சிவகாமி-கட்டப்பா கேரக்டரை வைத்து ராஜமௌலியின் அடுத்த பாகுபலி

சிவகாமி-கட்டப்பா கேரக்டரை வைத்து ராஜமௌலியின் அடுத்த பாகுபலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

baahubaliஇயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களுமே இந்தியளிவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

இப்படத்தின் தொடர்ச்சி இனி வெளியாகுமா? என ரசிகர்கள் காத்திருந்தனர். தற்போது அது குறித்த சந்தோஷமான தகவல்கள் வந்துள்ளது.

அந்த படத்தில் இடம் பெற்ற ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி கேரக்டர் மற்றும் சத்யராஜ் நடித்த கட்டப்பா கேரக்டரை வைத்து 3 பாகங்களை எடுக்க திட்டமிட்டுள்ளாராம் ராஜமௌலி.

சிவகாமியின் சிறுவயது சாகசம், திருமணம், மற்றும் அவர் சிறுவயதிலேயே கலந்து கொண்ட போர் ஆகியவை குறித்து திரைப்படமாக இயக்கவுள்ளார்.

ஆனால் இந்த படம் தியேட்டரில் வெளியாகாது என்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக இந்த படங்களை ராஜமெளலி இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிவகாமி மற்றும் கட்டப்பா கேரக்டர்களில் ஏற்கனவே நடித்த ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் நடிக்கவுள்ளதாகவும், மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.

இந்த படத்தை ராஜமெளலியுடன் தேவகட்டா என்பவரும் இணைந்து இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

போதையில் கார் ஓட்டி போலீசிடம் சிக்கிய பாரதிராஜா மகன் மனோஜ்

போதையில் கார் ஓட்டி போலீசிடம் சிக்கிய பாரதிராஜா மகன் மனோஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Drunken drive case booked against Bharathirajas son Manojபிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் சென்னை ஸ்டெர்லிங் சாலையில் தனது பி.எம்.டபிள்யூ காரில் சென்று கொண்டிருந்தார்.

அவரு காரை சோதனையிடுவதற்கான போலீசார் நிறுத்த முயற்சித்துள்ளனர்.

ஆனால் காரை நிறுத்தாமல் மனோஜ் வேகமாக சென்றதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அடுத்து, அடுத்த சிக்னலில் காரை மறிக்கும்படி போக்குவரத்து போலீசார், தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசார், மனோஜின் காரை மறித்து நிறுத்தியுள்ளனர்.

மேலும், போலீசார் நிறுத்த சொல்லியும் காரை நிறுத்தாமல் சென்றது குறித்து மனோஜிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் குடிபோதையில் இருப்பது போலீசாருக்கு தெரிந்தது.

இதனை அடுத்து சுவாச சோதனை உபகரணம் மூலமாக நடத்தப்பட்ட ஆய்வில் மனோஜ் குடி போதையில் இருப்பது உறுதியானது.

இதனை அடுத்து அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரது பி.எம்.டபிள்யூ. காரைப் பறிமுதல் செய்துள்ள போலீசார் அபராதம் செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Drunken drive case booked against Bharathirajas son Manoj

தமிழ் சினிமாவை காப்பியடிக்காதீங்க; *வெடிகுண்டு பசங்க* குழுவினருக்கு நாசர் கோரிக்கை

தமிழ் சினிமாவை காப்பியடிக்காதீங்க; *வெடிகுண்டு பசங்க* குழுவினருக்கு நாசர் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nassarஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ்”சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் “வீடு புரொடக்ஷன்ஸ்”சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”.

முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட இப்படத்தை பெண் இயக்குநரான Dr.விமலா பெருமாள் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் நாயகனாக தினேஷ் குமார், நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

“டோரா”, “குலேபகாவலி” படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள்.

பி. சிதம்பரம் ஒளிப்பதிவாளராகவும், ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், நடிகர்கள் நாசர், சதீஷ், பிருத்விராஜ், நடிகை மானு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் நடிகர் நாசர் பேசும் போது,

“வெடிகுண்டு பசங்க’ படத்தின் வரவு அவசியமான ஒன்று. மலேசிய வாழ் தமிழர்கள் எப்போதுமே, தமிழ்த் திரையுலகினருக்கு பெரும் பலமாகவும், முதுகெலும்பாகவும் விளங்குபவர்கள்.

இசை, ஓவியம், நாட்டியம் என எத்தனை கலைகள் இருந்தாலும், சினிமாவுடன் நெருங்கிய உறவு வைத்திருக்கிறார்கள். சினிமா தான் மலேசிய தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் தொப்புள்கொடியாக இருக்கிறது.

அங்கிருந்து இது போல இன்னும் நிறைய திரைப்படங்கள் இங்கு வர வேண்டும். முக்கியமாக அவையாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும், அங்கிருக்கும் வாழ்வியலை பிரதிபலிப்பவையாகவும் இருக்க வேண்டும்.

இங்கிருக்கிற கலாச்சாரம், வாழ்வியல் சார்ந்து உருவாகிற தமிழ் சினிமாக்களைப் பார்த்து தயவுசெய்து, படம் செய்யாதீர்கள்.

உங்களுடைய கலாச்சாரம், வாழ்வியல் சார்ந்த படங்களை உருவாக்குங்கள். அதைப் பார்க்க நாங்கள் ஆசைப்படுகிறோம்.

முழுக்க முழுக்க தமிழகத்தின் எல்லைக்குள்ளேயே, இந்திய எல்லைக்குள்ளேயே எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் எல்லாம், உலகம் முழுக்க பல மூலைகளில் திரையிடப்படும் போது, ஏன் அங்கே உருவாகிற படங்களை தமிழகத்தில் வெளியிடக் கூடாது? என்கிற கேள்வி எனக்குள் இருந்து வந்தது.

பல முறை நான் சிங்கப்பூர், மலேசியா செல்லும் போதெல்லாம் அங்கிருக்கிற தயாரிப்பாளர்களிடமும், திரைத்துறையினரிடமும் விவாதிப்பேன். அதற்கெல்லாம் விடையாக இந்த “வெடிகுண்டு பசங்க” வந்திருக்கிறது.” என்று பேசினார்.

பின்னர் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ்,

“அவ்வளவு பெரிய ஆஸ்ட்ரோ நிறுவனம், ஜனனி பாலுவை நம்பி இந்த “வெடிகுண்டு பசங்க”படத்தை ஒப்படைத்திருப்பது என்பது சாதாரண விஷயமில்லை.

இப்படத்தின் கதாநாயகன் தினேஷ் குமார் எனக்கு வராத ஒன்றை மிகவும் நன்றாக செய்திருக்கிறார், அது தான் நடனமாடுவது. இசையமைப்பாளர் விவேக் மெர்வினின் இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இந்த பாடல்களே படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிறது. முன்னதாக நாசர் சொன்னது போல, மலேசியாவில் உள்ள வாழ்வியலை ஒட்டியே படமாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அது கலைப்படமாக அமைந்து விடக் கூடாது.

பொழுதுபோக்கிற்கான அம்சங்களுடன் இருக்கும் போது நிச்சயம் ரசிகர்கள் விரும்புவார்கள்.

இங்கு தலைப்பு பதிவு செய்வதில் உள்ள சிக்கல்களைப் பற்றி பேசினார்கள். முறையாக பதிவு செய்யப்பட்ட தலைப்புகளை நோட்டீஸ் போர்டில் வெளிப்படையாக போட வேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் தலைப்பு விசயத்தில் நடக்கிற கமிஷன் சமாச்சாரங்களைக் கட்டுப்படுத்தலாம்.

இப்போதிருக்கும் சினிமா சூழலில் நூறு நாட்கள் ஓடுவது என்பது சாத்தியமில்லை.

திருட்டு விசிடி, இணையத் திருட்டு போன்றவற்றைத் தாண்டியும், படம் தரமானதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வெற்றி பெறும். இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும் போது தொழில்நுட்ப ரீதியாக தரமான படைப்பாகவே இருக்கிறது.

எனவே இந்த “வெடிகுண்டு பசங்க” வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்று பேசினார்.

ஆர்.கே. சுரேஷின் வேட்டை நாய் டீசரை வெளியிட்ட 3 ஹீரோக்கள்

ஆர்.கே. சுரேஷின் வேட்டை நாய் டீசரை வெளியிட்ட 3 ஹீரோக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vettai naai posterசுரபி பிக்சர்ஸ், தாய் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டை நாய் ‘. ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார்.

நடிகர் ராம்கி முக்கிய வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக சுபிக்ஷா நடிக்க ரமா, நமோ நாராயணன், விஜய் கார்த்திக், மற்றும் பலரும் நடிக்கிறார்கள் .

இப்படத்தை ஜெய்சங்கர் இயக்குகிறார். ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுகம் கணேஷ் இசையமைக்கிறார்.

தயாரிப்பு P. சுரபி ஜோதிமுருகன், விஜய் கார்த்திக். தன் படத்து டீசரை முன்னணி நாயகர்கள் வெளியிட்டு இருப்பதில் உற்சாகமாக இருக்கிறார் பட நாயகன் ஆர்.கே சுரேஷ்.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை விஷால், ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகிய மூன்று நாயகர்களும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

Vettainaai Teaser #Link

https://youtu.be/uWYT82UhCrg

தம் அடிக்கும் விஜய்க்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்; சர்காருக்கு பயந்த *சர்கார்* டீம்

தம் அடிக்கும் விஜய்க்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்; சர்காருக்கு பயந்த *சர்கார்* டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkar first lookசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடித்து வரும் சர்கார் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் தம் அடிப்பது போன்று போஸ் கொடுத்திருந்தார்.

இதற்கு விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தாலும், அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் எதிர்ப்புகள் கிளம்பின.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர், அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் புகைபிடித்தபடி விஜய் இருக்கும் படங்களை உடனே இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உடனடியாக நீக்காவிட்டால் அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு திரைத்துறையினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து சர்கார் படத்தின் புகைப்பிடிக்கும் போஸ்டரை நீக்கியுள்ளது.

காலா 40 கோடி நஷ்டமா.? ஈடுகட்ட தனுஷ் சம்மதம்.? எது உண்மை.?

காலா 40 கோடி நஷ்டமா.? ஈடுகட்ட தனுஷ் சம்மதம்.? எது உண்மை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Whether Dhanush accept to repay for Kaala lossரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா படத்தை ரஞ்சித் இயக்க, தனுஷ் தயாரித்திருந்தார்.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.

இப்படம் வெளியாகி இன்றோடு சரியாக ஒரு மாதம் ஆகியுள்ளது.

இந்த படத்தை வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் எவரும் படத்தால் நஷ்டம் என சொல்லவில்லை.

அண்மையில் கூட ஒரு பிரபல தியேட்டர் உரிமையாளர் தன் ட்விட்டரில் காலா படத்தால் தனக்கு லாபம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காலை முதல் சில மணி நேரங்களாக காலா படம் தோல்வி. அதனால் அனைவருக்கும் நஷ்டம் எனவும் அந்த 40 கோடி நஷ்டத்தை தயாரிப்பாளர் தனுஷ் தரவுள்ளதாக செய்திகள் வந்த வண்ணமிருந்தன.

ஆனால் இது குறித்து காலா படக்குழுவினர் சார்பில் எந்த ஒரு உறுதியான தகவலும் இல்லை.

அப்படியிருக்கையில் இப்படி ஒரு செய்தி எப்படி வருகிறது? என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.

காலா சம்பந்தப்பட்ட ரஜினி, தனுஷ், ரஞ்சித் ஆகியோர் மௌனம் கலைத்தால் மட்டுமே இதற்கு விடை கிடைக்கும்.

Whether Dhanush accept to repay for Kaala loss

More Articles
Follows