரஞ்சித் இயக்கியுள்ள இப்படம் ஜூலை மாதம் உலகமெங்கும் 5000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பாடல்கள் ஜூன் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியாகவுள்ளது.

பொதுவாக ரஜினி படம் என்றால், அதில் பிரபல இசையமைப்பாளர்கள், பாடகர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள்.

ஆனால் இந்த ட்ராக் ட்லிஸ்ட்டில் அந்த மரபுகள் உடைத்தெறியப்பட்டுள்ளன என்றே கூறலாம்.

வைரமுத்து, எஸ் பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

இளையராஜா இசையமைத்த வீரா படத்துக்குப் பிறகு, தேவா அல்லது ஏ ஆர் ரஹ்மான் மட்டுமே ரஜினி படங்களுக்கு இசையமைத்து வருகின்றனர்.

இடையில் வந்த குசேலனுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். இப்போது முதன்முறையாக கபாலி படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இதில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் பல ஆச்சரியங்கள் நிறைந்த ட்ராக் லிஸ்ட் இதோ..

 

  • உலகம் ஒருவனுக்கு…..

கபிலன் எழுதியுள்ள இப்பாடலை அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா ஆகியோர் பாடியுள்ளனர். தமிழ் ராப் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.

 

  • மாய நதி..

பாடல் ஆசிரியர் : உமா தேவி

பாடியவர்கள் : அனந்து பிரதீப் குமார், ஸ்வேதா மேனன்

 

  • வீரா துறந்தாரா…

பாடல் ஆசிரியர் : உமா தேவி

பாடியவர்கள் : கானா பாலா, லாரன்ஸ் ஆர், பிரதீப் குமார்

 

  • வானம் பார்த்தேன்…

பாடல் ஆசிரியர் : கபிலன்

பாடியவர்கள் : பிரதீப் குமார்

 

  • நெருப்புடா…

நடுவில் இடம் பெறும் வசனங்களை ரஜினிகாந்த் எழுதியிருக்கிறார்.

பாடல் எழுதி பாடியிருப்பவர் : அருண்ராஜா காமராஜ்

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post