*நவாப்* செம ஹிட்டு; நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க விரும்பும் சிம்பு

*நவாப்* செம ஹிட்டு; நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க விரும்பும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu aka STR likely to act in direct Telugu filmமணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டதால் நீண்ட நாட்களுக்கு சிம்பு தரப்பில் உற்சாகம் ஏற்பட்டுள்ளதாம்.

இப்படம் தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் வெளியாகி அங்கும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

எனவே ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு வீடியோவை சிம்பு வெளியிட்டுள்ளார்.

அதில், “நவாப்’ படம் பெரிய ஹிட் ஆகியுள்ளது. என்னுடைய நடிப்பை வரவேற்ற அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு எனக்குக் கிடைத்துள்ளது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

எனக்கு நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க ஆசை. விரைவில் ஒரு தெலுங்குப் படத்தில் நடிப்பேன்,” என்று தெரிவித்துள்ளார் சிம்பு.

தற்போது லைகா தயாரிப்பில் சுந்தர். சி. இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இது ‘அத்தாரின்டிக்கி தாரேதி’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும்.

இதன் பின்னர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க உள்ளார்.

Simbu aka STR likely to act in direct Telugu film

தீபாவளி தொடங்கும் நேரத்தில் *சர்கார்* சரவெடி ஆரம்பம்

தீபாவளி தொடங்கும் நேரத்தில் *சர்கார்* சரவெடி ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar special shows will start at 1am on Diwali festivalஅடுத்த மாதம் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு விஜய்யின் சர்கார் மற்றும் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

பெரும்பாலும் டாப் நடிகர்களின் படங்கள் என்றாலே அதிகாலை சிறப்பு காட்சி இருக்கும்.

அதுவும் காலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும்.

ஆனால் சர்கார் படத்தின் முதல் காட்சி நள்ளிரவு 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சென்னையில் உள்ள ஒரு சில தியேட்டர்கள் இப்போதே அதற்கான முயற்சியல் ஈடுப்பட்டுள்ளனர்.

ஏஆர். முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Sarkar special shows will start at 1am on Diwali festival

*96* படத்தில் இளவயது ராம்-ஜானுவாக நடித்தவர்களிடையே காதல்.?

*96* படத்தில் இளவயது ராம்-ஜானுவாக நடித்தவர்களிடையே காதல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

96 Jaanu fame Gowri clarifies her relationship with Aadhitya Baskarபிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா இணைந்து நடித்த படம் 96.

 

இதில் இளவயது விஜய் சேதுபதி, திரிஷாவாக ஆதித்யா மற்றும் கௌரி என்ற இருவரும் நடித்திருந்தனர்.

 

விஜய்சேதுபதி த்ரிஷா காதலைப் போல் இந்த பருவ வயது காதலும் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டது.

 

இந்நிலையில், இவர்கள் இருவரும் நிஜ வாழ்வில் ஒன்றாக இருக்கும் போட்டோ ஒன்று வெளியானது.

 

இதனால் அவர்கள் உண்மையில் காதலிக்கிறார்கள் என்பது போன்ற செய்திகள் சில வலைத்தளங்களில் வெளியானது.

 

இதனையடுத்து கௌரி என்ற அந்த இளம் பெண் கூறியதாவது…

96 திரைப்படத்தில் ராம் மற்றும் ஜானு கதாபாத்திரத்தில் காதலர்களாக நடித்தோம். அது மட்டுமே. நாங்கள் இருவரும் நிஜத்தில் காதலிக்க வில்லை.

எங்களைப் பற்றி தவறான வதந்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த குட்டி ஜானு.

நடிகர் எம்எஸ். பாஸ்கரின் மகன் ஆதித்யா என்பதும் கௌரி ஒரு பத்திரிகையாளர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

96 Jaanu fame Gowri clarifies her relationship with Aadhitya Baskar

*பேட்ட* சீன்ஸ் லீக்; ஒளிப்பரப்பிய தந்தி டிவிக்கு டைரக்டர் கண்டனம்

*பேட்ட* சீன்ஸ் லீக்; ஒளிப்பரப்பிய தந்தி டிவிக்கு டைரக்டர் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

petta stillsசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் `பேட்ட’.

அனிருத் இசையமைக்க, திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இப்படத்தில் ரஜினியுடன் சசிகுமார், விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, மகேந்திரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தற்போது இதன் சூட்டிங் வாரணாசியில் நடந்து வருகிறது.

இப்படம் படமாக்கப்படும்போது சில விஷமிகள் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ” `பேட்ட’ குழுவினரிடமிருந்து ஒரு வேண்டுகோள். படத்தின் சூட்டிங் ஸ்பாட் ஸ்டில், வீடியோ போன்றவற்றை பகிராமல் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேலும் இந்த லீக் வீடியோவை ஒரு செய்தியாகவே தந்தி டிவி ஒளிப்பரப்பியது.

தந்தி டிவி தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த வீடியோவையே ஒளிப்பரப்புவது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

விட்டால் அடுத்து படத்தையே திருட்டுத்தனமாக ஒளிப்பரப்புவார்கள் போல.” என கார்த்திக் சுப்பராஜ் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கெட்டவளா நடிச்சிருக்கேன்; திட்டாம ஆண் தேவதை பாருங்க… சுஜாவருணி

கெட்டவளா நடிச்சிருக்கேன்; திட்டாம ஆண் தேவதை பாருங்க… சுஜாவருணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suja varuneeவருகிற அக்டோபர் 12ஆம் தேதி ரெட்டச்சுழி டைரக்டர் தாமிரா இயக்கியுள்ள ஆண் தேவதை படம் வெளியாகிறது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், சுஜா வருணி, பேபி மோனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் தன் அனுபவம் குறித்து சுஜா வருணி பேசும்போது…

“தாமிரா சார் போனில் இந்த கதையை சொன்னவுடனேயே இதில் நடிக்கவேண்டும் என எனக்கு தோன்றியது. அவரோட ரெட்டசுழி படமே எனக்கு ரொம்ப பிடிக்கும்..

அதில் அஞ்சலி கேரக்டரை பார்த்தபோது, ஏன் நமக்கு இப்படியெல்லாம் ஒரு கேரக்டர் வரமாட்டேங்குது என நினைப்பேன். அந்த ஏக்கம் இதில் பூர்த்தியாகி உள்ளது. இதில் திருமணமாகி ஐடி நிறுவனத்தில் வேலைக்குப்போகும் பெண்ணாக வருகிறேன்.

இன்றைய சமூகத்தில் எப்படி ஸ்டைலிஷா வாழலாம் என்பதற்கு ஒரு கெட்ட உதாரணமான பெண்ணாக நடிச்சிருக்கேன். என்னை திட்டாம படம் பாருங்க” என முன்கூட்டியே மன்னிப்பு கோரிக்கை விடுக்கிறார்.

*ஆண் தேவதை*க்குள் ஒளிந்திருக்கும் பெண் தேவதை ரம்யா பாண்டியன்

*ஆண் தேவதை*க்குள் ஒளிந்திருக்கும் பெண் தேவதை ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ramya pandianஇயக்குனர் தாமிரா டைரக்சனில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆண் தேவதை’. ரம்யா பாண்டியன், சுஜா வாருணி, ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், ஹரீஷ் பெராடி, அபிஷேக், மாஸ்டர் கவின் பூபதி, பேபி மோனிகா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தை தனது ‘சிகரம் சினிமாஸ்’ நிறுவனத்துடன் ஃபக்ருதீன் என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா.

விஜய்மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் அக்-12ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாகவுள்ள நிலையில் படம் குறித்த தங்களது அனுபவங்களை படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர்..

நாயகி ரம்யா பாண்டியன் பேசும்போது…

“ஜோக்கர் படத்தில் இருந்து அப்படியே முற்றிலும் மாறான ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன். ஜோக்கரை பார்த்துவிட்டு சமுத்திரக்கனி சார் தான் இந்தப்படத்தில் நடிக்க அழைத்தார்.

ஜோக்கர் படத்திற்குப்பின் எனது படமாக இந்தப்படம் வந்தால் நன்றாக இருக்கும் நினைத்தே நானும் ஒப்புக்கொண்டேன்.. படப்பிடிப்பில் சமுத்திரக்கனி சாருடன் நடிக்கிறோம் என்கிற பயமெல்லாம் எனக்கு ஏற்படவேயில்லை..

மேலும் தாமிரா, விஜய் மில்டன், சமுத்திரக்கனி என மூன்று பேருமே டைரக்டர்கள் என்பதால், அவர்களிடம் பாராட்டு வாங்கி நடித்தது மறக்க முடியாதது.

ஆண் தேவதை டைட்டில் காரணமாக சமுத்திரக்கனி சாருக்கான படமாக தெரிந்தாலும், படம் முழுதும் அவருக்கு சமமான காட்சிகளில் நடித்துள்ளேன்.

அதனால் ஆண் தேவதைக்குள் உள்ள பெண் தேவதை என்றுகூட என்னை சொல்லலாம்.

ஜோக்கர் படத்தில் மல்லிகா தான் வெளியே தெரிஞ்சாங்க.. ஆனா ஆண் தேவதையில ரம்யா பாண்டியனும் வெளியே தெரிவாங்க” என்கிறார் நம்பிக்கையுடன்.

More Articles
Follows