பாலாவின் அடுத்த பட நாயகன்… சிம்பு? யுவன்?

பாலாவின் அடுத்த பட நாயகன்… சிம்பு? யுவன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director balaதாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகும் படம் என்ன? நாயகன் யார்? என்ற கேள்விகள் எழுந்தன.

இதில் எதிர்பாராவிதமாக சாட்டை, இளமி படப்புகழ் யுவன் நாயகனாக நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியானது.

இது பிராமணர் சம்பந்தப்பட்ட கதை என்றும் அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இதனிடையில் சிம்பு வைத்து பாலா தன் அடுத்த படத்தை இயக்குவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இதனால் பாலா ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

அம்மாவுக்கு விஜய்-சூர்யா-சிவகார்த்திகேயன் அஞ்சலி; விக்ரம் இரங்கல்!

அம்மாவுக்கு விஜய்-சூர்யா-சிவகார்த்திகேயன் அஞ்சலி; விக்ரம் இரங்கல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamil cinema celebrities homeage to jayalalithaமுதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இந்தியாவையே கண் கலங்க வைத்துள்ளது.

அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இன்னும் அந்த துயரத்தில் இருந்து மீளவில்லை.

விஜய், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நேரில் சென்று கண்கள் கலங்கியபடியே அஞ்சலி செலுத்தினர்.

ரஜினிகாந்த் குடும்பத்துடன் தனுஷ் சென்று அஞ்சலி செலுத்தினார்.

சீயான் விக்ரம் அமெரிக்காவில் இருப்பதால், நேரில் வரமுடியாமல் கடிதம் மூலம் தன் இரங்கலை தெரிவித்துள்ளார். அதில்…

“தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த செய்தி கேள்விப்பட்டவுடன் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

அவர் ஒரு சிறந்த தலைவர் மட்டுமல்ல, என்னைப்போன்ற பலகோடி ரசிகர்களின் கண்களுக்கு நட்சத்திரமாகவும் திகழ்ந்துள்ளார்.

அவரது ஆளுமை, உள் வலிமை என அனைத்தையும் தவறவிட்டோம். அவருடைய இழப்பு தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லை. இந்தியாவிற்கே பெரிய இழப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரே படத்தில் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் தனுஷ்

ஒரே படத்தில் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush parentsமுன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் படங்களை தயாரித்தும், இயக்கியும் வருகிறார்.

இவர் முதன்முதலில் இயக்கும் பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரண் நாயகனாக நடிக்கிறார்.

தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு முதன் முதலாக இயக்குனராக வாய்ப்பளித்து அப்படத்தை தயாரித்தவர் ராஜ்கிரண்தான்.

மீனா நாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே என்ற அப்படம் 1991ல் வெளியானது.

எனவே, பவர் பாண்டியில் ராஜ்கிரனுக்கு வாய்ப்ப்பளித்து, தன் தந்தைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் இப்படத்தை அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டு தினத்தில் 14-04-2017 வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார் தனுஷ்.

அன்றைய தினம் தனுஷின் அம்மா விஜயலெட்சுமியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் அம்மாவுக்கும் பெருமை சேர்க்கிறார் இந்த தங்கமகன்.

Dhanush gift to his parents by power paandi movie

‘ரஜினியுடன் நடிக்க மறுப்பு; ராணியாக வாழ்வேன்..’ ஜெயலலிதா கடிதம்

‘ரஜினியுடன் நடிக்க மறுப்பு; ராணியாக வாழ்வேன்..’ ஜெயலலிதா கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayalalitha rajiniரஜினி மற்றும் ஸ்ரீப்ரியா நடித்த பில்லா படத்தை பாலாஜி தயாரித்திருந்தார்.

எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்த இப்படம் 1980ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆனது.

இப்படத்தில் முதலில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஜெயலலிதாவைதான் கேட்டார்களாம். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக 35 வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா எழுதிய கடித்த்தில் அவர் தெரிவித்திருப்பதாவது…

பாலாஜி இந்தியளவில் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவர். ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்.
ஆனால் எனக்கு நடிக்க விருப்பமில்லை.

இது போன்று பல நல்ல நல்ல ஆபர்கள் வந்துக் கொண்டுதான் உள்ளன.

கடவுள் தயவால் காலம் முழுவதும் ராணி போல வாழ்வதற்கான வசதி உள்ளது. என்று தன் கைப்பட எழுதியுள்ளார்.

Flashback : Jayalalitha refuse to act with Rajinikanth

அந்த கடிதம் இதோ…

 

jaya letter about rajini

 

jaya letter balaji

சோ ராமசாமி மரணம்; ரஜினி-சிவகுமார்-சூர்யா-விஷால் அஞ்சலி

சோ ராமசாமி மரணம்; ரஜினி-சிவகுமார்-சூர்யா-விஷால் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

choramasamy passes away rajini suriya last repectதமிழக முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட சமாதியின் ஈரம் காய்வதற்குள் அடுத்த மரணச் செய்தி தமிழகத்தை இன்று அதிகாலையில் தாக்கியது.

அதிகாலை 3.30 மணியளவில் பிரபல நடிகரும், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியருமான சோ ராமசாமி காலமானார் என்ற செய்தி வந்தது.

அரசியல் உலகில் இவரை கிங் மேக்கர் என்றே சொல்வார்கள்.

200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சோ ராமசாமி, 4 திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

பத்திரிகை துறை சேவைக்காக வீரகேசரி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்

இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் கூறியதாவது… “பொய் சொல்லாமல், யாருக்கும் பயப்படாமல் வாழ்ந்தவர் சோ ராமசாமி” என்றார்.

இதனையடுத்து, சிவகுமார், சூர்யா, கார்த்தி மற்றும் விஷால் ஆகியோரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சிவகுமார் கூறியதாவது…

“மிகப்பெரிய மேதையான சோ படங்களில் கோமாளி வேடத்தில் நடிப்பது எனக்கு அப்போது வருத்தத்தை அளித்தது.

அதிக பணம் வருவதால் நடிப்பை துறந்து; பத்திரிகை தொழிலை மட்டும் செய்தவர் சோ.” என்றார்.

ஜெயலலிதாவுடன் அதிக நட்பு பாராட்டிய சோ, ஜெயலலிதா இறந்த மறுநாளே இவரும் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிற்பகல் 4 மணிக்கு சோ ராமசாமியின் உடல் பெசன்ட் நகர் பீச்சில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

அதிகாலையிலேயே அம்மாவுக்கு அஞ்சலி செலுத்திய அஜித்

அதிகாலையிலேயே அம்மாவுக்கு அஞ்சலி செலுத்திய அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith family last respect to amma jayalalithaதமிழக மக்களால் அம்மா என்று அழைக்கப்பட்டவர் முதல்வர் ஜெயலலிதா.

இவர் நேற்று முன்தினம் (டிச. 5, 2016) அன்று இரவு காலமானார்.

இவரது மறைவுக்கு இந்தியாவே அஞ்சலி செலுத்தியது எனலாம்.

அதன்பின்னர் நேற்று மாலை எம்ஜிஆர் சமாதி அருகே, இவரது உடல் புதைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே தனது மனைவி ஷாலினி மற்றும் மச்சான் ரிச்சர்ட் ஆகியோருடன் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் சோ ராமசாமி மரணச் செய்தி கேட்டதும், அவரது உடலை பார்க்க அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows