தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்திருந்தார்.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘இந்தியன் 2’ குழு தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரண் வைத்து ‘RC15’ படத்தையும் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி,அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த், ஜெயராம், நவீன் சந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் ‘RC15’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளார்.
மேலும், இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குதிரை மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “என்னை மீண்டும் சேணத்தில் வைத்திருக்கும் பயணம் RC15 நோக்கி” என்று எழுதி இருந்தார்.
A journey that has me back to back in the saddle! Towards #RC15
https://t.co/spv0c18y9R
Director Shankar back on the sets of ‘RC15’