தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் திலகம் என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் செவாலியே சிவாஜி கணேசன்.
இவரது மணிமண்டபம் இவரது பிறந்தநாளில் அக்டோபர் 1-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார் என்று தமிழக அரசு சார்பில் அறிவித்திருந்தது.
தமிழக முதல்வர் இங்கே இருக்கும்போது, அவர் இந்த விழாவில் அவர் கலந்துக் கொள்ளாதது வருத்தமளிப்பதாக பிரபு தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.
இதே வேண்டுகோளை வலியுறுத்தி தமிழக முதல் அமைச்சருக்கு கடிதம் ஒன்றை நடிகர் சங்க நிர்வாகிகள் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இந்த வேண்டுகோளை பரிசீலனை செய்த தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார் என்று அரசு சார்பில் அறிவித்துள்ளார்.
அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது…
‘‘நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளின்படியும், கலைத் துறையினரின் கோரிக்கைகளின்படியும் 1.10.17 அன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது மணிமண்டபத்தை தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைப்பார்கள்.
மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் திரு.டி.ஜெயக்குமார் அவர்கள் தலைமை வகிக்கவும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்ரபரத்துறை அமைச்சர் திரு. கம்டபூர் ராஜு அவர்கள் முன்னிலை வகிப்பார்கள் என தெரிவித்து கொள்கிறேன்.
விழா ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து உடனடியாக மேற்கொள்ள ஆணையிட்டுள்ளேன்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Deputy CM Panneer Selvam will inaugurate Sivaji Manimandapam