சமந்தா நிச்சயதார்த்தம் குறித்து எக்ஸ் லவ்வர் சித்தார்த்..?

சமந்தா நிச்சயதார்த்தம் குறித்து எக்ஸ் லவ்வர் சித்தார்த்..?

samantha siddharthசில வருடங்களுக்கு முன்பு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட காதல் சித்தார்த்-சமந்தா காதல்தான்.

ஆனால் இவர்களின் காதல் ப்ரேக் அப் ஆனது.

அதன்பின்னர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலிக்கத் தொடங்கினார் சமந்தா.

நேற்றுமுன் தினம் (ஜனவரி 29) இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் ஒருவருடத்திற்கு முன் போட்ட ட்விட்டரில் பதிவிட்ட பதிவை எடுத்து வலைத்தளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அவர் சும்மா இருந்தாலும் இந்த ரசிகர்கள் விடமாட்டார்கள் போலவே…

Did Siddharth tweet about Samantha engagement?

அந்த ட்வீட் இதோ…

‘நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில இருக்கிற ஒரு தெருநாய்க்கு கெடைக்கணும்னு எழுதியிருந்தா அத யாராலயும் மாத்த முடியாது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

samantha sidharth nichayam

ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்களை கௌரவித்த சிவகார்த்திகேயன்

ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்களை கௌரவித்த சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan ரெமோ படத்தின் மாபெரும் வெற்றி மூலம் முன்னணி நடிகர்களின் வரிசையில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் அவரை கௌரவப்படுத்தும் விதமாக Youth Icon விருது ஒரு நிகழ்ச்சியில் அவருக்கு வழங்கப்பட்டது.

இவ்விருதை பெற்றவுடன் ‘ஜல்லிக்கட்டு தொடர்பான அறவழிப் போராட்டங்களை நடத்தி இந்த உலகையே தமிழ்நாட்டு பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிட்டனர் நம் இளைஞர்கள்.

அந்த புரட்சி இளைஞர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan dedicated his Youth Icon award to Jallikattu Protest Students

அரசியலில் குதிக்கிறாரா பாலிவுட் கிங் ஷாரூக்கான்?

அரசியலில் குதிக்கிறாரா பாலிவுட் கிங் ஷாரூக்கான்?

Raees Shahrukh khanபாலிவுட் கிங் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் ஷாரூக்கான்.

இவர் நடிப்பில் உருவான ரயிஸ் (RAEES) என்ற படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது.

இதன் வெற்றிவிழா கொண்டாட்டத்தில் ஷாரூக்கான் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது…

“ரயிஸ் படத்தில் அரசியல் காட்சிகள் இருந்தன.

அவை வெறும் காட்சிகள் மட்டுமே. எனக்கு அரசியல் ஆசை இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன்” என பேசினார்.

Shahrukh khan reaction to Raees Movie and Politics entry

மோகன்லால்-மம்மூட்டி சாதனைகளை நெருங்கும் சூர்யா

மோகன்லால்-மம்மூட்டி சாதனைகளை நெருங்கும் சூர்யா

mammootty-mohanlal-movies-10அண்மைகாலமாக தமிழ் சினிமாவில் வெற்றிப் பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளிவருகிறது.

நிறைய படங்கள் வெளியானாலும் அதில் ஒரு சில படங்களில் மட்டுமே முதல் பாகத்தின் தொடர்ச்சி இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறது.

அதில் மிகமுக்கியமான படம் சிங்கம் 3.

இதுபோல் மலையாள சினிமாவிலும் சில படங்கள் வெளியாகியுள்ளதாம்.

மோகன்லால் நடித்த நாடோடிகள் படம் 3 பாகங்கள் வெளியாகியுள்ளதாம்.

அதுபோல் மம்மூட்டி நடிப்பில் உருவான ஒரு சிபிஐயின் டைரி குறிப்பு என்ற படமும் நான்கு பாகங்களாக உருவாகியுள்ளதாம்.

தற்போது சூர்யாவின் சிங்கம் படமும் அதே வரிசையில் பயணிப்பதால் மோகன்லால் மற்றும் மம்மூட்டியின் சாதனைகளை நெருங்கியுள்ளார்.

இவரின் சி3 படமும் வெற்றிப் பெற்று இதன் நான்காம் பாகம், ஐந்தாம் பாகம் வெளியானால் சூர்யா இந்திய அளவில் சாதனை படைப்பார் என் கூறப்படுகிறது.

Suriya nearing Mohanlal and Mammootty sequel movies record

விஜய்-அஜித்-சூர்யா பற்றி ஒரே வார்த்தையில் சொன்ன க்ரிஷ்

விஜய்-அஜித்-சூர்யா பற்றி ஒரே வார்த்தையில் சொன்ன க்ரிஷ்

singer krishபிரபல பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷ் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

விரைவில் வெளிவரவிருக்கும் சூர்யாவின் சிங்கம் 3 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தன் ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடினார்.

அப்போது வழக்கம்போல், விஜய், அஜித், சூர்யா பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன் என ரசிகர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் கூறியதாவது…

  • அஜித் என்றால் அன்பு
  • விஜய் என்றால் மாணிக்கம்
  • சூர்யா என்றால் டார்லிங்

என்று ஒரே சொல்லில் பதிலளித்தார்.

Singer Krish about Vijay Ajith Suriya

நிவின்பாலி–நட்ராஜ்-பிரகாஷ்ராஜ் இணையும் ‘ரிச்சி’

நிவின்பாலி–நட்ராஜ்-பிரகாஷ்ராஜ் இணையும் ‘ரிச்சி’

Richie movie teamகவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், நிவின் பாலி – நட்ராஜ் சுப்ரமணியம் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படத்திற்கு ‘ரிச்சி’ என்று தலைப்பிடபட்டிருக்கிறது.

ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பை பெற்று வரும் இந்த ‘ரிச்சி’ படத்தில் பிரகாஷ் ராஜ், ‘யு டர்ன்’ படப்புகழ் ஷ்ரதா ஸ்ரீனிவாஸ், ராஜ் பரத் மற்றும் ‘சுட்டக்கதை’ புகழ் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த ‘ரிச்சி’ படத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும் நடித்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் மையப்படுத்தி தான் எங்களின் ‘ரிச்சி’ படத்தின் கதை நகரும். பல எண்ணற்ற யோசனைகளுக்கு பிறகு, நாங்கள் இந்த படத்திற்கு ‘ரிச்சி’ என்று தலைப்பிட்டுள்ளோம்.

‘ரிச்சி’ என்பது நிவின் பாலி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர்.

தமிழில் முதல்முறையாக தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்து இருக்கும் நிவின் பாலி, ஏறக்குறைய 75 சதவீத படப்பிடிப்பு காட்சிகளை நிறைவு செய்து இருக்கிறார்.

வருகின்ற கோடை விடுமுறை நாட்களில் நாங்கள் ‘ரிச்சி’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்.

படத்தின் முதல் காட்சி போஸ்டரையும், டைட்டில் டிசைனையும் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிட நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன்.

Nivin Pauly Natraj and Prakash starring Richie

More Articles
Follows