நஷ்ட பணத்தை ஜெய் திருப்பி தரவேண்டும்; பலூன் படத்தயாரிப்பாளர் போர்க்கொடி

நஷ்ட பணத்தை ஜெய் திருப்பி தரவேண்டும்; பலூன் படத்தயாரிப்பாளர் போர்க்கொடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Jaiசினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி, யோகி பாபு ஆகியோர் நடித்த ‘பலூன்’ படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி வெளியானது.

தற்போது ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில் பட இயக்குனர் சினிஷ் நான் மகிழ்ச்சியாக இல்லை என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தித்துள்ளார்.

இந்நிலையில், படத்தை தயாரித்த 70 எம்.எம். என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் ஜெய் மீது புகார் மனு அளித்திருக்கிறது.

அதில் நடிகர் ஜெய் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும், அவரால் ரூ.1.50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் தெரிவிக்கபட்டுள்ளதாவது..

பலூன் படத்தை 2017 ஜனவரி மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால் 9 மாதங்கள் கழித்து டிசம்பர் 29-ஆம் தேதி தான் வெளியிட முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் நடிகர் ஜெய் தான்.

* 2016, ஜுன் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே ஜெய் தேதிகளை சரிவர கொடுக்கவில்லை.

* பின்னர் செப்டம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால் டப்பிங்குக்கு கூட வராமல் மனஉளைச்சலை ஏற்படுத்தினார்.

* அவரது தொடர் டார்ச்சரால் இயக்குநர் சினிஷ் கொடைக்கானலில் தற்கொலை முயற்சி செய்ய தூண்டும் மனநிலைக்கு தள்ளப்பட்டார்.

கொடைக்கானலில் 20 நாட்கள் சூட் செய்வதற்காக செட் போட்டு ஜெய் வருவார் என காத்திருந்தோம். ஆனால் அவரை போனிலோ, நேரிலோ எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

* தினமும் குடித்துவிட்டு தான் சூட்டிங்குக்கு வருவார். நடிப்பில் கவனம் செலுத்தாமல் மெத்தனப் போக்குடன் இருப்பார்.

* அவரது இந்த தவறான நடவடிக்கையை நாங்கள் சுட்டிக் காட்டினோம். அதில் கோபமடைந்து அவர் படப்பிடிப்பில் இருந்து வெளியேறினார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது.

இறுதியில் நாங்கள் வாங்கிய கடன், அதற்கான வட்டி என மொத்தமாக ரூ.1.50 அதிகமாகவே இவரால் செலவானது.

* எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஜெய் தான் காரணம். அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. இது எங்களுடன் பணிபுரிந்த அனைவருக்கும் தெரியும்.

* நஷ்ட தொகையான ரூ.1.50 கோடியை ஜெய் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு உண்டா.? ஏஆர்.ரஹ்மான் விளக்கம்

ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு உண்டா.? ஏஆர்.ரஹ்மான் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and AR Rahmanசினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார் இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான்.

இதனை முன்னிட்டு சென்னையில் ஜனவரி 12-ம் தேதி ‘நேற்று இன்று நாளை’ என்னும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

எனவே இது தொடர்பாக பேச பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் ஏஆர். ரஹ்மான்.

அப்போது சில கேள்விகளுக்கு ஏ.ஆர். ரஹ்மான பதிலளித்தார்.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் நல்லது செய்ய சரியான தலைமை இல்லை என கருதி இருக்கலாம்.

ஆன்மிக அரசியல் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். அவரது எண்ணம் நல்லதாகவே இருக்கும் என நான் நினைக்கிறேன்.

அரசியலுக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற அவர்கள் உழைக்க வேண்டும்.” என்றார்.

ஆர்கே. நகரில் ஓட்டு விற்பனை பேச்சு; கமல் மீது பாய்ந்தது வழக்கு

ஆர்கே. நகரில் ஓட்டு விற்பனை பேச்சு; கமல் மீது பாய்ந்தது வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kamal Haasanசென்னை ஆர்.கே.நகரில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் சுயேச்சையாக நின்ற டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.

பணநாயகம் வென்றதாக தினகரன் வெற்றி குறித்து எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தது.

அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வந்த கமல்ஹாசனும் சமீப காலமாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.

சினிமா சூட்டிங்கில் கமல் பிசியாக இருப்பதால் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து கமல் கருத்து தெரிவித்தார்.

அதில், ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் வாக்களிப்பதற்கு பணம் வாங்கியது திருடனிடம் பிச்சை எடுத்ததற்கு சமம் என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்து இருந்தார்.

ஆளும் அதிமுக கட்சி ஒரு ஓட்டுக்கு 6,000 என்றும் சுயேச்ட்சை வேட்பாளர் ஒரு ஓட்டுக்கு 20,000 என்று ஆர்.கே. நகரில் ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு தரப்பும் விலை நிர்ணயித்தனர். என கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், டி.டி.வி. தினகரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் கோவை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

கோவை கணபதி மணியக்காரன் பாளையத்தை சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் இளங்கோவன் கோவை ஜே.எம். எண்-2 கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ராஜ் குமார் முன்னிலையில் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் 80 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் மக்களிடம் மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டு உள்ளது.

ஆனால் நடிகர் கமல்ஹாசன் திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கும் உண்டா என எனது கட்சிக்காரருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவித்து உள்ளார்.

இதனை பார்த்து எனது நண்பர்கள் என்னை கிண்டல் செய்கிறார்கள். இது மனவேதனை அளிக்கிறது. எனவே கமல்ஹாசன் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 500, 501-ன்படி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு வருகிற 12-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார் உத்தரவிட்டார்.

இளங்கோவன் ஏற்கனவே பீப் பாடல் சர்ச்சையில் சிம்பு, அனிருத் மீது வழக்கு தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலுக்கு ஆதரவு சொன்னீங்க; ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார்; இப்போ சொல்லுங்க ஆர்கே.சுரேஷ்.?

கமலுக்கு ஆதரவு சொன்னீங்க; ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார்; இப்போ சொல்லுங்க ஆர்கே.சுரேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Actor RKSuresh support for Rajinis political entryசில மாதங்களுக்கு (செப்டம்பர் 2017 23ஆம் தேதி) முன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர். கே. சுரேஷ்.

அப்போது தான் திருமணம் செய்யப்போகும் சீரியல் நடிகை திவ்யாவை அறிமுகம் செய்துவைத்தார்.

அதை தொடர்ந்து அவர் பேசும்போது கமலின் அரசியல் அனுகுமுறை, அவரின் திட்டமிடல், தெளிவான முடிவு என்னை கவர்ந்துள்ளது. எனவே கமல் அரசியலுக்கு வந்தால் அவருக்குதான் என் ஆதரவு என்றார்.

மேலும் கடந்த 20 வருடங்களாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தெளிவான முடிவு எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் கடந்த (டிசம்பர் 31, 2017) சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்த் தன் அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துவிட்டார். கட்சி விவரங்களை விரைவில் அறிவிக்கவுள்ளார்.

இப்போது ஆர்.கே.சுரேஷின் ஆதரவு நிலைப்பாடு என்ன? என்பதை அவர் சொல்வாரா?

Will Actor RKSuresh support for Rajinis political entry

தன் அரசியலுக்கு பிள்ளையார்சுழி போட்ட பாட்ஷா தயாரிப்பாளரை சந்தித்தார் ரஜினி

தன் அரசியலுக்கு பிள்ளையார்சுழி போட்ட பாட்ஷா தயாரிப்பாளரை சந்தித்தார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth met RM Veerappanஆர்எம்.வீரப்பன் தயாரித்த ‘பாட்ஷா’ பட வெற்றி விழாவின்போது ஜெயலலிதா ஆட்சி பற்றி கடுமையாக விமர்சித்தார் ரஜினிகாந்த்.

இதனால் அப்போது அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனை பதவியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.

அப்போதுதான் ரஜினியின் அரசியல் வாய்ஸ் ஆரம்பமானது.

இந்நிலையில் இன்று அரசியல் அறிவிப்புக்கு பின்னர் ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தார் ரஜினிகாந்த்.

அதுபற்றிய விவரம் வருமாறு…

சென்னை தியாகாராய நகர் திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வீட்டுக்குச் சென்ற நடிகர் ரஜினி காந்த் அவரைச் சந்தித்துப் பேசினார்.

சுமார் 10 நிமிடம் வரை நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பின் அவர் புறப்பட்டுச் சென்றார்.

ஆர்.எம்.வீரப்பன் நடிகர் ரஜினியின் நீண்ட கால நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் ரஜினிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்…: விஷால்

தலைவர் ரஜினிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்…: விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Vishalசினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே தன் அரசியல் பிரவேசத்தை அதிரடியாக அறிவித்துவிட்டார் ரஜினிகாந்த்.

அவருக்கு ஒரு சில எதிர்ப்பு வந்தாலும், பல்வேறு தரப்பிலும் ஆதரவு பெருகி வருகிறது.

ஆதரவு வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால்.

ரஜினியின் ஆன்மிக அரசியல் குறித்து செய்தியாளர்களிடம் விஷால் பேசுகையில்…

“கட்சி தொடங்கி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ரஜினி சார் அறிவித்துள்ளார்.

அரசியல் என்பதும் சமூக சேவைதான். தலைவன் அரசியல்ல இறங்கிட்டார்.

நான் அவருக்குத் தொண்டனா ரோட்ல இறங்கி அத்தனை தொகுதியிலும் பிரச்சாரம் பண்ணுவேன்.

அவருக்கு உதவியா இருப்பேன்,” என்று தெரிவித்துள்ளார்.

More Articles
Follows