மெர்சலை ஓட்டிய தியேட்டருக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

மெர்சலை ஓட்டிய தியேட்டருக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal stillsதிருப்பூர் முருங்கபாளையத்தில் சரண் சினிமா தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரின் உரிமத்தை புதுப்பிக்குமாறு வருவாய்த்துறை சார்பில் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் உரிமத்தை அவர்கள் உரிய காலத்திற்குள் புதுப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திரைப்படம் திரையிடக்கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

எனவே அந்த சினிமா தியேட்டரில் படம் திரையிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுமதி இல்லாமலும், உரிமம் புதுப்பிக்கப்படாமலும் தியேட்டரில் விஜய் நடித்த ‘மெர்சல்’ திரையிடப்பட்டது.

இதனை அறிந்த அதிகாரிகள் சரண் சினிமா தியேட்டருக்கு சென்று ‘சீல்’ வைத்தனர்.

இதையடுத்து தியேட்டர் மூடப்பட்டு சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

விஜய்யுடன் போட்டோ எடுத்தது குத்தமா? இப்படி பண்றாங்களே

விஜய்யுடன் போட்டோ எடுத்தது குத்தமா? இப்படி பண்றாங்களே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Alisha abdullah slams vijay fansநடிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள பலரும் ஆசைப்படுவது உண்டு.

அதுபோல் நடிகையும் பைக் ரேசருமான அலிஷா அப்துல்லா நடிகர் விஜய்யுடன் ஒரு போட்டோ எடுத்துள்ளார்.

அதை தன் வாட்ஸ்அப்பில் புரொபைல் பிக்சராக வைத்துள்ளார்.

அதை அவரது அனுமதியில்லாமல் எடுத்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அது ஊரெல்லாம் பரவ, தற்போது அதற்கு தன் கண்டத்தை தெரிவித்துள்ளார் அலிஷா.

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அலிஷா கோபத்துடன் பதிவேற்றம் செய்துள்ளார்.

It gets very annoying when you don’t have your privacy! People steal your display picture .. why? For what ? Without your knowledge

— Alisha abdullah (@alishaabdullah)

விவேகம் நஷ்டத்தை ஈடுகட்ட சம்பளத்தை குறைத்த அஜித்..?

விவேகம் நஷ்டத்தை ஈடுகட்ட சம்பளத்தை குறைத்த அஜித்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam ajithவீரம் மற்றும் வேதாளம் படங்களின் வெற்றியால் தனது அடுத்த படமான விவேகம் படத்தையும் சிவாவே இயக்க வாய்ப்பு கொடுத்தார் அஜித்.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.

ஆனால் இப்படத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தது.

இதனால் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சிவா மற்றும் அஜித் கூட்டணி 4வது முறையாக புதிய படத்திற்காக இணையவுள்ளனர்.

இப்படத்தையும் சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கும் என கூறப்படுகிறது.

எனவே விவேகம் ஏற்படுத்திய நஷ்டத்தை இப்படத்தின் சம்பளத்தில் குறைத்து அதை ஈடுகட்ட அஜித் சம்மதம் தெரிவித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

நகுல் நடிக்கும் செய் படத்தில் பாகிஸ்தான் பாடகர் அறிமுகம்

நகுல் நடிக்கும் செய் படத்தில் பாகிஸ்தான் பாடகர் அறிமுகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sei-movie-01நகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘செய்’ படத்தில் இடம்பெறும் ‘இறைவா…’ என்ற சூஃபி பாடலை பாடியிருப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் பாகிஸ்தான் பாடகரான ஆதிஃப் அலி.

ஏற்கெனவே பல பாகிஸ்தானி பாடல்களையும், ஹிந்தி பாடல்களையும் ஆதிஃப் அலி பாடியிருக்கிறார் என்பதோடு, ராய் லக்ஷ்மி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஜூலி 2’ படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பாடகர் ஒருவர் தமிழில் பாடுவது இதுவே முதல்முறை என்பதை அறிந்த ஆதிஃப் அலி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இவருடன் இணைந்து ஹிந்துஸ்தானி பாடகரான சபதஸ்வரா ரிஷுவும் ‘இறைவா….’ பாடலை பாடியுள்ளார்.

கேட்டவுடன் அனைவருக்கும் பிடித்துப்போகும் பாடலாகவும், நீண்ட நாட்கள் ஒலிக்கும் பாடலாகவும் இந்த சூஃபி பாடல் இருக்குமென தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிக்ஸ் லோபஸ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார்.

மேலும் ‘செய்’ ஆல்பத்தில் பிரபல முன்னணி பாடகர்களான ஷங்கர் மகாதேவன், சோனு நிகம், ஷ்ரேயா கோஷல், பென்னிதயாள் மற்றும் அறிமுக பாடகி கீதாஞ்சலி ஆகியோர் பாடியிருக்கும் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

‘ட்ரிப்பி டர்ட்டிள் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை மன்னு மற்றும் உமேஷ் இணைந்து தயாரித்துள்ளார்கள். டிசம்பர் 8ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகவிருக்கிறது.

Pakistan play back singer introducing in Sei movie

sei poster

2.0 பட டீசர்-டிரைலர் தாமதம்; குழப்பத்தில் ரஜினி ரசிகர்கள்

2.0 பட டீசர்-டிரைலர் தாமதம்; குழப்பத்தில் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini fans in confusion with release date of 2point0 teaser and trailerரஜினி-ஷங்கர் இணைந்துள்ள 2.0 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் 2 பாடல்கள் வெளியாகியுள்ளது.

மீதமுள்ள ஒரு பாடலை விரைவில் வெளியிட உள்ளனர்.

இதனையடுத்து நவம்பர் 22ம் தேதி ஹைதராபாத்தில் டீஸர் ரிலீஸ் மற்றும் டிசம்பர் 12ம் தேதி சென்னையில் டிரைலர் வெளியீடு என கூறப்பட்டது.

இந்நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதம் ஆகிவருவதால், இதன் டீசர் மற்றும் டிரைலர் வெளியீடும் தாமதம் ஆகும் என கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார்களாம்.

Rajini fans in confusion with release date of 2point0 teaser and trailer

ரஜினியை போல் ரசூல்பூக்குட்டியும் இந்தியாவின் கலை அடையாளம்… வைரமுத்து பேச்சு

ரஜினியை போல் ரசூல்பூக்குட்டியும் இந்தியாவின் கலை அடையாளம்… வைரமுத்து பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Resul Pookutty debut hero in the sound storyபால்ம்ஸ்டோன் மல்ட்டிமீடியா ராஜீவ் பனகல் & பிரசாத் பிரபாகர் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி முதல் முறையாக நடிகர் அவதாரம் எடுத்து, கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’.

பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைரமுத்துவின் வைர வரிகளுக்கு ராகுல்ராஜ் இசையமைத்திருக்கிறார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையை வெளியிட இயக்குனர் ஷங்கர் பெற்றுக்கொண்டார். படத்தின் டீசரை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார்.

இது ஒரு சராசரி விழா அல்ல, கலையில் ஒரு பெரிய சரித்திர நிகழ்வு. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஏ ஆர் ரகுமான், ஷங்கர், ரசூல் பூக்குட்டி ஆகியோர் இந்தியாவுக்கு வெளியே நம் இந்தியாவின் கலை அடையாளங்கள்.

ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் விருது பெற்றதோடு நின்று விடாமல், தன் தாய் மண்ணின் கலாச்சாரம், பண்பாட்டை பற்றிய ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் ரசூல்.

இந்தியாவிற்கு தலைநகரம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒருவனுக்கு அவனுடைய கிராமம் தான் தலைநகர், அதை ரசூல் புரிந்து வைத்திருக்கிறார். ஒலி தான் மொழி, சத்தம் எல்லாமே சங்கீதம். ஒலிப்பதிவாளர் என்பவர் ஒலியை பொறுக்குபவர்.

ரசூல் ஒரு சவுண்ட் எஞ்சினியர் அல்ல, அவர் ஒரு சவுண்ட் டிசைனர். உலகில் மிகச்சிறந்த லஞ்சம் பணிவு தான். அப்படி மிகவும் பணிவானவர் இயக்குனர் பிரசாத் பிரபாகர். மலையாளத்தின் கலாச்சாரத்தை சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்கள், இந்தியாவே இந்த படத்தை கொண்டாடும் என்றார் வைரமுத்து.

“பூரம் திருவிழாவின் ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் ரசூல் அதை பற்றி விளக்கி சொன்னபோது தான் அதன் பிரமாண்டம், அதன் பெருமை புரிந்தது.

10 லட்சம் மக்கள் கலந்து கொள்ள, 300 கலைஞர்கள் 3 மணி நேரம் இசையை நிகழ்த்துவார்கள். முன்னரே தெரிந்திருந்தால் என் படத்தில் ஏதாவது ஒரு இடத்தில் காட்சியாக வைத்திருப்பேன்.

அந்நியன் படத்தில் வரும் திருவையாறு தியாகராஜர் ஆராதனையை படமாக்கியதும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம். பூரம் விழாவை லைவாக ரெக்கார்டு பண்ணியிருக்கிறார் ரசூல்.

வரலாற்றில் இது ஒரு முக்கியமான பதிவு. ஸ்டுடியோவில் மட்டுமே ஒலியை பதிவு பண்ணாமல் வெளியே போய் நல்ல ஒலியை பதிவு செய்து மக்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்க கடுமையாக உழைக்கிறார் ரசூல் பூக்குட்டி என்றார் இயக்குனர் ஷங்கர்.

2002 ஆம் ஆண்டு லண்டனில் ஏ ஆர் ரகுமான் அவர்களை சந்தித்து, உங்களின் மிகப்பெரிய ரசிகன் என சொல்லியிருக்கிறேன்.

15 வருடங்களுக்கு பிறகு ஒரு இசையமைப்பாளராக, என்னுடைய இசை வெளியீட்டு விழாவில் அவரை சந்திப்பது எனது கனவு நனவான தருணம் என்றார் இசையமைப்பாளர் ராகுல் ராஜ்.

எனக்கு மிகவும் பிடித்த மொழி தமிழ். ராவணன் படத்தின் டப்பிங்கின் போது, வைரமுத்து அவர்கள் தம்பி தமிழுக்கு வா, நல்ல கதைகளை திரையில் கொடு, உனக்கு நான் ஆதரவு தருகிறேன் என்றார். இதோ வந்திருக்கிறேன், ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் முனைப்போடு.

பார்வையில்லாதவர்களும் ரசிக்கும் வகையில் ஒரு படத்தை கொடுத்திருக்கிறோம் என்றார் இயக்குனர் பிரசாத் பிரபாகர்.

என் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிப்ரவரி 22 மிகவும் முக்கியமான இரவு. அதிகாலை இரண்டு மணிக்கு எனக்கு ஒரு கதை சொல்ல வந்தார். அந்த கதை தான் இந்த ‘ஒரு கதை சொல்லட்டுமா’.

பூரத்தை லைவாக ரெக்கார்டு செய்வது என் கனவு. அந்த கனவை நிறைவேற்ற எனக்காக அமெரிக்காவில் இருந்து வந்தவர் தான் ராஜீவ் பனகல். இந்த படத்தின் ரெக்கார்டிங்கின் போது பல இடங்களுக்கு சென்று வந்தேன்.

பார்வையற்ற ஒருவர் கூட பூரம் திருவிழாவை உணர முடியும். எந்திரன் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து என்னை தென்னிந்திய சினிமாவுக்கு அழைத்து வந்த இயக்குனர் ஷங்கருக்கு நன்றி என்றார் படத்தின் நாயகன் ரசூல் பூக்குட்டி.

நடிகைகள் லிஸி, ரோகிணி, ரேவதி, குஷ்பூ, ஷோபனா, பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா சரத்குமார், கனிகா, நடிகர்கள் சரத்குமார், பாக்யராஜ், நாசர், இயக்குனர் கே எஸ் ரவிகுமார், எடிட்டர் ஆண்டனி, தயாரிப்பாளர் பிரவீன் கோகுலன், பெருவனம் குட்டன் மாரார் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் பெருவனம் குட்டன் மாரார் மற்றும் அவர்களின் நேரடி இசை நிகழ்வும் நடைபெற்றது.

Resul Pookutty debut hero in the sound story

the sound story audio launch

More Articles
Follows