அனிமேஷன் எம்ஜிஆர் படத்துக்கும் தடை கேட்டு வழக்கு; கோர்ட் தள்ளுபடி

mgrமறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை இயக்கி வெளியிட்டபோது, அந்த படத்தின் இறுதியில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாக தலைப்பாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு வெளியாகும் என அறிவித்தார்.

அதன்பிறகு, அவர் அரசியலில் இறங்கி முதல்வர் ஆனதால் கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு படம் உருவாகவில்லை.

இந்நிலையில், எம்.ஜி.ஆரின் நண்பரான ஜசரி வேலனின் மகன் ஜசரி கணேஷ், கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற பெயரில் அனிமேசன் எம்.ஜி.ஆரை வைத்து படத்தை உருவாக்கி வருகிறார்.

இப்படத்திற்கு தடை கேட்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் சக்கரவர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில்… “கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தான் தயாரிக்க முடிவு செய்து படத்தின் தலைப்பை பதிவு செய்திருந்தேன். தற்போது அந்தப் படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷ், அந்த தலைப்பை என்னிடம் இருந்து வாங்கினார்.

தற்போது அந்த படம் முடிவடைந்து வெளிவர இருக்கிறது. ஆனால் படத்தின் கதை நான் உருவாக்கி வைத்திருந்த கதையல்ல. நான் சொன்ன கதையை படமாக்காமல் வேறு கதையை படமாக்கி இருப்பதால் படத்துக்கு தணிக்கை சான்று வழங்க கூடாது” என்று தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. “இது உயர்நீதிமன்ற விசாரணைக்கு உகந்ததல்ல மனுதாரார் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் முறையிட்டு தீர்வு காணலாம்” என்று கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Overall Rating : Not available

Latest Post