காதல் சுகுமார் இயக்கத்தில் நடிக்கும் ஆர்யாவின் சிஸ்டர்..!

காதல் சுகுமார் இயக்கத்தில் நடிக்கும் ஆர்யாவின் சிஸ்டர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arya Sister in Kadhal Sukumar's Movieபாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் பரத்தின் நண்பனாக நடித்தவர் சுகுமார்.

அன்று முதல் இவரது பெயருடன் காதலும் ஒட்டிக் கொண்டது. இதனை தொடர்ந்து பல படங்களில் பணியாற்றியுள்ள காதல் சுகுமார் தற்போது இயக்குனராகவும் வலம் வருகிறார்.

திருட்டு விசிடி என்ற படத்தை இயக்கிய இவர், தற்போது சும்மாவே ஆடுவோம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நாயகனாக அறிமுக நாயகன் அர்ஜீன் மற்றும் அருண் பாலாஜி நடித்துள்ளனர்.

இதில் நாயகியாக லீமா பாபு நடித்துள்ளார்.

இவர் மதராசப்பட்டினம் படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்தவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்..

மேலும் மாங்கா, தாக்க தாக்க, ரெட்டைச்சுழி, ரசிக்கும் சீமானே ஆகிய தமிழ் படங்களிலும் லீமா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வாவுடன் இணையும் டிமான்ட்டி காலனி இயக்குனர்..!

அதர்வாவுடன் இணையும் டிமான்ட்டி காலனி இயக்குனர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Demonte Colony Director is Ready with his Next Atharvaaஏழாம் அறிவு, துப்பாக்கி உள்ளிட்ட படங்களில் ஏஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அஜய் ஞானமுத்து.

இவர் அருள்நிதி நடித்த டிமான்ட்டி காலனி மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

தமிழில் இப்படம் பெற்றிபெறவே தெலுங்கிலும் இயக்கினார்.

தற்போது அதர்வா நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் அஜய்.

தற்போது ருக்மணி வண்டி வருது, செம போத ஆகாதே ஆகிய படங்களில் நடித்துள்ளார் அதர்வா.

வருகிற ஜனவரி 2017ல் பாலா இயக்கும் படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக நடிக்கவிருக்கிறார் அதர்வா என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தெலுங்கு சினிமாவை தெறிக்க விடும் வியாபாரத்தில் கபாலி..!

தெலுங்கு சினிமாவை தெறிக்க விடும் வியாபாரத்தில் கபாலி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shanmukha Films Bags Kabali Telugu Rightsஎத்தனையோ நடிகர்களின் படங்கள் வந்தாலும், ரஜினி படத்திற்கு போட்டியாக ரஜினி படங்களே நிற்கும்.

விரைவில் கபாலி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் வியாபாரமும் அப்படிதான் உருவாகி வருகிறதாம்.

இதற்கு முன் இல்லாத அளவுக்கு பட விநியோக உரிமை உச்சத்தில் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘கபாலி’ படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை ‘சண்முகா பிலிம்ஸ்’ ப்ரவீன் மற்றும் செளத்ரி ஆகியோர் ரூ.32 கோடி கொடுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கன்னட உரிமையை ‘லிங்கா’ தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ரிலீஸ் உரிமைகளின் வியாபாரம் பற்றிய தகவல்களை தெரிவிக்கிறோம். தொடர்பில் இருங்கள்.

ராஜீவ்காந்தி கொலை: பேரறிவாளன் விடுதலைக்கு விஜய்சேதுபதி குரல்..?

ராஜீவ்காந்தி கொலை: பேரறிவாளன் விடுதலைக்கு விஜய்சேதுபதி குரல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi Raise his Voice for Perarivalan Releaseராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

எனவே இவர்களின் விடுதலைக்காக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் அவர்களின் தலைமையில், வருகிற ஜூன் 11ஆம் தேதி வேலூர் சிறையில் இருந்து சென்னை கோட்டை வரை பிரம்மாண்ட பேரணி நடைபெறவுள்ளது.

இந்த பிரம்மாண்ட பேரணியில் இணைய பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் இதற்கு ஆதரவாக சத்யராஜ் பேசியிருந்தார். தற்போது நடிகர் விஜய் சேதுபதியும் இந்த பேரணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

25 வருடம் என்பது கால் நூற்றாண்டு. அவர்களின் பகுதி வாழ்க்கையே சிறையிலே முடிந்தது மிகக்கொடுமையான விஷயம்.

எனவே அவர்களின் விடுதலைக்காக இந்த பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த மாபெரும் பேரணிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளாராம்.

கோயில் பிரசாதங்களுக்கு அனுமதியில்லை… இளையராஜாவுக்கு ஏற்பட்ட சோதனை..!

கோயில் பிரசாதங்களுக்கு அனுமதியில்லை… இளையராஜாவுக்கு ஏற்பட்ட சோதனை..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayaraja Detained at Bengaluru Airportதனது குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார் இளையராஜா.

அப்போது அவர் கைவசம் தேங்காய், விபூதி உள்ளிட்ட கோயில் பிரசாதப் பொருட்கள் இருந்துள்ளன.

விமான நிலைய அதிகாரிகள் இளையராஜாவை சோதனையிட்ட போது இந்த பிரசாத பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.

மேலும், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரது குடும்பத்தாரை காத்திருக்க வைத்துள்ளனர்.

இதன் கார்த்திக் ராஜா இந்த நிகழ்வை போட்டோ எடுத்துள்ளார்.

அதன்பின்னர் ஏற்பட்ட சில பரபரப்புகளுக்கு பின்னர் பிரசாதப் பொருட்களை எடுத்து செல்ல போலீசார் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

‘ரஜினி பாதுகாப்பு… நாங்களும் பெரிய ஆளுதான்..’ தனுஷ் பன்ச்..!

‘ரஜினி பாதுகாப்பு… நாங்களும் பெரிய ஆளுதான்..’ தனுஷ் பன்ச்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush is the mix of Rajinikanthபிரபு சாலமன் இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ், கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ள படம் தொடரி.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இதுநாள் வரை மென்மையான காதலை சொன்ன பிரபு சாலமன் இதில், ஆக்ஷன் கலந்த காதலை ஓடும் ரயிலில் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்.

இப்படத்தின் ட்ரைலரில் தனுஷ் பேசுவதாக ஒரு பன்ச் இடம்பெற்றுள்ளது. அதில்….

“தளபதி படம் பாத்திருக்கீங்களா. அதுல மெகா ஸ்டார் மம்மூட்டிக்கே எங்க சூப்பர் ஸ்டார் ரஜினிதாங்க பாதுகாப்பு. நாங்களும் பெரிய ஆளுதான்.” என்று சொல்வதாக உள்ளது.

தற்போது இந்த டயலாக்கை வைத்து மீம்ஸ்களை உருவாக்கி இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் இவர்களது ரசிகர்கள்.

More Articles
Follows