புஷ்பா படத்தில் செம்மரக்கடத்தல்.?; விஜய்சேதுபதி இடத்தில் பாபி சிம்ஹா.

புஷ்பா படத்தில் செம்மரக்கடத்தல்.?; விஜய்சேதுபதி இடத்தில் பாபி சிம்ஹா.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi and bobby simhaதமிழில் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்சேதுபதி வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.

அதே சமயத்தில் மற்ற மொழி படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

மலையாளம், தெலுங்கு என பட்டைய கிளப்பி வரும் இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘புஷ்பா’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.

இதில் வனத்துறை அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி விலகிக்கொண்டதாகவும் அவருக்கு பதிலாக பாபி சிம்ஹா அந்த கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்படுகிறதாம்.

இதில் தமிழர்களை செம்மர கடத்தல்காரர்களாக காட்டப்படுவதை விஜய்சேதுபதி விரும்பவில்லை என்றும் அதனால் விலகியதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

உறுப்பினர் அல்லாத சலூன் கடைக்காரர்களுக்கும் ரூ 2000 நிவாரணம் வழங்க அரசு முடிவு

உறுப்பினர் அல்லாத சலூன் கடைக்காரர்களுக்கும் ரூ 2000 நிவாரணம் வழங்க அரசு முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN CM announced Rs 2000 relief fund for Saloon shop employees கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இது நாளை மே 17 வரை அமலில் இருக்கும்.

கடந்த 2 வாரங்களாக ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டாலும் , முடிதிருத்தும் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதியளிக்கவில்லை.

எனவே கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இதனிடையில் நெல்லை மாவட்ட சவரத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.

எங்களுக்கு அரசு ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லாமல் 1 லட்சம் ரூபாய் கடன் வழங்க வேண்டும்.

மேலும் கடையை திறக்க அனுமதி அளிக்காவிடடால் வரும் 18-ந்தேதி தடைகளை மீறி கடையை திறப்போம் என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் முடி திருத்துவோருக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில்…

முடி திருத்துவோர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு ஏற்கனவே இரு தவணைகளாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.

தற்போது முடி திருத்துவோர் நலவாரியத்தில் பதிவு செய்யாத முடி திருத்துவோருக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்யாதவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி பெற்று நிவாரணம் பெறலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தால் 2 மாதமாக சலூன் கடைகள் மூடியுள்ளதால் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சலூன் கடை திறப்பு குறித்து அரசு எதையும் அறிவிக்கவில்லை.

TN CM announced Rs 2000 relief fund for Saloon shop employees

கார்த்திக் டயல் செய்த எண்.; சிம்புவுடன் த்ரிஷா பேசிய வீடியோ இதோ…

கார்த்திக் டயல் செய்த எண்.; சிம்புவுடன் த்ரிஷா பேசிய வீடியோ இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthik Dial Seytha Yenn Simbu and Trishas lock down short filmகொரோனா லாக் டவுனில் சினிமா சூட்டிங் முற்றிலும் நிறத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையிலும் தன் வீட்டில் இருந்தபடியே வீடியோ கால் மூலம் த்ரிஷாவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து இயக்கியுள்ளார் கௌதம் மேனன்.

சில தினங்களுக்கு முன் இந்த வீடியோ வெளியானது.

இந்த நிலையில் சில எடிட்டிங் பணிகள் செய்த பிறகு சில நொடிகள் ஓடும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த குறும்படத்திற்கு கார்த்திக் டயல் செய்த எண் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் சிம்புவும் நடித்திருக்கிறாராம். மேலும் ஏஆர். ரஹ்மான் இதற்கு இசையமைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆக.. லாக்டவுனில் ஒவ்வொருவரும் தங்கள் இடங்களில் இருந்தே தங்கள் பங்களிப்பை செய்து வருவது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

Karthik Dial Seytha Yenn Simbu and Trishas lock down short film

Watch this promo…

 

மாஸ்க் போடுங்க ஆனா இப்படி மாட்டிக்கிட்டா உசுருக்கே ஆபத்து..!?

மாஸ்க் போடுங்க ஆனா இப்படி மாட்டிக்கிட்டா உசுருக்கே ஆபத்து..!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Its not safe to wear face mask during exercise at Covid 19கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மாஸ்க் அணிவது கட்டாயமாகியுள்ளது.

உலகத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் இந்த சட்டம் அமலில் உள்ளது.

இதனால் அனைவரும் வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்தபடியே செல்கின்றனர்.

இந்த நிலையில் வெளிநாட்டில் ஒருவர் 30 வயதுமிக்க இளைஞர் ஒருவர் காலையில் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்துள்ளார்.

அப்போது அவர் தீடீரென மயக்கமடைந்து விழுந்துவிட்டாராம்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளதாவது…

‘மாஸ்க் அணிந்து அந்த இளைஞர் உடற்பயிற்சி செய்துள்ளார்.

எனவே அவருடைய நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜன் உள்ளே செல்லவில்லை.

சாதாரண வேலைகளை செய்யும் போது மாஸ்க் அணிவது பிரச்சனை இல்லை. ஆனால் கடுமையான வேலை மற்றும் உடற்பயிற்சி செய்யும்போது, மாஸ்க் அணிவதால் நமக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது என தெரிவித்துள்ளனர்.

ஆகவே மக்களே மாஸ்க் அணிவது கட்டாயம் தான். ஆனால் கடினமான வேலைகளை செய்யும்போது மாஸ்க் கழட்டி வைத்துவிடுங்கள்..

Its not safe to wear face mask during exercise at Covid 19

உன்ன மிஸ் பண்ணுவேன் ப்ரோ..; 4G டைரக்டர் வெங்கட் பக்கர் மரணம் குறித்து ஜிவி. பிரகாஷ்

உன்ன மிஸ் பண்ணுவேன் ப்ரோ..; 4G டைரக்டர் வெங்கட் பக்கர் மரணம் குறித்து ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

4g director Venkat pakkarகாலையில் தொலைபேசியில் வெங்கட் பக்கர் இறந்துவிட்டார் என்ற தகவலைச் சொன்னார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. எந்த வேலையும் ஓடவில்லை. இன்று இந்த வேலைகள் எல்லாம் என்று திட்டமிட்டு இருந்த அனைத்துமே மறந்துவிட்டது. எந்தளவுக்கு எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர், சகோதரர் என்று வெங்கட் பக்கரை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

நான் பணிபுரிந்த இயக்குநர்களோடு மிகவும் நட்பாகிவிடுவேன். அது என்னோடு பணிபுரிந்த அனைவருக்குமே தெரியும். இந்த மறைவு என்பது என்னால் இப்போது வரை நம்பமுடியவில்லை. தமிழ்த் திரையுலகில் விரைவில் நல்ல இயக்குநர் என்ற பெயருடன் அறிமுகமாகி இருக்க வேண்டியவர் சென்றுவிட்டார்.

‘4G’ கதையை அவர் என்னிடம் சொல்லும் போது, உடனே ஒப்புக் கொண்டேன். வித்தியாசமான களம் என்றிருந்தாலும், அந்தக் களத்தில் அவருடைய காட்சியமைப்புகள் மற்றும் அந்த கதையில் அவருக்கு இருந்த நம்பிக்கை. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் அவருடன் பேசியது, பழகியது எல்லாம் மறக்கவே முடியாது. வயது சிறியது என்றாலும், மூளை பெரியது. சொன்ன கதையைச் சொன்ன நாட்களை விட, மிகக் குறைவான நாட்களிலேயே முடித்து கொடுத்துவிட்டார். ‘4G’ கதைக்களம் பற்றி படம் தயாரானவுடன் சொல்கிறேன். அந்தக் கதையோடு அவர் அந்தளவுக்கு ஊறியிருந்தார்.

தமிழ்த் திரையுலகில் எப்படியாவது ஒரு இயக்குநராக ஜொலித்துவிட வேண்டும் என்று நினைத்த ஒரு இயக்குநர் இன்று காலமாகிவிட்டார். அவர் இந்த உலகை விட்டு மறந்தாலும், அவருடைய இயக்கத் திறமையை ‘4G’ படம் மூலம் நாம் உணர்வோம். கண்டிப்பாக அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு என இருக்கும் போது வெங்கட் பக்கர் பற்றி இன்னும் நிறையச் சொல்வேன்.

கண்டிப்பாக என் வாழ்வில் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ப்ரோ…

கண்ணீருடன்
ஜி.வி.பிரகாஷ்

BREAKING அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது.. – கமல்

BREAKING அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது.. – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasanகொரோனா பொது முடக்கத்திலும் தமிழக அரசு மே.7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தது.

இதனையடுத்து மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுக்களை வாங்கிசென்றனர்.

இதில் கொரோனா தொற்றை தடுக்க சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் பொது முடக்கம் முடியும் மே 17-ம் தேதி வரையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தனர்..

ஆனால், ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு உத்தரவிட்டனர்.

ஆனாலும் ஆன்லைனில் தற்போதைக்கு மதுபானம் விற்பது சாத்தியமில்லை எனவும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் வாதம் செய்தது.

ஆன்லைனின் மதுக்கள் விற்றால் சட்டம் ஒழுங்கு, மது கடத்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தது.

மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படிதான் மாநிலத்தில் மதுக்கடை திறக்கப்பட்டது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம் நீதிபதிகள், மதுபானக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் மநீம தலைவர் கமல் இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது.
திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில்.
அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது..

எனப் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

More Articles
Follows