‘தனுஷுக்கு சப் போர்ட்; ஆனந்திக்கு அப்பா…’ கலக்கும் சின்னி ஜெயந்த்.!

‘தனுஷுக்கு சப் போர்ட்; ஆனந்திக்கு அப்பா…’ கலக்கும் சின்னி ஜெயந்த்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor chinni jayanth photosநிறைய வருடங்களாக காலேஜ் பையனாக வந்து காமெடி செய்தவர் சின்னி ஜெயந்த். அதனை தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர், பிரபுசாலமன் இயக்கியுள்ள தொடரி படத்தில் நடித்துள்ளார்.

இதில் ரயில்வே கண்ட்ரோல் ரூம் ஆபிசராக வருகிறாராம்.

னுஷ்-கீர்த்தியின் லவ்வுக்கு வழக்கம்போல் போல் சப்போர்ட் செய்யும்  கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இதனையடுத்து, பிரபுசாலமன் தயாரிப்பில் அன்பழகன் இயக்கி வரும் ரூபாய்படத்திலும் நடித்திருக்கிறார்.

இதில் பணத்திற்கு அடிமையாகும் இருக்கும் ஒரு வயதான கேரக்டரில் நடித்துள்ளார்.

அமிதாப்பின் ‘பிக்குபடத்தின் பாதிப்பை இதில் பிரதிபலித்துள்ளதாகவும் கூறியிருக்கிறார் சின்னிஜெயந்த்.

இவரின் மகளாக ‘கயல்ஆனந்தி இப்படத்தில் நடித்துள்ளார் என்பதுதான் ஹைலைட்.

கபாலி பாடல்கள் லீக்…. சந்தோஷ் நாராயணன் ரியாக்ஷன் என்ன..?

கபாலி பாடல்கள் லீக்…. சந்தோஷ் நாராயணன் ரியாக்ஷன் என்ன..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali photosநாளை ஜுன் 12ம் தேதி ரஜினியின் கபாலி பாடல்கள் வெளியாகவிருந்த நிலையில், நேற்றே சில பாடல் வரிகளும் ரஜினியின் பன்ச் வசனங்களும் வெளியாகிவிட்டன.

இது ரஞ்சித் உள்ளிட்ட ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

இந்த நிலை தொடருமானால் படத்தின் நிலை என்னவாகும் என தீவிர ஆலோசனையில் உள்ளதாம் படக்குழு,

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இதுகுறித்து தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது….

மிகப்பெரிய நடிகரின் படத்தின் பாடல்கள் லீக் ஆகியுள்ளது. அவர் மீது நாங்கள் வைத்துள்ள அன்பும் எதிர்ப்பார்ப்பும் என்றும் மாறாது.

அமைதியாக இருப்போம். கபாலியை நேசிப்போம் என்று பதிவுட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த சின்சியர் ‘ரஜினிமுருகன்’ ரசிகர்..!

சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த சின்சியர் ‘ரஜினிமுருகன்’ ரசிகர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan new photosரசிகர்களை போற்றும் வகையில் நடிகர்கள் அவ்வப்போது தங்கள் படங்களில் காட்சிகளை வைப்பது உண்டு.அதுபோல் நடிகர்களை போற்றும் வகையில் நடிகரின் பெயரை தங்கள் பெயருக்கு முன்னால் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் ரசிகர்கள்.

ரஜினி, கமல் பெயரில் தொடங்கும் நிறைய ரசிகர்களின் பெயர்களை நாம் பார்த்திருக்கிறோம்.இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கும் இப்படி ஒரு ரசிகர் கிடைத்துள்ளாராம்.

இவரது ரசிகரான ரஜினிவேல்முருகன் என்பவர் தேனியில் ரஜினிமுருகன் என்ற பெயரில் ஒரு டீக்கடையை திறந்துள்ளார்.அந்த கடையில் போர்டில் ரஜினிமுருகன் பெயரும் ரஜினி படமும் இடம்பெற்றுள்ளது.

இக்கடையின் அருகே சிவகார்த்திகேயனின் பேனர் ஒன்றையும் பெரிய அளவில் வைத்துள்ளாராம்.இதனையறிந்த சிவகார்த்திகேயனின் சிலிர்த்து போய் விட்டாராம்.

எனவே, அந்த சின்சியர் ரசிகருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

விஜய் 60 படத்தில் கீர்த்தியின் தாய்மாமனாக தேசிய விருது நடிகர்..!

விஜய் 60 படத்தில் கீர்த்தியின் தாய்மாமனாக தேசிய விருது நடிகர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy 60 stillsநாகிரெட்டியின் விஜயா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

பரதன் இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், சதீஷ், ஸ்ரீமன், டேனியல் பாலாஜி, ஜெகதிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் தாய்மாமனாக தம்பி ராமைய்யா நடிக்கிறாராம்.

இவர் மைனா படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தினாரா ஜி.வி.பிரகாஷ்..?

எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தினாரா ஜி.வி.பிரகாஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash new imagesசாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மொட்டை ராஜேந்திரன், சரவணன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’.

படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் எம்ஜிஆரின் கண்ணை நம்பாதே பாடல் மற்றும் சந்திரபாபுவின் குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவே ஆகிய பாடல்களை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஜிவி. பிரகாஷ் கூறியதாவது…

நான் கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 50 படங்களுக்கு இசையமைத்துவிட்டேன்.

ஆனால் இதுவரை எந்த ஒரு பழைய பாடலையும் ரீமிக்ஸ் செய்யவில்லை. ஆனால் அந்த ஆசை வெகுநாளாக இருந்தது.

எனவே மற்ற நடிகர்களின் படங்களில் பயன்படுத்துவதை விட, என்னுடைய படத்தில் பயன்படுத்த நினைத்தேன்.

கண்ணை நம்பாதே என்ற எம்ஜிஆரின் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே அதை கொஞ்சம் மாற்றி காலேஜ் கானா பாடலாக போல வைத்துள்ளோம். கானா பாலா இப்பாடலை பாடியிருக்கிறார்.

மற்றபடி யாரையும் அவமானப்படுத்தவும் அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. யார் மனமாவது புண்பட்டு இருந்தால் மன்னிக்கவும்.” என்றார்.

வாட்ஸ் அப்பில் வைரலாகும் ‘கபாலி’ டயலாக், நெருப்புடா…!

வாட்ஸ் அப்பில் வைரலாகும் ‘கபாலி’ டயலாக், நெருப்புடா…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali imagesரஜினி நடித்து சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள கபாலி படத்தின் பாடல்கள் நாளை ஜீன் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.எனவே, ரஜினி ரசிகர்களின் ஆவல் கட்டுங்கடங்காத அளவில் பெருகி வருகிறது.

இதில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள ‘நெருப்புடா’ என்ற பாடல் மிகுந்த எதிர்பார்ப்ப உருவாக்கியுள்ளது.இந்நிலையில் வாட்ஸ் அப்பில் ‘நெருப்புடா பாடலின் 30 நொடி ஓடக்கூடிய ஆடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது.

அந்த பாடல் வரிகள்..

நெருப்புடா நெருங்குடா பாப்போம்

நெருங்குனா பொசுக்குற கூட்டம்!

அடிக்கிற அழிக்கிற எண்ணம்

முடியுமா நடக்குமா இன்னும்

அடக்குனா அடங்குற ஆளா நீ

இழுத்ததும் பிரியற நூலா நீ

தடையெல்லாம் மதிக்கிற ஆளா நீ

விடியல விரும்பற கபாலீ…

என்று வரிகள் கொண்ட பாடல் அனலாய் பறக்க செய்கிறது.

மேலும்….

“நான் வந்துன்டேன்னு சொல்லு… திரும்பி வந்துடேன்னு…. 25 வருஷத்துக்கு முன்னாடி எப்படி போனானோ கபாலி, அப்படியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு.. கபாலிடா.. என்று ரஜினி பேசும் பன்ச் டயலாக்குகளும் வெளியாகியுள்ளது.

இது கபாலி குழுவினரை சற்று அதிர்ச்சியடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows