தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ மற்றும் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
ஆனாலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர்.
இதனிடையில் இன்று மாலை 5 மணிக்கு ‘வாரிசு’ படத்தின் டிரைலர் வெளியானது.
இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் சில மணி நேரங்களில் ‘துணிவு’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘துணிவு’ படத்தை ஒரு நாள் முன்னதாக ஜனவரி 11ஆம் தேதி வெளியிட உள்ளதாக போனி கபூர் அறிவித்துள்ளார்.
இதற்கு அடுத்த நாள் வியாழக்கிழமை விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
இரண்டு படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்து மோத விடாமல் ஒருநாள் முன்னதாகவே துணிவு படத்தை வெளியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘துணிவு’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையை அமைச்சர் உதயநிதியின் நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது.
இதே நிறுவனம்தான் ‘வாரிசு’ படத்தின் வெளியீட்டு உரிமையை சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் மட்டும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Boney Kapoor new update for Thunivu release date