கடுப்பில் தனுஷ் ரசிகர்கள்; மகிழ்ச்சியில் ஜிவி. பிரகாஷ் ரசிகர்கள்

கடுப்பில் தனுஷ் ரசிகர்கள்; மகிழ்ச்சியில் ஜிவி. பிரகாஷ் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)முதன்முறையாக தனுஷை இயக்குகிறார் கவுதம் மேனன், நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்த நிமிடமே தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

இப்படத்திற்கு எனை நோக்கி பாயும் தோட்டா என்று தலைப்பிட்டு ரசிகர்களை மேலும் உற்சாகமாக்கினர்.

ஆனால் வருடங்கள் செல்ல செல்ல… அந்த படம் எப்போது ரிலீஸ்? என்பதே கோலிவுட்டின் பட்டிமன்ற தலைப்பானது.

கிட்டதட்ட 3 வருடத்திற்கு பிறகு ஒரு வழியாக நாளை செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீசாகும் என கௌதம் மேனன் அறிவித்தார்.

ஆனால் கடன் கொடுத்தவர் நீதிமன்றத்தை நாடி படத்திற்கு தடை கேட்டனர். இதன் காரணமாக படம் மீண்டும் தள்ளிப் போனது.

இதனையடுத்து அடுத்த வாரம் வெளியாகவிருந்த ‛சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் நாளை ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜிவி. பிரகாஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

‛பிச்சைக்காரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சசி இயக்கியுள்ள இப்படத்தில் ஜிவி. பிரகாஷ் பைக் ரேஸராகவும், சித்தார்த் டிராபிக் போலீசாகவும் நடித்துள்ளனர்.

இறுதிகட்ட படப்பிடிப்பில் சிபிராஜ் நடித்து கொண்டிருக்கும் “வால்டர்”

இறுதிகட்ட படப்பிடிப்பில் சிபிராஜ் நடித்து கொண்டிருக்கும் “வால்டர்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)சிபிராஜ் நடிக்கும் கொண்டிருக்கும் “வால்டர்” திரைப்பாட்த்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்க உள்ளது.

சிபிராஜ் நடிப்பில் “வால்டர்” திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ஷிரின் காஞ்வாலா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்னின்றனர். தற்போது இவர்கள் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் சென்னையில் கலந்து கொள்ளவுள்ளனர்.

11:11 நிறுவனத்தின் சார்பாக இப்படத்தை டாக்டர் பிரபு திலக் தயாரித்து வருகிறார்.
படம் பற்றி இவர் கூறியதாவது,….

“இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் வெற்றிகரமாக நடந்துள்ளது. திட்டமிட்டபடி இப்படத்தின் வேலைகள் சரியாக சென்று கொண்டிருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் சென்னையில் துவங்கி முழுவதையும் அங்கேயே முடிக்க திட்டமிட்டுள்ளோம்.” அதுமட்டுமல்லாமல் இப்படம் நல்ல வடிவில் சரியாக சென்று கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்ட தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் கூறும்போது, “இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பில் பங்கு பெறுவது எங்கள் குழுவிற்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. மேலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் பாவா செல்லதுரை இப்படத்தில் இணைந்திருப்பது எங்களுக்கு கூடுதம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் இயக்குனர் அன்பரசனைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் பொழுது, “நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, ஆரம்பம் முதல் இறுதிவரை இப்படத்தின் கதையை சரியாக திட்டமிட்டுள்ளார் இயக்குனர் அன்பரசன். இப்படத்தின் முக்கியக்காட்சிகள் கும்பகோணத்தில் சிறப்பான முறையில் படமாக்கப் பட்டுவிட்டது. தற்போது இப்படத்தை முழுவதையும் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.”

“வால்டர்” விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம். இப்படத்தில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். “வால்டர்” என்ற தலைப்பிலேயே பெருவாரியான பார்வையாளர்கள் இதை கணித்திருப்பார்கள். சிபிராஜின் தந்தை சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றியடைந்த “வால்டர் வெற்றிவேல்” படத்தின் தலைப்பின் ஆதர்ஷம் தான் இந்த “வால்டர்”. “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தின் நாயகி ஷிரின் இப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை 11:11 நிறுவனத்தின் சார்பாக டாக்டர் பிரபு திலக் மற்றும் சுருதி திலக் தயாரித்து வருகின்றனர்.

அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘எஃப் ஐ ஆர்’

அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘எஃப் ஐ ஆர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectசுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ ஆனந்த் ஜாய் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ‘எஃப் ஐ ஆர்’ | விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் நடிக்கின்றனர்.

‘அடங்கமறு’ வெற்றித் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சின்னத்திரை மெகா தொடர்களின் தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய், தனது ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சார்பாக ‘எஃப் ஐ ஆர்’ மூலம் திரைப்பட தயாரிப்பில் தடம் பதிக்கிறார்.

‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘என்னை அறிந்தால்’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’, உள்ளிட்ட பல படங்களில், சுமார் ஏழு வருடங்கள் தலைமை இணை இயக்குனர் – நிர்வாக தயாரிப்பாளர் என பல பொறுப்புகளில் முன்னணி இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் பணியாற்றிய மனு ஆனந்த், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்து, ‘இன்று நேற்று நாளை’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘ஜீவா’, ‘நீர்பறவை’, ‘முண்டாசுபட்டி’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ உள்ளிட்ட பன்முகப்பட்ட கதைகளத்தை உடைய பல திரைப்படங்களின் மூலமும், தனது அழுத்தமான நடிப்பின் மூலமும், மக்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த விஷ்ணு விஷால், முற்றிலும் புதிய கோணத்தில் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் முக்கியமான – சுவராஸ்யமான வேடங்களில், மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடிக்கின்றனர்.

சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண இஸ்லாமிய இளைஞன், தெளிவாக அறுதியிட்டு கூறமுடியாத ஒரு குழப்பமான சூழ்நிலையில் சிக்கி விடுகிறார். அந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையை முற்றிலும் தலைகீழாக புரட்டிப்போட்டு விடுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதை உணர்வுபூர்வமான காட்சி அமைப்புகளுடன் இந்த அதிரடி-திகில் படம், நடப்பிலிருக்கும் இன்றைய காலச்சூழல்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், அனைத்து ரசிகர்களை ஈர்க்கும் வகையிலும் உருவாகிறது.

இப்படத்தின் முக்கிய வேடங்களில் அமான், பிரவீன் குமார், மாலா பார்வதி, RNR மனோகர், ஷப்பீர், கெளரவ் நாராயணன், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ராகேஷ் பிரம்மானந்தன், பிரவீன் K நாயர், பிரஷாந்த் (itisprashanth), வினோத் கைலாஷ், R ஷ்யாம் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமான முக்கியத்துவம் பெறுவதால், ஒவ்வொரு நடிகரும் இதுவரை தாங்கள் நடித்திராத வித்தியாசமான, புதிய கேரக்டர்களில் வலம் வந்து மக்கள் மனதில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

பி சி ஸ்ரீராமின் உதவியாளராக பல படங்களில் பணியாற்றியவரும், ‘கிருமி’ புகழ் ஒளிப்பதிவாளருமான அருள் வின்சென்ட் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். குறும்படங்கள், இணைய தொடர்கள், திரைப்படங்கள் என அனைத்து தளங்களிலும் இயங்குகின்ற இசையமைப்பாளர் அஷ்வத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

பிரசன்னா ஜி கே படத்தொகுப்பு பொறுப்புகளை ஏற்க, இந்துலால் கவீத் கலை இயக்கத்தை கவனித்து கொள்கிறார்.

ஆடை வடிவமைப்பு பூர்த்தி பிரவீன் வசமும், சண்டை பயிற்சி ஸ்டண்ட் சில்வா வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ ஆனந்த் ஜாய் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் வரவிருக்கும் இப்படத்தின் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றதைத் தொடர்ந்து, இந்த மாதத்தில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கவிருக்கிறது.

தொழிட்நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பாளர் – ஆனந்த் ஜாய்
இயக்குனர் – மனு ஆனந்த்
ஒளிப்பதிவு: அருள் வின்சென்ட்
படத்தொகுப்பு – GK பிரசன்னா
இசை – அஷ்வத்
நிர்வாக தயாரிப்பாளர் – ஷ்ராவந்தி சாய்நாத்
பாடல்கள் – எல் கருணாகரன், மஷூக் ரஹ்மான், பகவதி
ஸ்கிரிப்ட் ஆலோசனை – திவ்யாங்கா ஆனந்த் ஷங்கர்
தயாரிப்பு நிர்வாகம் – ராஜூ வேலாயுதம்

சண்டை பயிற்சி: ஸ்டண்ட் சில்வா
கலை – இந்துலால் கவீத்
ஸ்டைலிஸ்ட் – பூர்த்தி பிரவின்
விஎஃப்எக்ஸ் (ஜெமினி) – ஹரிஹரசுதன்
எஸ்எஃப்எக்ஸ் – எஸ் அழகியகூத்தன்
டப்பிங் – ஹஃபீஸ்
மிக்சிங் – சுரேன் ஜி
இணையதள விளம்பரங்கள்: ஷ்யாம்
போஸ்டர் வடிவமைப்பு: ப்ராதூல் NT
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

“காவல்துறை உங்கள் நண்பன்” படத்தை கைப்பற்றிய லிப்ரா புரடக்க்ஷன்ஸ்!

“காவல்துறை உங்கள் நண்பன்” படத்தை கைப்பற்றிய லிப்ரா புரடக்க்ஷன்ஸ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)சினிமாவில் மிகச் சில படங்களே தான் பேசும் கருத்துகளாலும் , கதையாலும், கவனத்தை ஈர்த்து மக்கள் மனதில் இடம்பெறும். காவல் துறை உங்கள் நண்பன் படம் அப்படியான கவன ஈர்ப்பை கொண்ட ஒரு படைப்பாக உருவாகியுள்ளது. படைப்பாளர் RDM இப்படத்தினை உருவாக்கியுள்ளார். பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக கொண்டது தான் இப்படத்தின் கரு. ஒரு காவல் அதிகாரிக்கும் உணவு கொண்டு சேர்க்கும் டெலிவரி பாய்க்கும் இடையில் உருவாகும் நிகழ்வுகளை பின்னணி களமாக கொண்டு படத்தின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. படத்திற்கு UA சான்றிதழ் பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. ரிலீஸிற்கு முன்பே கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாக படத்தினை லிப்ரா புரடக்க்ஷன்ஸ் கைப்பற்றியுள்ளது.

லிப்ரா புரடக்க்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் கூறியது…
மிகச் சமீப காலங்களில் குறிப்பாக 2019 ஆம் ஆண்டில் சிறு முதலீட்டில் எடுக்கப்படும், அழுத்தமான கதைகள் கொண்ட, நல்ல படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று, வசூலைக் குவித்து வருகின்றன. மேலும் விமர்சகர்களிடமும் நல்ல பாராட்டை பெற்று வருகின்றன.
இம்மாதிரி படங்களே என்னைப் போன்ற தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் லாபகரமானதாகவும் நல்ல பெயரையும் பெற்றுத்தருகின்றன.
“காவல் துறை உங்கள் நண்பன்” படம் மிக அழுத்தமான கதையையும், அதே நேரம் மக்களை ஈர்க்க கூடிய வகையில் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. இப்படத்தினை பார்த்த உடனே இதை எந்த வகையிலும் விட்டுவிடக் கூடாது என முடிவு செய்து விட்டேன். இப்படத்தினை எளிமையும் தத்ரூபமும் கூடியதாகவும், அதே நேரத்தில் அனைத்து மக்களையும் கவரும் வகையிலும் படைத்திருக்கிறார் இயக்குநர் RDM.

காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் சுரேஷ் ரவி நாயகனாகவும் ரவீனா ரவி நாயகியாகவும் நடித்துள்ளார்கள். மைம் கோபி முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை – ஆதித்யா, சூர்யா
ஒளிப்பதிவு – விஷ்ணு ஸ்ரீ
படத்தொகுப்பு – வடிவேல், விமல் ராஜ்
கலை – ராஜேஷ்
தயாரிப்பு – BR Talkies Corporation in association with White Moon Talkies

விநியோகம் – Libra Productions.

படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு பற்றிய விவரங்களை லிப்ரா புரடக்க்ஷன்ஸ் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

ஆரா சினிமாஸ் தயாரிப்பில் சிபி ராஜ் நடிக்கும் “ரேஞ்சர் “

ஆரா சினிமாஸ் தயாரிப்பில் சிபி ராஜ் நடிக்கும் “ரேஞ்சர் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)திரையுலகில் மதிக்கத்தக்க படைப்புகளை தயாரித்தும், விநியோகித்தும், நன்மதிப்பை பெற்ற நிறுவனமான ஆரா சினிமாஸ் தன் அடுத்த படைப்பை தொடங்கியுள்ளது. ஆரா சினிமாஸ் மகேஷ் ஜி தயாரிப்பில் சிபிராஜ் நடிப்பில் “ரேஞ்சர்” படம் விமரிசையாக தொடங்கப்பட்டுள்ளது.

“ஆவ்னி” எனும் புலி பல மனிதர்களை உயிருடன் அடித்து சாப்பிட்ட சம்பவம் நாடு முழுதும் சர்ச்சையை கிளப்பியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவாத்மல் மாவட்டதில் நடைபெற்ற இந்த உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு உருவாகும் படம் தான் “ரேஞ்சர்”

“பர்மா” , “ராஜா ரங்குஷ்கி” “ஜாக்சன் துரை “ போன்ற கவனித்தக்க படங்களை உருவாக்கிய இயக்குநர் தரணிதரன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன், மது ஷாலினி ஆகிய இருவரும் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள்.

தயாரிப்பாளர் ஆரா சினிமாஸ் மகேஷ் ஜி படம் பற்றி கூறியதாவது…
“ரேஞ்சர்” படத்தின் திரைக்கதை வியக்கத்தக்க வகையிலானது. இதுவரை நாம் மனிதர்களை தாக்கும் விலங்குகளை மையமாக கொண்ட படங்கள் நிறைய பார்த்திருப்போம். அவையாவும் கற்பனை களம்களை கொண்டது. ஆனால் ரேஞ்சர் அப்படியானது அல்ல. நம் நாட்டில் நடைபெற்ற நம்பமுடியாத உண்மை சம்பவத்தை, நம்மை பீதியில் ஆழ்த்தும் வகையிலான சம்பவத்தை அடிப்படையாக கொண்டது “ரேஞ்சர்”.

இயக்குநர் தரணிதரன் மிக வித்தியாசமான கதை சொல்லல் மூலம் ரசிகனை கட்டுக்குள் வைக்கும் வித்தை தெரிந்தவர். இப்படத்தில் மிகச்சரியான விதத்தில் திரில்லும், கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த திரைக்கதையை தந்துள்ளார்.
நடிகர் சிபிராஜ் இப்படத்தில் இணைந்தது இப்படத்திற்கு மேலும் ஒரு பலமாக அமைந்துள்ளது. மிகவும் தேர்ந்த கதைகளில் நடித்து வரும் சிபிராஜுக்கு இப்படமும் இன்னும் ஒரு படி மேலே அவரது உயரத்தை கூட்டும்.

இப்படம் ரசிகர்களுக்கு நேரடி பிரமிப்பு அனுபவம் தரும் வகையில் பிரமாண்டமாக தயாராகவுள்ளது. அடர்ந்த காட்டுக்குள் தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேஷ பகுதிகளில் ஷூட்டிங் நடைபெறவுள்ளது. நிறைய சிஜி, VFX காட்சிகள் படத்தில் இடம்பெறுவதால் அதைத் தத்ரூபமாக தர ஹாலிவுட் கலைஞர்கள் இப்படத்தில் பணிபுரிய உள்ளார்கள்.

சிபிராஜ், ரம்யா நம்பீசன், மது ஷாலினி தவிர்த்து மேலும் பல முக்கிய நடிகரகள் இப்படத்தில் பங்குபெற உள்ளார்கள். அதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
பிரபல இசையமைப்பாளர் அரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவை மேற்கொள்ள சிவா நந்தீஸ்வரன் எடிட்டிங் செய்கிறார்.

படத்தின் முன் தாயாரிப்பு பணிகள் தற்போது மிகத்திவீரமாக நடைபெற்று வருகிறது. மிகவிரைவில் படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது.

மூன்று தலைமுறைகள் கடந்தும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் காட்டும் குடும்பத்தினர் !!

மூன்று தலைமுறைகள் கடந்தும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் காட்டும் குடும்பத்தினர் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான், தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இந்த அமைப்பும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான 45-வது துப்பாக்கி சுடுதல் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஆவாரங்குடிபட்டியில் உள்ள புதுக்கோட்டை மகாராஜா துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த 29-ந் தேதி தொடங்கியது.

போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 275-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, பறந்து சென்ற தட்டுகளை துப்பாக்கி தோட்டாக்களால் சுட்டு வீழ்த்தினர். இதில் சிங்கிள் டிராப், டபுள் டிராப், ஸ்கீத் மற்றும் மிக்ஸடு ஆகிய 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

பதக்கங்கள்-சான்றிதழ்கள்

இதில் சர்வதேச வீரரான பிரித்விராஜ் தொண்டைமான் சிங்கிள் டிராப் பிரிவில் 50 தோட்டாக்களுக்கு 49 தோட்டாக்கள் மூலம் பறக்கும் தட்டை சுட்டு வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். இதேபோல டபுள் டிராப் பெண்கள் பிரிவில் புவனா ஸ்ரீ 60 தோட்டாக்களுக்கு 27 தோட்டாக்கள் மூலம் பறக்கும் தட்டை சுட்டு வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். மாநில அளவிலான இந்த போட்டியில் சிங்கிள் டிராப், டபுள் டிராப், ஸ்கீத் ஆகிய 3 பிரிவுகளிலும் அதிக புள்ளிகளை பெற்று ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதேபோல ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் தட்டிச் சென்றது. மிக்ஸடு பிரிவில் அதிக புள்ளிகள் பெற்று சென்னை ரைபிள் கிளப் சாம்பியன் பட்டத்தை பெற்றது.

போட்டிகள் முடிந்ததும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் தேசிய வீரரும், இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகியும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவருமான டி.வி.சீதாராமராவ், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் ரவிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தங்க பதக்கம், வெள்ளி பதக்கம், வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

சுழற்கோப்பை

மேலும் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சிங்கிள் டிராப் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு சுழற்கோப்பையும், ஸ்கீத் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு டி.டி.அப்பாராவ் சுழற்கோப்பையும், டபுள் டிராப் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு நாமஸிகண்ணன் சுழற்கோப்பையும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றதற்கு புதுக்கோட்டை மகாராஜா சுழற்கோப்பையும் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவர் டி.வி.சீதாராமராவ், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் ரவிகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து வழங்கினார்கள்.

இதை ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப்பின் தலைவர் ராஜகோபால தொண்டைமான், பிரித்விராஜ் தொண்டைமான், ராதா நிரஞ்சனி ராஜாயி உள்ளிட்ட சக அணி வீரர், வீராங்கனைகள் இணைந்து பெற்று கொண்டனர். இதில் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ராஜகோபால தொண்டைமான், பிரித்விராஜ் தொண்டைமான், ராதா நிரஞ்சனி ராஜாயி, திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், ஜமீல், பாகிம் மற்றும் ரைபிள் கிளப் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி இ ஓ-வான ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் குடும்பம் மூன்று தலைமுறைகளாக பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. அவரின் மனைவி சரண்யா ராஜசேகர், மகள்கள் அந்த்ரா ராஜசேகர், உத்ரா ராஜசேகர், அவரின் உறவினரான சம்யுக்தா , மற்றும் அவரின் தந்தை கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இந்த துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய பதக்கங்களை வாங்கி இருக்கிறார்கள். மேலும் ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியனும் இப்போட்டியில் கலந்துகொண்டு மெடல்கள் வாங்கி இருக்கிறார். இவர்களில் 11 வயதில் இருந்தே அந்த்ரா ராஜசேகர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் வெற்றிபெற்று மாநில அளவில் மெடல்களை வாங்கி இருக்கிறார். மூன்று தலைமுறைகள் கடந்தும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இக்குடும்பம் ஆர்வம் காட்டி வருவது ஆச்சர்யமளிக்கிறது.

More Articles
Follows