தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் ’முந்தானை முடிச்சு’.
கடந்த 1983ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நாயகியாக ஊர்வசி நடித்திருந்தார்.
சூப்பர் டூப்பர் ஹிட்டான் இந்த படத்தில் இடம் பெற்ற முருங்கைக்காய் சீன்ஸ் இன்றுவரை பிரபலம்தான்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பிறகு இப்பட ரீமேக்கை உருவாக்கவுள்ளார் கே.பாக்யராஜ்.
’முந்தானை முடிச்சு’ ரீமேக்கில் பாக்கியராஜ் உடன் சசிகுமார் இணைய உள்ளதாகவும், ஜேஎஸ்பி சதீஷ்குமார் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உரிமையை ஏவிஎம் நிறுவனத்திடம் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.