அஷுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’; பிரமிக்க வைக்கும் டிரைலர்

அஷுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’; பிரமிக்க வைக்கும் டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ashutosh Gowarikers Panipat Trailer is an Absolute Visual Treatசாதனை இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர், பல்வேறு சிறப்பான படைப்புகளை நமக்கு கடந்த காலத்தில் வழங்கியிருந்தாலும், மீண்டும் அத்தகைய ஒரு பிரம்மாண்டமான, கம்பீரமான படைப்பை நம் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார்.

சஞ்சய் தத், கிரிதி சாணன், அர்ஜுன் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாகவிருக்கும் அதிரடி திரைப்படமான ‘பானிபட்’ வெளியீட்டு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த டிரைலர் வெளியீட்டுக்கு முன்னதாக, ஊடகவியலாலர்களுக்கென ஒரு நட்பு ரீதியிலான சிறப்பு சந்திப்பை அவர் மும்பையில் ஏற்பாடு செய்திருந்தார். அந்த சந்திப்பில்,டிரைலரின் சிறப்பு பிரீவ்யூ காட்சி திரையிடப்பட்ட நிலையில், டிரைலர் ஊடகவியலாளர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது.

திரைப்பட குழுவினர் இத்தகைய பாராட்டுகளுக்கிடையே, மூன்று நடிகர்களும் இடம்பெற்ற ஒரு புதிய டிஜிட்டல் போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்தனர். டிரைலர் மராட்டிய சாம்ராஜ்யத்தின் காவியக் கதையை விவரிப்பதாக அமைந்திருந்தது. அருமையான பின்னணி இசை, அழகிய பின்னணிகாட்சிகள், ஆடம்பரமான கலை பங்களிப்புகள் என அனைத்தும் ஒரே புள்ளியில் இணைந்து, ரசிப்போர் கண்களுக்கு விருந்தாகிறது.

இந்த படத்தில் அர்ஜுன் ஒரு போர் வீரனாகவும், சஞ்சய் தத் வில்லனாகவும், நடித்திருக்க, கிரிதியின் அழகும் அழகிய கதாபாத்திரமும் படத்திற்கு மெருகூட்டுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கி, டிரைலரில் இடம்பெற்றுள்ள அதிவீர போர் காட்சிகளை கண்டு மகிழுங்கள்.

http://bit.ly/Panipat_OfficialTrailer

இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர் பேசுகையில், ‘ஊடகவியலாளர்களின் பின்னூட்டத்தை கேட்டு, பானிபட் திரைப்படக்குழு மிகவும் மகிழ்ந்து போயிருக்கிறது. டிரைலர் வெளியீட்டுக்கு முன்னரே, அவர்களுக்காக ஒரு சிறப்பு டிரைலர் திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

அது மிகவும் நேர்மறையான பின்னூட்டத்தை வழங்கியிருக்கிறது. ரசிகர்ளுக்கும் இந்த டிரைலர் பிடிக்கும் என திடமாக நம்புகிறோம். அவர்களது எதிர்பார்ப்புகளை முடிந்த வரையில் நிறைவேற்றியிருப்பதாகவும் நம்புகிறோம்” என்றார்.

தயாரிப்பாளர் சுனிதா கோவரிகர், “பானிபட் டிரைலருக்கு கிடைத்த வரவேற்ப் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்த டிரைலரும், திரைப்படமும் பிடிக்கும் என நம்புகிறோம்.

இத்திரைப்பட குழுவினர் ஒவ்வொருவரும் கடின உழைப்பை தந்திருக்கிறார்கள். இப்படத்தின் வெற்றி அவர்களை பெருமகிழ்ச்சி அடையச் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.’

ஷிபசிஷ் சர்கார், குழு தலைமை செயல் அதிகாரி – ரிலையன்ஸ் எண்டர்டைன்மென்ட் பேசும் போது, ‘இயக்குனர் அஷுதோஷ் மற்றும் அவரது பெரும் இலக்கியப் படைப்பான ‘பானிபட்’ திரைப்படத்துடனும் இணைந்திருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
இத்திரைப்படம் இவ்வுலக வரலாற்றின் மாபெரும் போரை நம் கண்முன் நிறுத்தும். டிரைலர் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், திரைப்படத்திற்கும் அனைத்து தரப்பினரும் ஏகோபித்த வரவேற்பை வழங்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.’

ரோஹித் ஷெலட்கர், நிறுவனர், விஷன் வர்ல்ட் பிலிம்ஸ், ‘வரலாறும் திரைப்படங்களும் எனக்கு மிகவும் பிடித்த உணர்வுப்பூர்வமாக விஷயங்கள். அந்த இரண்டையும் இணைக்கும் வகையில் அமைந்த இத்திரைப்படம் எனக்கு கிடைத்த மகத்தானதொரு வாய்ப்பு.

மராட்டிய சமுதாயத்தை சார்ந்தவனாகிய நான், மராட்டிய புராணக்கதைகளை, அதன் நாயகர்களை அதிகம் விரும்புகிறவன். ‘ஜோதா அக்பர்’, ‘ஸ்வதேஷ்’, ‘லகான்’ உள்ளிட்ட பெரும் காவிய படங்களைத் தந்த மதிப்பிற்குரிய இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர் உடன் இணைந்து இப்படத்தில் பணியாற்றுவதென்பது எனது மாபெரும் கனவு நனவானயே காட்டுகிறது’ என்றார்.

1761 ஆம் ஆண்டு பின்னணியில் அமைக்கப்பட்ட ‘பானிபட்’ திரைப்படத்தின் கதைகளம் மராட்டிய சாம்ராஜ்யத்தைப் பற்றியது. அச்சமயம் மராட்டிய சாம்ராஜ்யம் தனது உச்சநிலையை எட்டி இருந்தது.

ஒரு படையெடுப்பாளரின் கவனத்தை ஈர்க்காத வரையில், இந்துஸ்தான் மீதான அவர்களின் பிடிப்பும், அவர்களை சவாலுக்கு அழைப்பதற்கு யாருமற்ற நிலையும் நீடித்தது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் தான், படையெடுத்து வருகின்ற ஆப்கானிஸ்தான் மன்னர் அஹ்மத் ஷா அப்தாலியின் (சஞ்சய் தத்) படைகளை விரட்டும் பொருட்டு, மராட்டிய இராணுவ தளபதி சதாஷிவ் ராவ் பாவு (அர்ஜுன் கபூர்) வடதிசை நோக்கி தனது படைகளுடன் ஆப்கானிஸ்தான் படைகளை எதிர்த்து ஓரு அவசரப் போர் பயணத்தை துவக்கி, தனது படைகளை வழிநடத்துகிறார்.

‘ஏஜிபிபிஎல்’ சார்பாக சுனிதா கோவரிகர், ‘விஷன் வேர்ல்டு பிலிம்ஸ்’ சார்பாக ரோஹித் ஷெலட்கருடன் இணைந்து இப்பத்தை தயாரிக்க, அசுதோஷ் கோவரிகர் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதி உலகெங்கும் திரையிடப்பட தயாராக இருக்கிறது.

Ashutosh Gowarikers Panipat Trailer is an Absolute Visual Treat

 

குட்டி த்ரிஷா முதல் ரம்யா வரை.; தளபதி 64 படத்தில் மல்டி ஸ்டார்ஸ்

குட்டி த்ரிஷா முதல் ரம்யா வரை.; தளபதி 64 படத்தில் மல்டி ஸ்டார்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anchor Ramya is now part of Thalapathy 64 movie‘தளபதி 64’ என்ற தற்காலிக பெயரிடப்பட்ட படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதன் சூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கேரக்டரில் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் ஒரு நட்சத்திர பட்டாளமும் தினம் தினம் இணைந்து வருகிறது.

ஆண்ட்ரியா, பிரிகிடா, 96 பட குட்டி த்ரிஷா கௌரி, சேத்தன், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி தொகுப்பாளின் ரம்யாவும் இணைந்திருக்கிறாராம்.

இவர் விஜய்யின் ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களில் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Anchor Ramya is now part of Thalapathy 64 movie

என் மரணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. : விஷால்

என் மரணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. : விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I felt my death in front of my eyes says Vishalசுந்தர் சி இயக்கத்தில் விஷால் தமன்னா இணைந்துள்ள படம் ஆக்ஷன். இந்த படம் அடுத்த வாரம் நவம்பர் 15ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

எனவே படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆக்ஷன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசிய விபரம் வருமாறு…

வசனகர்த்தா பத்ரி பேசும்போது,

டிரைலரை பார்க்கும்போதே தெரிந்திருக்கும் ஆக்ஷன் பொருத்தமான பெயர் தான் என்று. இன்னொரு பெயர் உலகம் சுற்றம் வாலிபன் என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். நீண்ட வருடங்களுக்குப் பிறகு உலக நாடுகள் பலவற்றில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.

இப்படம் விஷால் ரசிகர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் விதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றார்.

நடிகர் சாரா பேசும்போது…

சுந்தர் அண்ணா எப்படி இயக்குகிறார் என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. அவர் படங்களில் பொதுவாக கூட்டமாகவே இருக்கும். ஒரே நேரத்தில் 2, 3 காட்சிகள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்.

ஆனால், எதையும் அலட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக இருப்பார் இயக்குநர் சுந்தர்.சி. என்றார்.

அகன்ஷாபூரி பேசும்போது…

டிவி தொடரில் என்னை பார்வதியாகத்தான் எல்லோருக்கும் தெரியும். இப்படம் மூலம் என்னை எல்லோரும் வெள்ளித் திரையில் காண்பார்கள். டிரைலர் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. படம் பார்ப்பதற்கு மிகுந்த ஆவலாக இருக்கிறேன் என்றார்.

ஹிப்ஹாப் ஆதி பேசும்போது..

இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள். இப்படத்தைப் பொறுத்தவரையில் பாடல்களை விட பின்னணி இசைதான் முக்கிய இடம்பெறும். ஆக்ஷன் படத்தின் புரோமோ பாடலில் இரண்டு கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள்.

எனக்கு எல்லோரும் நல்ல விமர்சனங்களைக் கொடுத்து ஆதரவு கொடுத்து வருவதற்கு நன்றி என்றார்.

நடிகை தமன்னா பேசும்போது…

ஒவ்வொரு படத்திலும் என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்த்து வருகிறீர்கள். இயக்குநர் சுந்தர்.சியுடன் பணியாற்றும் வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா என்று தெரியாது. அவருடன் பணிபுரிய மிகவும் விருப்பமாக இருந்தேன்.

பாகுபலி படத்தில் சண்டைக் காட்சிகள் நிறைய இருக்குமென்று ஆவலாக இருந்தேன். அந்த கனவை ஆக்ஷன் படத்தின் மூலம் சுந்தர்.சி நிறைவேற்றியுள்ளார். மற்ற படங்களைவிட இப்படத்தில் தனித்தன்மையாக நடித்த அனுபவம் புதுமையாக இருந்தது.

ஏனென்றால், ஆக்ஷன் கதாபாத்திரமென்பதால் வசனங்கள் கொண்ட பேப்பர் இருக்காது. படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் அந்த இடத்திற்கு செல்லுங்கள். இந்த இடத்தில் நில்லுங்கள். என்று தான் சூழ்நிலை இருக்கும். அனைத்து சண்டைக் காட்சிகளிலும் விஷாலுக்கு பின்னால்தான் நிற்பேன்.

விஷாலுடன் நடித்ததில் நிறைய அனுபவங்கள் கிடைத்தது. விஷாலுக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.

இயக்குநர் சுந்தர்.சி. பேசும்போது…

இப்படம் என்னுடைய கனவு படம் என்றும் கூறலாம். முதன்முதலாக நான் எடுத்த படம் கிராம பின்னணி கொண்ட படம் இயக்கினேன். அப்படத்தைப் பார்த்த அனைவரும் இது உன்னுடைய படம் மாதிரி இல்லையே? என்று. இந்த கேள்வியை நான் ஒவ்வொரு படத்திலும் சந்தித்தேன்.

எதுதான் என்னுடைய படம்? என்னுடைய படமென்றால் எந்த பாணியில் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்? என்று குழப்பமடைந்தேன். ஆனால், இப்படம் மூலம் எல்லோருக்கும் இது என்னுடைய படமென்ற உணர்வு இருக்குமென்று நினைக்கிறேன்.

இதுபோன்ற பெரிய படங்களுக்கு தயாரிப்பாளர் ரவிசந்திரன் மாதிரி அமைவது வரம். சண்டைக் காட்சிகளில் தமன்னா டூப் போடாமல் அவரே தைரியமாக பணியாற்றினார். இதுவரை இப்படியொரு கதாநாயகி தமிழ் சினிமாவில் இருந்திருப்பார்களா? என்று சந்தேகம்தான்.

அக்கன்ஷாவும் ஒரு நிகழ்ச்சியில் பார்த்து தான் தேர்ந்தெடுத்தோம். விஷாலுக்கு பெண் வேடமிட்டால் அக்கன்ஷா மாதிரிதான் இருப்பார். அவரும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.

தமன்னா, அக்கன்ஷா இருவரும் தினமும் படப்பிடிப்பு முடிந்து போகும்போது காயத்தோடு தான் போவார்கள். ஐஸ்வர்யா லக்ஷமி இப்படத்தில் நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் அவர் நடித்த எல்லா படம்மும் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழில் அவருக்கு இது முதல் படம். இப்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சாயாசிங் சில காட்சிகளில் வந்தாலும் கண்ணியமாக நடித்திருப்பார். லட்சுமிகரமாக இருக்க வேண்டும், அனைவரின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்ற சவாலான கதாபாத்திரத்தைக் கூறியதும், சிறு புன்னகையுடன் ஒப்புக் கொண்டார்.

மேலும், இப்படத்தில் எனக்கு பக்க பலமாக அமைந்தது தேசிய விருது பெற்ற அன்பறிவு இருவரும் தான். அடுத்து ஹிப்ஹாப் ஆதி. முதலில் நான் ஆதிக்கு கொடுக்க கூடாது என்றிருந்தேன்.

ஆனால், என்னிடமிருந்து இசையமைப்பாளர் வாய்ப்பைப் பிடுங்கிச் சென்று இசையமைத்தார். நான் நினைத்ததைவிட வேகமாக தன் பணியை முடித்துவிட்டார் ஆதி.

மிலிட்டரி, தீவிரவாதம், அரசியல் என்று அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது. இப்படத்தில் வில்லி கிடையாது, வில்லன் தான். அந்த வில்லன் யார் என்பது தான் சஸ்பென்ஸ். அது படம் பார்க்கும்போதுதான் தெரியும்.

தமன்னாவை எனக்கு பிடிக்கும். எனது ஒவ்வொரு படத்திலும் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். அது இப்படத்தில்தான் நிறைவேறியது.

‘பாகுபலி’ படத்தில் தமன்னாவின் சண்டைக் காட்சிகளைப் பார்த்தேன்.

அவர் தான் இந்த படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரை நடிக்க வைத்தேன். இப்படத்தின் CG பணி செய்த அனைவருமே சென்னையைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தான். சென்னையில் இந்தளவு உயர்தரமான காட்சிகளைக் கொடுக்க முடியுமா? என்ற அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்.

மேலும், விஷால் இயக்குநரின் நடிகர். ஒருமுறை அவர் ஒப்பந்தம் செய்துவிட்டால் நாம் என்ன சொல்கிறோமோ அதை அர்ப்பணிப்போடு செய்வார். மேலிருந்து குதிக்க சொன்னேன். உடனே குதித்து விட்டார்.

விஷாலைத் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட பெரிய திரைப்படத்தை 6 மாத காலங்களிலேயே முடித்திருக்க முடியாது. அதற்கு தயாரிப்பாளரும் ஒத்துழைப்புக் கொடுத்தார் என்றார்.

நடிகர் விஷால் பேசும்போது…

சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம் தான் முதலில் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சி தான். நாங்கள் மேடையில் அமர்ந்திருப்பதற்கும், இந்த அமைப்பைக் கொண்டு வருவதும் சாதாரணமான செயல் அல்ல. அதை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவிசந்திரன் செய்திருக்கிறார்.

‘சங்க மித்ரா’ தான் சுந்தர்.சி-யின் கனவு திரைப்படம். ஆனால், அப்படம் தாமதமாவதால் இப்படத்தை எடுத்து விட்டோம். என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிப்பட்ட திரைப்படமும் ‘ஆக்ஷன்’ தான்.

ஏனென்றால், ஒரு கணத்தில் என் சாவை என் கண்ணால் பார்த்தேன். ஒரு காட்சியில் என் கைகளை தடுக்க கொண்டு வரும்போது கையிலும், காலிலும் அடிப்பட்டு 5 மாதங்கள் படப்பிடிப்பு நடக்க விடாமல் செய்தது.

அதன்பிறகு ஒரு காட்சியில் இயக்குநர் சுந்தர்.சி மற்றும் தயாரிப்பாளர் ரவி இருவரையும் எதிர்கொள்வது சிரமமாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தாமல் எனக்காக காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

வருடம் ஒருமுறை சுந்தர்.சியுடன் பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும். என் குருநாதன் அர்ஜுன் சார் தான். ஆனால், ஒவ்வொருவரும் ஈகோ பார்க்காமல் இயக்குநர் சுந்தர்.சியுடன் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும்.

ஒரு சாதாரண இடத்தையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவார். 90 நாட்களில் இப்படத்தை முடித்தது சவாலான விஷயம்.

உதவி இயக்குநராக நான் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்படத்தின் மூலம் எனக்கு அமைந்தது. அவரிடம் கற்றுக் கொண்டதை இனி வரும் என் படங்களில் பயன்படுத்துவேன். ஆதி மாதிரியான திறமையான இளம் இசையமைப்பாளர் பலர் வரவேண்டும்.

எனக்கு அடிப்பட்ட பிறகு, அன்புறிவு, சுந்தர்.சி இருவரும் சண்டைக் காட்சிகளில் டூப் போட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், நான் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், இப்படத்திற்கு இருந்த சவாலான விஷயம் படத்தொகுப்பு. அதை ஸ்ரீகாந்த் திறமையாக செய்து முடித்திருக்கிறார்.

சண்டைக் காட்சிகளில் எனக்கும் தமன்னாவுக்கு இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது. அக்கன்ஷாபூரியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். நான் இதுவரை பெண்களை அடித்ததே கிடையாது.

ஆனால், இப்படத்தில் வரும் காட்சிக்காக அக்கன்ஷாவை பல தடவை அடித்தேன். அதற்க்காக இந்த இடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அடிபடாமல் இருப்பதற்காக சிறப்பு உடை கொடுப்பார்கள். ஆனால், அக்கன்ஷா அதைப்பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் அடிபட்ட அன்றே படப்பிடிப்பை நிறுத்தாமல் நடித்து முடித்தார். சாயாசிங் உடன் நடித்ததில் மகிழ்ச்சி. எனக்கு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார்.

யூடியூப்-ல் சாரா உடைய குறும்படத்தைப் பார்த்தேன். தைரியமாக நடித்திருக்கிறார். மிகவும் திறமையான நடிகர். 15 வருடங்களுக்கு முன்பிருந்தது போல் இப்பொழுது இல்லை.

இன்று யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளராக ஆகி விடுகிறார்கள்.

‘துப்பறிவாளன்-2‘ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

‘ஆக்ஷன்’ படத்தை பெரிய திரையில் காணுங்கள். இப்படத்தில் நடித்த அனைத்துப் பெண்களும் திறமையானவர்கள். ஐஸ்வர்யா லக்ஷமி பெரியளவில் பேசப்படுவார் என்றார்.

ஒரே ஒரு வேண்டுகோள். ஒவ்வொருத்தரும் மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

I felt my death in front of my eyes says Vishal

தளபதி 64 படத்தை மிஸ் செய்த சூப்பர் ஹீரோக்கள்

தளபதி 64 படத்தை மிஸ் செய்த சூப்பர் ஹீரோக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why Abhishek Bachchan and KGF Yash avoid Thalapathy 64 விஜய் நடித்து வரும் அவரது 64 படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் பாடல்களை கம்போஸ் செய்து வருகிறார்.

விஜய்யுடன் சாந்தனு, வர்கீஸ், ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

இதில் வில்லனாக விஜய்சேதுபதி இணைந்துள்ளார். ஆனால் இவர் நடிப்பதற்கு ஓகே சொல்வதற்கு முன் அபிஷேக்பச்சன் மற்றும் கேஜிஎப் பட புகழ் கன்னட நடிகர் யஷ் இருவரிடமும் பேசினார்களாம்.

ஆனால் அவர்கள் நடிக்க மறுக்கவே இந்த வேடம் தற்போது மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு கிடைத்துள்ளது.

வில்லன் வேடத்திற்கு தான் முதலில் பேசப்பட்டது. இருவருக்குமே கதையும் கதாபாத்திரமும் பிடித்து போனாலும், அவர்கள் கைவசம் லோகேஷ் கனகராஜ் கேட்ட தேதிகள் இல்லாததால் இந்த படத்தில் அவர்களால் நடிக்க முடியாமல் போனது என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Why Abhishek Bachchan and KGF Yash avoid Thalapathy 64

இளைஞர்களின் ட்ரீம் கேர்ளாக மாற ஆசைப்படும் சுபிக்ஷா

இளைஞர்களின் ட்ரீம் கேர்ளாக மாற ஆசைப்படும் சுபிக்ஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I would like to be a dream girl for youth says Subhikshaஅன்னக்கொடி படத்தில் அறிமுகமாகி கடுகு, நேத்ரா, கோலிசோடா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுபிக்ஷா.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘யார் இவர்கள்?’ என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இவரது சமீபத்திய பேட்டியில் தன் படங்கள் குறித்து பேசியதாவது…

”சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது நாயகியாக நடித்து வருகிறேன்.

நடித்தால் நாயகி வேடம்தான் என பிடிவாதமாக எப்போதும் இருந்ததில்லை. அந்த பொறுமைக்கு கிடைத்த வெற்றிதான் இது. இளைஞர்களின் கனவு கன்னியாக மாற வேண்டும் என்பதே ஆசை” என்றார்.

I would like to be a dream girl for youth says Subhiksha

நாகஷேகர் மூவிஸ் – ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’

நாகஷேகர் மூவிஸ் – ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

November Mazhaiyil Naanum Avalumகன்னட திரையுலகில் பல வெற்றித் திரைப்படங்களை தந்த வெற்றிகரமான இயக்குனர் நாகஷேகர். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நாகஷேகர் மூவிஸ் மூலம், ஜோனி பிலிம்ஸ் சார்பாக ஜோனி ஹர்ஷா, ஷிவு எஸ் யசோதரா ஆகியோருடன் நாகஷேகர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’. இப்படத்தை கதை எழுதி, இயக்கும் அவர், முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.

‘அரண்மனை’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக உயர்ந்த நாகஷேகர், அதனைத் தொடர்ந்து ‘சஞ்சு வெட்ஸ் கீதா’, ‘மைனா’ ஆகிய வெற்றிப் படங்களைத் தந்த ஒரு ஜனரஞ்சகமான இயக்குனர். ‘ரெபல் ஸ்டார்’ அம்பரீஷ் – சுமலதா தம்பதியின் வாரிசான அபிஷேக்கை ‘அமர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தி, பெரு வெற்றியடையச் செய்த பெருமைக்குரியவர்.

முற்றிலும் புதிய பரிமாணத்தில், ஒரு வித்தியாசமான கதைகளத்துடன், மென்மையானதொரு காதல் கதையான ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ திரைப்படத்துடன் தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார் நாகஷேகர்.

சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்ய, பிரீத்தம் திரைகதை எழுத, இயக்குனர் விஜி வசனம் எழுத, ரூபன் படத்தொகுப்பை கவனிக்க, லால்குடி N.இளையராஜா கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்கிறார்.

இப்படத்திற்கு மதன் கார்க்கி பாடல்களை எழுத, ஷபிர் இசையமைக்கிறார். சண்டை காட்சிகளுக்கு திலீப்சுப்புராயன் பொறுப்பேற்க, நிர்வாக தயாரிப்பு வேணு வேல்முருகன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

வசூலில் சாதனை படைத்த இயக்குனர் நாகஷேகரின் கன்னடப் படம் ‘மைனா’, மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் ‘முதல் மழை’ என்ற பெயரில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், இப்புதிய திரைப்படம் குறித்து இப்படக் குழுவினர் செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.

More Articles
Follows