மணிரத்னத்தின் *செக்கச் சிவந்த வானம்* டிரைலர் எப்படி இருக்கு.?

Chekka Chivantha Vaanam trailer reviewமணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் இன்று காலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

படத்தில் சேனாதிபதி என்ற கேரக்டரில் தொழிலதிபராக வருகிறார் பிரகாஷ்ராஜ்.

அவருக்கு முதல் மகன் அரவிந்த்சாமி, 2வது மகன் அருண் விஜய், 3வது மகன் சிம்பு என 3 மகன்கள் உள்ளனர்.

அரவிந்த்சாமியின் மனைவியாக ஜோதிகா, அருண்விஜய் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்பு ஜோடியாக டயானா எரப்பா நடித்துள்ளனர்.

விஜய்சேதுபதிக்கு ஜோடி இல்லை எனத் தெரிகிறது.

மகன்கள் மூன்று பேரும் தங்களது அப்பாவின் இடத்தை பிடிக்க முயற்சி செய்கின்றனர்.

இதில் மற்றொரு நாயகன் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

சிம்புவின் கேரக்டர் அப்பாவுக்கு பிடிக்காத மகன் போல வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விஜய்சேதுபதி, தனது நண்பனான அரவிந்த்சாமி மூலம் பிரகாஷ்ராஜின் இடத்தை பிடிக்க நினைப்பதை மையப்படுத்தி கதை நகர்வதாக தெரிகிறது.

உனக்கு யாராவது பழைய நண்பன் இருந்தால் அவனை நம்பாதே என்று டிரைலர் முடிவில் கூறுகிறார் அரவிந்த்சாமி.

குடும்பம் மற்றும் நட்புக்கு இடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி காதலும் கூடலும் உள்ளதாக படத்தை எடுத்துள்ளார் மணிரத்னம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் மிரட்டலான பின்னணி இசையில் டிரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த செக்கச் சிவந்த வானம் படம் செப்டம்பர் 28-ஆம் ரிலீசாகிறது.

Chekka Chivantha Vaanam trailer review

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும்…
...Read More
அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய், விஜய்சேதுபதி ஆகியோர்…
...Read More
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது…
...Read More

Latest Post