பிரபு-நடிகர் சங்கம் வருத்தம் எதிரொலி; சிவாஜி மணிமண்டபத்தை ஓபிஎஸ் திறக்கிறார்

பிரபு-நடிகர் சங்கம் வருத்தம் எதிரொலி; சிவாஜி மணிமண்டபத்தை ஓபிஎஸ் திறக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Deputy CM Panneer Selvam will inaugurate Sivaji Manimandapamநடிகர் திலகம் என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் செவாலியே சிவாஜி கணேசன்.

இவரது மணிமண்டபம் இவரது பிறந்தநாளில் அக்டோபர் 1-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார் என்று தமிழக அரசு சார்பில் அறிவித்திருந்தது.

தமிழக முதல்வர் இங்கே இருக்கும்போது, அவர் இந்த விழாவில் அவர் கலந்துக் கொள்ளாதது வருத்தமளிப்பதாக பிரபு தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

இதே வேண்டுகோளை வலியுறுத்தி தமிழக முதல் அமைச்சருக்கு கடிதம் ஒன்றை நடிகர் சங்க நிர்வாகிகள் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வேண்டுகோளை பரிசீலனை செய்த தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார் என்று அரசு சார்பில் அறிவித்துள்ளார்.

அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

‘‘நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளின்படியும், கலைத் துறையினரின் கோரிக்கைகளின்படியும் 1.10.17 அன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது மணிமண்டபத்தை தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைப்பார்கள்.

மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் திரு.டி.ஜெயக்குமார் அவர்கள் தலைமை வகிக்கவும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்ரபரத்துறை அமைச்சர் திரு. கம்டபூர் ராஜு அவர்கள் முன்னிலை வகிப்பார்கள் என தெரிவித்து கொள்கிறேன்.

விழா ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து உடனடியாக மேற்கொள்ள ஆணையிட்டுள்ளேன்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Deputy CM Panneer Selvam will inaugurate Sivaji Manimandapam

சிவாஜி மணிமண்டபத்தை முதல்வர் திறக்க பிரபு-குஷ்பூ வேண்டுகோள்

சிவாஜி மணிமண்டபத்தை முதல்வர் திறக்க பிரபு-குஷ்பூ வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kushboo and prabuசென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள சிவாஜி கணேசன் மணி மண்டபத்தை அக்டோபர் 1-ம் தேதி அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் திறந்து வைப்பார்கள் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபு, அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்…

சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைப்பது ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் என்றும் அவர் உயிருடன் இருந்திருந்தால், திறப்பு விழாவிற்கு நேரில் வந்து திறந்து வைத்திருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

மணி மண்டபம் கட்டியது மகிழ்ச்சி அளித்தாலும், அதனை முதலமைச்சரோ அல்லது துணை முதலமைச்சரோ திறக்க முன்வராதது, தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார்.

தனது திரைப்படத்தின் மூலம் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டிற்காக சிவாஜி பாடுபட்டிருக்கிறார் என தெரிவித்துள்ள பிரபு, முதலமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசிடம் இருந்து சாதகமான பதில் வரும் என தனது குடும்பத்தினரும், சிவாஜி கணேசனின் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்றும் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகை குஷ்புவும் தன் கருத்தை கூறியுள்ளார்.

அதில்… ‘சிவாஜி கணேசனை தமிழக அரசு அவமானப்படுத்துகிறது.

முதல்வர்,  துணை முதல்வர், தமிழக அரசுக்கு மேதைகளை மதிக்கத் தெரியவில்லை.  அதிகாரத்தை  கையில் வைத்துக் கொண்டிருப்பதால் சிவாஜியை அவமரியாதை செய்ய  வேண்டாம்’ என்றார்.

Sivaji Manimandapam should be opened by CM Edappadi says Prabu Kushboo

 

மாரி 2 படத்திற்காக மலர் டீச்சரை மடக்கிய தனுஷ்

மாரி 2 படத்திற்காக மலர் டீச்சரை மடக்கிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush sai pallaviபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், நடித்த மாரி படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது.

இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளதால், ஒவ்வொரு கலைஞர்களையும் அறிவித்து வருகின்றனர்.

இரண்டாம் பாகத்தில் தனுஷ்க்கு வில்னாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார்.

இதைத் தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக நடிப்பது யார்? என்ற கேள்வி எழுந்தது.

தற்போது அதை அறிவித்துவுள்ளனர்.

பிரேமம் புகழ் மலர் டீச்சர்தான் அவர். ஆம் சாய்பல்லவி தான் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கிறார் என்று இயக்குனரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சாய் பல்லவி சமீபத்தில் நடித்த தெலுங்கு படமான பிதா ஆந்திராவில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

அதில் தெலுங்கில் சொந்தக்குரலில் சாய்பல்லவியே பேசி நடித்திருந்ததால், அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Balaji Mohan‏Verified account @directormbalaji

The vibrant @Sai_Pallavi92 is the #HeroineofMaari2Its a character thats right at the heart of the story of #Maari2 #SaiPallavi #Bilingual

sai pallavi maari 2 heroine

ரஜினியுடன் நடிச்சிட்டா பெரிய ஆளா..? தன்ஷிகாவை காலில் விழவைத்த டிஆர்

ரஜினியுடன் நடிச்சிட்டா பெரிய ஆளா..? தன்ஷிகாவை காலில் விழவைத்த டிஆர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TRajendar insulted Dhanshika in Vizhithiru Press Meetமீரா கதிரவன் இயக்கி தயாரித்துள்ள படம் விழித்திரு.

இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரபு, தன்ஷிகா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நீநீநீநீ…ண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இப்படம் பல தடைகளை தாண்டி வருகிற அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை விடியல் ராஜீ பெற்றுள்ளார்.

இந்நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது நாயகி தன்ஷிகா பேசும்போது டி.ராஜேந்தர் அவர் அருகில் இருந்தும் பேச்சின் போது அவரது பெயரை குறிப்பிட மறந்துவிட்டார்.

அதன்பின்னர் மற்ற அனைவரும் பேசிய பின் டி.ராஜேந்தர் இறுதியாக பேசினார்.

அவர் பேச்சை ஆரம்பித்த போதே அரங்கம் அதிர ஆரம்பித்து விட்டது.

அவர் பேசியதாவது….

என்னை ஏன் லாஸ்ட்டாக பேச சொன்னீங்க.? நான் வேஸ்ட்? இல்ல நான் பெஸ்ட்.? இது எனக்கு நீங்க வைக்கிற டெஸ்ட்?

கபாலி எடிட்டர் பிரவீன் என்று சொன்னீர்கள். அவர்தானே கழுகு படத்தை எடிட்டிங் செய்தார். பெரிய படங்களை மட்டும்தான் சொல்வீர்களா?

ரஜினியுடன் கபாலியில் நடித்தார் தன்ஷிகா. அவருக்கு டி.ஆர். யார் என்று தெரியாதாம்.

மல. மல. அண்ணாமலை. அந்த மலை கூட நடிச்சிட்டா? மடு தெரியாதா?

தன்ஷிகாவிற்கு மேடை நாகரிகம் தெரியவில்லை” என்றார். அவர் டி.ஆர். பேசிக்கொண்டிருக்கும்போது, நடுவில் குறிக்கிட்டு தன்ஷிகா மன்னிப்பு கேட்டு காலில் விழுந்து சாரி சொன்னார்.

அதற்கும் அசராமல் நீ கட்டி வரல சாரி. இப்போ சொல்ற சாரி. என்று தன் அடுக்கு மொழியால் அவர் பேசிக் கொண்டே இருந்தார்.

பின்னர் தன்ஷிகா கண்ணீர் விட்டு அழுதார்.

TRajendar insulted Dhanshika in Vizhithiru Press Meet

vizhithiru tr dhansika

கார்த்தி படத்தலைப்பில் அஜித் படம்; ரசிகர்கள் ஆச்சர்யம்

கார்த்தி படத்தலைப்பில் அஜித் படம்; ரசிகர்கள் ஆச்சர்யம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith karthiவினாத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் தீரன் – அதிகாரம் ஒன்று.

இப்படம் வருகிற நவம்பர் மாதம் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் இதே தீரன் என்ற பெயரில் அஜித் படம் ஒன்று கன்னடத்தில் ரிலீஸாகவுள்ளது.

இது அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் ரீமேக் ஆகும்.

இது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

காஞ்சனா 3-ல் லாரன்ஸ் உடன் இணையும் ஓவியா

காஞ்சனா 3-ல் லாரன்ஸ் உடன் இணையும் ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence and Oviyaராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படம் பேய் ஹிட்டானது.

இதனையடுத்து காஞ்சனா படத்தை இயக்கி நடித்தார்.

இதுவும் ஹிட்டாக பேய் படங்களை இயக்கி நடிப்பதை வாடிக்கையாக கொண்டார்.

இந்நிலையில் காஞ்சனா2-வை தொடர்ந்து தற்போது காஞ்சனா3-வை இயக்கவுள்ளார்.

இதில் நாயகியாக நடிக்க ஓவியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows