தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் முதல் படமான முண்டாசுபட்டி மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ராம்குமார்.
முதல் படம் காமெடி என்பதால் அடுத்த படமும் காமெடியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ராட்சசன் என்ற மிரட்டல் படத்தை கொடுத்தார். இந்த படமும் பெரியளவில் பேசப்பட்டது.
அப்போது அடுத்ததாக தனுஷை ராம்குமார் இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை சத்யஜோதி தயாரிக்க இருப்பதாக செய்திகள் வந்தன.
ஆனால் இதுவரை அந்த படம் தொடரபாக மற்ற செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.
(இதனிடையில் ராட்சசன் 2 படத்தை இயக்குவார் ராம்குமார் எனவும் பேசப்பட்டது மற்றொரு கதை)
மேலும் நடிகர் தனுஷ் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட மற்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
எனவே தனுஷ் வரும்போது வரட்டும். அதுவரை சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கிவிடலாம் என ராம்குமார் ரெடியாகி வருகிறாராம். விரைவில் அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளதாம்.
Dhanush film director joins with Sivakarthikeyan for his next
