மெர்சல் படத்தில் விஜய் சொல்லும் மெசேஜ் பற்றி அட்லி

மெர்சல் படத்தில் விஜய் சொல்லும் மெசேஜ் பற்றி அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijayதெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தன் படத்தை இயக்கும் வாய்ப்பை அட்லிக்கு கொடுத்தார் விஜய்.

இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள மெர்சல் படம் தீபாவளி விருந்தாக அமையும்.

இந்நிலையில் மெர்சல் படம் என்ன மாதிரியானது என்பதை அட்லி தெரிவித்துள்ளார்.

விஜய்யை எந்தளவு லவ் பண்ண முடியுமோ? அப்படி ஒரு படம்தான் மெர்சல்.

‘தளபதி’ என்ற கேரடக்டரில் வரும் கிராமத்து தலைவர் விஜய் கேரக்டர் இதுவரை பார்க்காத விஜய் எனலாம்.

இதுவரை அவரது படங்களில் இல்லாத கதைக்களம் இதில் இருக்கும்.

இதில் மக்களுக்கான விழிப்புணர்வு மெசேஜ் ஒன்றும் உள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் படம் தீபாவளி விருந்தாக அமையும்” என தெரிவித்துள்ளார்.

விஜய்-அட்லி 3வது முறையாக இந்த படத்தில் இணைவார்களா.?

விஜய்-அட்லி 3வது முறையாக இந்த படத்தில் இணைவார்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

For third time Vijay and Atlee may join for new projectஅட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள மெர்சல் படம் வருகிற அக். 18ஆம் தேதி தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது.

இப்படம் குறித்து பேசும்போது ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க வேண்டும் என்பது என் கனவுகளில் ஒன்று குறிப்பிட்டு இருந்தார்.

தயாரிப்பாளரும் பட்ஜெட்டும் அதற்கான நட்சத்திரங்களும் அமைந்தால் அந்த வரலாறை திரையில் கொண்டுவருவேன் என தெரிவித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன் பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

பின்னர் சில காரணங்களால் அந்தப்படம் கைவிடப்பட்டது.

ஒருவேளை பொன்னியின் செல்வன் படத்தை அட்லி இயக்கும் சூழ்நிலை வந்தால் விஜய் நிச்சயம் ஒப்புக் கொள்வார் என்று நம்பலாம்.

காரணம் இருவருக்குமான கெமிஸ்ட்ரி நாம் அறிந்த ஒன்றுதான்.

For third time Vijay and Atlee may join for new project

மெர்சல் பட 3 நாயகிகளில் பவர்புல் யார்.? அட்லியே ஓபன் டாக்

மெர்சல் பட 3 நாயகிகளில் பவர்புல் யார்.? அட்லியே ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atlee talks about Mersal heroinesராஜா ராணி மற்றும் தெறி படங்களை இயக்கியவர் அட்லி.

முதல் படத்தில் நயன்தாரா, நஸ்ரியாவும், தெறி படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இரண்டு நாயகிகள் இருந்தனர்.

தற்போது இயக்கியுள்ள மெர்சல் படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என 3 நாயகிகள் உள்ளனர்.

இதில் யாருடைய கேரக்டர் பவர்புல்லாக இருக்கும் என அட்லி தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாட்டுக்காக வந்து போகும் கேரக்டர்களில் 3 நாயகிகளும் நடிக்கவில்லை.

ஆனால் நித்யா கேரக்டர் முக்கியத்துவம் பெறும். அது அவருக்கு பொருந்திவிட்டது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

Atlee talks about Mersal heroines

விக்ரம்-தனுஷ் உடன் நடித்த அனுபவம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்

விக்ரம்-தனுஷ் உடன் நடித்த அனுபவம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aishwarya rajeshசின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை படத்துக்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

தற்போது முன்னணி நடிகர்களான விக்ரம் மற்றும் தனுஷ் ஆகியோருடன் நடித்து வருகிறார்.

கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் உடனும் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் தனுஷ் உடனும் நடித்து வருகிறார்.

இந்த இரு நடிகர்களுடன் நடித்த அனுபவங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது…

“எனக்கு வந்த பெரிய படங்களில் முதல்படம் துருவநட்சத்திரம்தான்.

இதில் விக்ரம், பார்த்திபன், சிம்ரன், ராதிகா மேடம், இன்னொரு ஹீரோயின் ரீது என அனைத்து கேரக்டர்களுமே படத்தில் முக்கியமாக இருக்கும்.

ஒரு காட்சியில் மூன்று பக்க வசனம் பேசி எமோஷனலாக நடிக்க வேண்டும்.

பெரிய டைரக்டர், பெரிய நடிகர் என்பதால் கொஞ்சம் பதட்டம் இருந்தது. பின்னர் இரண்டு டேக்கிலேயே ஓகே பண்ணிவிட்டேன்.

‘சூப்பரா பண்ணீங்க ஐஸ்வர்யா’ என்று விக்ரம் சார் பாராட்டினார்.

வேறு எந்த ஹீரோஸ் இப்படி பாராட்வார் என தெரியாது. அவருடைய பாராட்டு மறக்க முடியாது.

அதுபோல் தனுஷ் உடன் வடசென்னை படத்தில் நடித்து வருகிறேன்.

என் கேரக்டரில் முதலில் சமந்தா நடிக்கவிருந்தார். அதன்பின்னர் அமலாபால் வந்தார். இப்போது நான் நடிக்கிறேன்.

என் கேரக்டர் படு லோக்கலாக இருக்கும். இதற்குமுன் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கேரக்டர் வந்திருக்குமா? தெரியாது.

வடசென்னை படம் எனக்கு முக்கியமான படமாக அமையும்.” என்றார்.

Aishwarya Rajesh shares her working experience with Vikram and Dhanush

இனி வருடத்திற்கு 2 படம்; சிவகார்த்திகேயன் முடிவுக்கு என்ன காரணம்.?

இனி வருடத்திற்கு 2 படம்; சிவகார்த்திகேயன் முடிவுக்கு என்ன காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

From 2018 I will try to give 2 movies per year says Sivakarthikeyanதீபாவளி திருநாளையொட்டி வாழ்த்து சொல்ல பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன்.

அந்த சந்திப்பில் அவர் பேசும்போது…

ரெமோ படத்திற்கு பிறகு சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு உங்களை சந்திக்கிறேன்.

உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. வருடத்திற்கு ஏன் ஒரு படங்களை மட்டும் கொடுக்கிறீர்கள்? என ரசிகர்களும் எல்லாரும் கேட்கிறார்கள்.

இனி 2018 ஆண்டு முதல் வருடத்திற்கு நிச்சயம் 2 படங்களை கொடுப்பேன்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். உங்கள் குழந்தைகளை பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பாக வெடிக்க சொல்லுங்கள்.” என்று பேசினார்.

From 2018 I will try to give 2 movies per year says Sivakarthikeyan

விஜய் பட புக்கிங்கை பார்த்து மெர்சலான விஷால்.? ரிலீஸ் தடை நீக்கம்

விஜய் பட புக்கிங்கை பார்த்து மெர்சலான விஷால்.? ரிலீஸ் தடை நீக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and vishalசினிமா டிக்கெட்டுக்கு தமிழக அரசால் கேளிக்கை வரி விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.

கூடுதல் கேளிக்கை வரி காரணமாக, திரைக்கு வர இருந்த புதிய படங்களை பட அதிபர்கள் சங்கம் வெளியிடாமல் நிறுத்தி வைத்தது.

இதற்கிடையே கூடுதலாக விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் திரைப்பட உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்நிலையில் இன்று முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் பேசியதாவது…

* நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தை விட பொதுமக்கள் அதிகமாக கொடுக்க வேண்டாம்.

* அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் அளிக்கலாம்

* திரையரங்குகள் அரசு சார்பில் கண்காணிக்கப்படும்

* கேளிக்கை வரி விதிப்பு 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைப்பு

* திரையரங்குகளில் திண்பண்டங்கள், குளிர்பானங்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது.

குறைந்தபட்ச சில்லறை விலைக்கு மட்டுமே விற்க வேண்டும்.

* தீபாவளிக்கு விஜய்யின் மெர்சல் படம் ரிலீசாவது உறுதியாகி உள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகள் ஒரு புறம் இருந்தாலும், மெர்சல் படத்திற்கு டிக்கெட்டுகள் முன் பதிவுகள் முன்பே தொடங்கிவிட்டது.

இன்று முதல்வரை சந்திக்கும் முன்பு சில விதிமுறைகளை தியேட்டர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவித்து இருந்தார் விஷால் என்பதை பார்த்தோம்.

இதற்கு பின்னணியில் மெர்சல் உள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

More Articles
Follows