அஜித்துக்கு வில்லனாக மாறிய பாபி சிம்ஹா

அஜித்துக்கு வில்லனாக மாறிய பாபி சிம்ஹா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bobby simhaநேரம் மற்றும் ஜிகர்தண்டா படங்களில் வில்லனாக மிரட்டியவர் பாபி சிம்ஹா.

தனி ஹீரோவாக ஆனபோதிலும் அண்மையில் வெளியான மெட்ரோ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.

இந்நிலையில் அஜித்தின் ஏகே 57 படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

அஜித்துக்கு வில்லனாக விஜய்சேதுபதி, அர்ஜூன், அரவிந்த்சாமி, பிரசன்னா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் தற்போது பாபி சிம்ஹா தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா இயக்கும் இப்படத்தில் ‘லொள்ளு சபா’ சுவாமிநாதனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

சிம்புவின் ‘மதுரை மைக்கேல்’ படம் வெளியானது

சிம்புவின் ‘மதுரை மைக்கேல்’ படம் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu first lookஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ (AAA) படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இப்படத்தில் மூன்று வேடம் ஏற்கவுள்ளதால் தன் உடல் அமைப்பில் வித்தியாசம் காட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதில் ஒரு நாயகியாக ஸ்ரேயா நடித்து வருகிறார். மற்ற நாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டராக கருதப்படும் மதுரை மைக்கேலின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இதில் சிம்பு அசத்தலாக புகை பிடிப்பது போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் தரை மாஸ் ஆக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

எந்திரன், தெறி சாதனைகளை முறியடித்த கபாலி

எந்திரன், தெறி சாதனைகளை முறியடித்த கபாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

enthiran kabali movie stillsகபாலி ரிலீஸ் ஆன அன்று எதிர்மறையான பல விமர்சனங்கள் வந்தாலும், அவற்றையெல்லாம் காலி செய்து, வசூல் வேட்டையாடி வருகிறார்.

சென்னையில் இரண்டாவது வாரத்தில் 24 திரையரங்க வளாகங்களில் 625 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.2.20 கோடியை வசூல் செய்துள்ளது. இரண்டாவது வார இறுதி நாட்களில் ரூ. 2 கோடியை வசூலித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை சென்னையில் மட்டும் ரூ. 9 கோடியை எட்டியுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல மாலில் தெறி 13 நாட்களில் ரூ 1.10 கோடி வசூல் செய்து இருந்தது.

ஆனால், கபாலி பத்தே நாட்களில் ரூ 1.15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து, தெறி சாதனையை முறியடித்துள்ளது.

மேலும் ஒன்பது நாட்களை கடந்துள்ள நிலையில் தமிழக வசூல் ரூ.72 கோடியை நெருங்கியதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் தமிழக வசூலில் 75% தயாரிப்பாளருக்கும் மீதமுள்ள 25% தியேட்டர் உரிமையாளர்களுக்கும் என ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்ததாம்.

எனவே தயாரிப்பாளருக்கு மட்டும் ரூ.50 கோடி வரை கிடைத்துள்ளதாக தெரிகிறது.

ரஜினியின் எந்திரன்’ படத்திற்கு அதிக லாபம் கொடுக்கும் படமாக ‘கபாலி’ அமைந்துள்ளதால் தியேட்டர் உரிமையாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சுதந்திர தின ஸ்பெஷல்… ஒதுங்கி நிற்கும் தனுஷ்

சுதந்திர தின ஸ்பெஷல்… ஒதுங்கி நிற்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush stillsசனி மற்றும் ஞாயிற்றுகிழமையோடு விடுமுறை தினங்கள் சேர்ந்து விட்டால் பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல நடிகர்களுக்கும் கொண்டாட்டம்தான்.

அந்த வாரத்தில் தங்கள் படங்களை ரிலீஸ் செய்து வசூல் ஈட்ட காத்திருப்பார்கள்.

இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதியோடு சுதந்திர தின விடுமுறையும் வருவதால் நிறைய படங்கள் ரிலீஸ் ஆகவிருக்கின்றன.

விக்ரம்பிரபுவின் வாகா, விஜய் சேதுபதியின் தர்மதுரை, ராஜீமுருகனின் ஜோக்கர் உள்ளிட்ட படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளன.

இத்துடன் தனுஷின் தொடரியும் வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் என்ன காரணத்தினோலோ தற்போது தொடரி படத்தை ஆகஸ்ட் 19-ந் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டனர்.

கபாலி குமுதவள்ளியின் மகிழ்ச்சியும்… மன்னிப்பும்…

கபாலி குமுதவள்ளியின் மகிழ்ச்சியும்… மன்னிப்பும்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali movie stillsகபாலி படத்தில் ரஜினிகாந்த் இளமையான தோற்றம் மற்றும் வயதான தோற்றம் என இரண்டிலும் அசத்தியிருந்தார்.

இவருக்கு கிடைத்த வரவேற்பை போலவே இவரது மனைவியாக நடித்த ராதிகா ஆப்தேவுக்கும் கிடைத்தது.

குமுதவள்ளி கேரக்டரில் தாய்மார்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளார்.

ஆனால் கபாலி பட புரோமோஷன் நிகழ்ச்சிகள் இவர் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறியதாவது…

“ரஜினி சாருடன் நடித்ததை எப்போதும் என் வாழ்வில் மறக்க முடியாது. ‘கபாலி’ படத்தின் சாதனை செய்திகள் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

‘கோல்’ என்ற இந்தி படத்தில் பிஸியாக இருப்பதால் ‘கபாலி’ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என கூறினார்.

மீண்டும் ரஜினியை இழுக்கும் கவர்னர் கிரண் பேடி

மீண்டும் ரஜினியை இழுக்கும் கவர்னர் கிரண் பேடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kiran bedi stillsபுதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக சில மாதங்களுக்கு முன்பு கிரண் பேடி நியமிக்கப்பட்டார்.

இவரின் பதவி ஏற்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இவர் பேசியதாவது…

“புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசு வழங்கி இருக்கிறது.

புதுச்சேரி மக்களின் ஒழுக்க நிலையை மாற்றுவதற்காக நடிகர் ரஜினிகாந்தை விளம்பர தூதராக நியமிக்க விரும்புகிறோம்.

ரஜினிகாந்தின் வேண்டுகோள்களும், செய்திகளும் புதுச்சேரியை ஆரோக்கியமானதாக மாற்றும். என நம்புகிறோம்” என்றார்.

More Articles
Follows