குழந்தைகளுக்கு பிடித்த 2 டைட்டில்கள்; ஒரே நாளில் மோதும் திலீப் சுப்பராயன்

balloon and sangu chakkaramகுழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டு பொருட்களில் மிக முக்கியமானவை பலூன்.

அதுபோல் தீபாவளி பட்டாசுகளில் பிடித்தவை சங்கு சக்கரம்.

தற்போது இந்த இரண்டு பெயர்களிலும் இரு படங்கள் உருவாகியுள்ளது.

இவையிரண்டும் வருகிற டிசம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

பலூன் படத்தை சினிஷ் என்பவர் இயக்க ஜெய், அஞ்சலி, ஜனனிஐயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயன் தயாரித்துள்ளார்.

மாரிசன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள சங்கு சக்கரம் படத்தை சினிவாலா பிக்சர்ஸ் சார்பாக சதீஷ் மற்றும் லியோ விசன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் திலீப்சுப்ராயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Overall Rating : Not available

Latest Post