‘முந்தானை முடிச்சு’ புகழ் தவக்களை மரணம்; நடிகர் சங்கம் இரங்கல்

‘முந்தானை முடிச்சு’ புகழ் தவக்களை மரணம்; நடிகர் சங்கம் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Munthanai Mudichu fame actor Thavakalaiஇயக்குனர் திரு.கே.பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படத்தில் தவக்களை என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து காமெடி நடிகராக பிரபலமானவர் சிட்டிபாபு என்ற தவக்களை.

அதனைத் தொடர்ந்து இவர் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

திருமணமான இவருக்கு தற்போது 42 வயதாகிறது. குழந்தை இல்லை.

இந்நிலையில் இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது..

தனது இயல்பான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனி முத்திரை பதித்தவர். திரு. சிட்டிபாபு என்ற தவக்களை அவர் எதிர்பாராதவிதமாக காலமானதை அறிந்து மிகவும் வேதனையடைகிறோம்.

அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கும், நடிகர் சமூகத்துக்கும் மிகபெரிய இழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தி பெற பிராத்திக்கிறோம்.

இவ்வாறு நடிகர் சங்கம் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

Munthanai Mudichu fame actor Thavakalai passed away

வேதாளத்திற்கு மட்டுமில்லை பைரவாவுக்கும் அதான் பிரச்சினையாம்

வேதாளத்திற்கு மட்டுமில்லை பைரவாவுக்கும் அதான் பிரச்சினையாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Ajithகடந்த 2015ஆம் ஆண்டு அஜித் நடித்த வேதாளம் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது.

இப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றது.

ஆனால் வசூலில் மாபெரும் சாதனை படைக்க வேண்டிய இப்படம் அந்த ஆண்டு பெய்த கடும் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு பைரவா படம் வெளியானது.

இப்படம் சாதனை படைக்க வேண்டிய நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டங்களால் இதன் வசூலும் வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்த பிரச்சினையின் போது வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக படம் தோல்வியை தழுவியது.

இத்தோல்வியை இயக்குனர் பார்த்திபன் பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Reason Behind Why Vedhalam and Bairavaa not performed well in Box office Collection

சூர்யாவுடன் முடித்துக்கொண்டு அஜித்துக்காக ரெடியாகும் தியேட்டர்

சூர்யாவுடன் முடித்துக்கொண்டு அஜித்துக்காக ரெடியாகும் தியேட்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chennai kasi theatreபுதுப்படங்களின் ரிலீஸின் போது ரசிகர்களின் பல்ஸை அறிய சில நடிகர்கள் தியேட்டருக்கு நேரடி விஜயம் செய்வதுண்டு.

அப்போது அவர்கள் சத்யம் போன்ற மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களுக்கு செல்ல மாட்டார்கள்.

அதற்கு காரணம் அங்குள்ள ரசிகர்கள் எந்த காட்சியை ரசிக்கிறார்கள்? எதை வெறுக்கிறார்கள் என்பதே தெரியாது. அமைதியாக பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

இதனால் திரையிலகினர் பெரும்பாலும் தேர்வு செய்யும் தியேட்டர் காசி தியேட்டராகத்தான் இருக்கும்.

ஆனால் தற்போது காசி தியேட்டர் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவதால், மூடப்பட்டுள்ளது.

இந்த தியேட்டரில் இறுதியாக ரிலீசான படம் சூர்யா நடித்த சிங்கம் 3 படம்தான்.

இத்தியேட்டர் முழுமையாக ரெடியான உடன் ரிலீசாகப் போகும் படம் எது தெரியுமா? அது அஜித்தின் விவேகம் படம்தானாம்.

Chennai Kasi theater under renovation

பாலா இயக்கத்தில் ஜோதிகா-ஜிவி. பிரகாஷின் கேரக்டர்கள்

பாலா இயக்கத்தில் ஜோதிகா-ஜிவி. பிரகாஷின் கேரக்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash Jyothika Balaதாரை தப்பட்டை படத்திற்கு பிறகு எவரும் எதிர்பாராவிதமாக பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தை EON Studios நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது.

இதில் முக்கிய வேடத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்.

இதன் சூட்டிங் ஓரிரு நாளில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தில் இவர்களின் கேரக்டர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜி.வி. பிரகாஷ் இதில் வில்லனாக நடிக்கிறாராம். ஜோதிகாவுக்கு போலீஸ் அதிகாரி வேடம் என கூறப்படுகிறது.

இது முற்றிலும் ஒரு த்ரில்லர் படம் என தகவல்கள் வந்துள்ளன.

Jyothika and GV Prakash characters in Bala direction

சீரியஸ் படங்கள்; சிங்கம் ஸ்டைல் மீசை ஏன்.? எமன் டைரக்டர் ஓபன் டாக்

சீரியஸ் படங்கள்; சிங்கம் ஸ்டைல் மீசை ஏன்.? எமன் டைரக்டர் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yamanபிரபல ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர் அவர்கள் நான் என்ற படம் மூலம் டைரக்டர் ஆனார்.

இதனையடுத்து அமரகாவியம் என்ற படத்தை எடுத்தார்.

இந்நிலையில் மீண்டும் விஜய் ஆண்டனியை வைத்து எமன் படத்தை இயக்கினார்.

இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் ஆதரவை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஜீவா சங்கரிடம் சில கேள்விகளை கேட்டபோது அவர் கூறியதாவது…

நான், எமன் உள்ளிட்ட படங்கள் சீரியஸ் படங்களாகவே உள்ளது. ஏன் என்றதற்கு?

அடிப்படையிலேயே நான் சீரியஸ் டைப்தான். எனவே எனக்கு வருகிற தெரிகிற விஷயத்தை பெஸ்ட்டாக கொடுக்க நினைக்கிறேன்.

முந்தைய காலத்து கிராமத்து மனிதர்களின் போட்டோக்களை பார்த்தபோது ஒரு மீசை ஸ்டைல் பிடித்து இருந்தது.

எனவேதான் அதே போன்ற மீசையை வைத்தேன். மற்றபடி சிங்கம் படத்தில் ஸ்டைல் மீசைக்கும் இதற்கு சம்பந்தமில்லை.

சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு படங்களை இயக்க உள்ளேன். சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றார்.

Director Jeeva Shankar about his yaman movie

தனுஷ்-லாரன்ஸின் மோதலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

தனுஷ்-லாரன்ஸின் மோதலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Lawranceமுதன்முறையாக தனுஷ் இயக்குனராகி இயக்கிவரும் படம் பவர் பாண்டி.

ராஜ்கிரண் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் இசையை மார்ச் 9ஆம் தேதி வெளியிடவிருக்கிறார் தனுஷ்.

இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நாளில்தான் பி. வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா படமும் வெளியாகிறது.

இந்த இரண்டு படங்களுக்கும் நிறைய எதிர்பார்ப்பு உள்ளதால் இரண்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

SivaLinga and Power Paandi movie clash on 14th april 2017

More Articles
Follows