சீனுராமசாமியை முட்டாள் என நினைத்தேன்… பாலா பரபரப்பு பேச்சு

சீனுராமசாமியை முட்டாள் என நினைத்தேன்… பாலா பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director balaவிஜய்சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய தர்மதுரை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாலா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது…

“பாலுமகேந்திராவிடம் இருந்துதான் நான், சீனுராமசாமி எல்லாம் வந்தோம்.

எனக்கு முன்பே அவன் பட இயக்க ஆரம்பித்துவிட்டார். அதனையறிந்த நான்… அவன் முட்டாபய ஆச்சே. அவன் இயக்குகிறானா? என்றுதான் நினைத்தேன்.

எப்போதும் பார்த்தாலும் சினிமா சினிமா என்றே கழுத்தை அறுப்பான்.

ஏனென்றால் சினிமாவை அந்தளவு நேசிக்கிறார் சீனு. அவரின் முந்தைய படங்களை போல் இந்த படமும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.” என்றார்.

‘காந்தியார் போல் நடந்தேன்…’ ட்விட்டரில் கமல் தகவல்

‘காந்தியார் போல் நடந்தேன்…’ ட்விட்டரில் கமல் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassanதன் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கிறார் கமல்ஹாசன்.

இதனால் சபாஷ் நாயுடு படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தாமதம் ஆகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் தெரிவித்திருப்பதாவது…

“ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் பகிர ஓர் நற்செய்தி. இன்று எழுந்து நடந்தேன்.

காந்தியார் போல தோள் தாங்க இருவருடன்தான் என்றாலும் முன்னேற்றம்.” என்று தெரிவித்துள்ளார்.

அஜித் பார்முலாவில் தனுஷின் புதிய படம்.?

அஜித் பார்முலாவில் தனுஷின் புதிய படம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushதனுஷ் தனது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனாலும், ஒவ்வொரு படத்தையும் விரைவாக முடித்து கொடுத்து வருகிறார்.

விரைவில் தொடரி, கொடி மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் வெளியாகவுள்ளன.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதனிடையில் மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒரு பைக் ரேஸ் கதையை பற்றிய படமாக உருவாகவுள்ளதாம்.

நடிகர் அஜித் ஒரு பைக் ரேஸர் என்பதும், அவரது தல 57 படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

எம்ஜிஆர்-ரஜினிக்கு அடுத்து விஜய்சேதுபதி தான்…

எம்ஜிஆர்-ரஜினிக்கு அடுத்து விஜய்சேதுபதி தான்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiவிஜய்சேதுபதி நடித்துள்ள தர்மதுரை படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் இப்பட தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது…

விஜய்சேதுபதிக்கு எந்த கேரக்டர் என்றாலும் செட்டாகும்.

இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்தார்.

இதில் காலேஜ் பையனாக நடித்துள்ளார்.

கிளீன் ஷேவ் செய்தால் ஒரு கெட்டப். தாடி வைத்தால் ஒரு முரட்டு லுக் இருக்கும்.

அது ரஜினிக்கு பிறகு இவருக்கு தான் செட்டாகிறது.” என்றார்.

அதன்பின்னர் திருப்பூர் சுப்ரமணியம் பேசியதாவது…

எம்ஜிஆர், சிவாஜி போன்ற நாயகர்கள் நிஜ வாழ்வில் நல்ல பண்பாளர்களாக இருந்தார்கள்.

அந்த குணம் விஜய்சேதுபதியிடம் உள்ளது.” என்றார்.

விஜயசாந்தி இடத்தை நிரப்புவாரா சோனியா அகர்வால்..?

விஜயசாந்தி இடத்தை நிரப்புவாரா சோனியா அகர்வால்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soniaஅறிமுக நாயகன் சந்தோஷ் கண்ணா நாயகனாக நடிக்க, டூரிங் டாக்கீஸ் பட நாயகி காயத்ரி மற்றும் ஓம் சாந்தி ஓம் பட புகழ் கௌதமி செளத்ரி ஆகியோர் நடித்துள்ள படம் ‘சாயா’.

இதில் வன இலாகா அதிகாரியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.

விஜயசாந்தியை போல ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் அனல் பறக்க செய்திருக்கிறாராம்.

பாலாசிங், மூகாம்பிகை ரவி, கராத்தே ராஜா ஆகிய மூவரும் வில்லன்களாக மிரட்டியுள்ளனர்.

Y.G. மகேந்திரன் ஆத்மாவின் தந்தையாக நடித்துள்ளார். கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கிராமத்து பஞ்சாயத்தர்களாக ஆர்.சுந்தரராஜன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ‘பாய்ஸ்’ ராஜன், கோவை செந்தில், கொட்டாச்சி, சபீதா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜான் பீட்டர் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்துள்ளார் எஸ். பார்த்திபன்.

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் V.S. சசிகலா பழனிவேல் வழங்க, தயாரித்து இயக்குகிறார் V.S.பழனிவேல். தயாரிப்பு மேற்பார்வையை மதுபாலன் கவனிக்கிறார்.

இப்படம்  ரசிகர்களை பயமுறுத்தாமல், புனிதமான ஆத்மாக்கள் பற்றி பேசும் படமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

விஜய்சேதுபதியுடன் இணைந்த பாலா…. ரசிகர்கள் உற்சாகம்.

விஜய்சேதுபதியுடன் இணைந்த பாலா…. ரசிகர்கள் உற்சாகம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and balaசீனுராமசாமி இயக்கிய தர்மதுரை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் படத்தின் நாயகன் விஜய்சேதுபதி, இதன் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இயக்குனர் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பாலா பேசியதாவது….

விஜய்சேதுபதி மிகவும் யதார்த்தமான நடிகர்.

அவருடைய படங்களைப் பார்த்திருக்கிறேன். மிகச் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருப்பது பெருமை” என்றார்.

இதனை கேட்ட திரளான ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

More Articles
Follows