‘பானிபட்’ திரைப்படத்தில் 130000 நடனகலைஞர்களின் எழுச்சிமிகு நடனத்தில், உருவான பிரம்மாண்ட பாடல் ‘மர்த் மராத்தா’

‘பானிபட்’ திரைப்படத்தில் 130000 நடனகலைஞர்களின் எழுச்சிமிகு நடனத்தில், உருவான பிரம்மாண்ட பாடல் ‘மர்த் மராத்தா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

panipat stillsபன்முகப்பட்ட திறமைகொண்ட நடிகர்களை வைத்து உருவாகியிருக்கும் ‘பானிபட்’ திரைப்படம், சந்தேகத்திற்கிடமின்றி அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கும் அஷுதோஷ் கோவர்கரின் புராணகால போர்ப்படம் என்றால் அது மிகையில்லை.

வரலாற்று பின்புலத்தில், பிரம்மாண்டமான செட்டுகளில் கம்பீரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாக அனைவரையும் வெகுவாகக் கவர்ந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ‘மர்த் மராத்தா’ விரைவில் வெளியாக இருக்கிறது.

‘மர்த் மராத்தா’ எனத் துவங்கும் இப்பாடல், பிரம்மாதமான இயற்கை சூழலில், ஒரு மாபெரும் கணபதி சிலையினை பின்னணியாகக் கொண்டு, அபாரமாக நடனமாடும் 1300 நடனகலைஞர்களின் பங்களிப்போடும், புனே நகரின் பாரம்பரிய மற்றும் நாட்டுபுற நடன கலைஞர்களின் நடன பங்களிப்போடும் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.

கலை இயக்குனர் நிதின் தேசாய் பிரம்மாண்டமான வடிவமைப்பில், நிஜவாழ்வில் காணும் ‘சனிவார் வாடாவிற்கு நிகரான ஒரு பிரம்மாண்டமான செட்டில், ராஜு கான் நடன அமைப்பில், இந்த பாடல் 13 நாட்களில் படமாக்கபட்டிருக்கிறது. புத்துணர்வூட்டும் வகையில் ஹிந்தி-மராத்தா நடையில் உருவாகியிருக்கும் இந்த பாடலில், முக்கிய கதாப்பாத்திரங்களான அர்ஜுன் கபூர், கிரிதி சாணன், மோனிஸ் பாஹ்ல், பத்மினி கோலாபுரே ஆகியோர் நடிக்க, இசை இரட்டையர்கள் அஜய்-அதுல் இசையில் உருவாகியிருக்கிறது.

பாரம்பரிய சுவைமிக்க, எழுச்சிமிக்க இந்த பாடலை குறித்து இசை இரட்டையர்கள் பேசும் போது, ‘இந்த பாடல் மராத்தா பேரரசின் செழுமையைக் கொண்டாடுகிறது. பாரம்பரிய சுவையுடன் அதே சமயம் அனைத்து தரப்பு ரசிகர்களும் வயது வித்தியாசமின்றி, ரசனை பேதமின்றி ரசிக்கும் வகையில் இந்த பாடலை உருவாக்க விரும்பினோம். இதனை மனதில் வைத்தே, ‘மர்த் மராத்தா’ என்ற இந்த பாடலை உருவாக்கியிருக்கிறோம். அது அனைவரையும் கவரும் என நம்புகிறோம்’.

மேலும், ‘இந்த எழுச்சி மிக்க பாடலை, மிகவும் பிரமிக்கத்தக்க வகையில் இயக்குனர் அஷுதோஷ் படமாக்கி இருக்கும் விதம், மறந்துப் போன மராத்தா சாம்ராஜ்யத்தின் பெருமைகளை நம் கண் முன்னே நிறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது’.

இந்த பாடல் குறித்து இயக்குனர் அஷுதோஷ், ‘மர்த் மராத்தா பாடல் ஒரு எழுச்சிமிக்க பாடல். அது மராத்தா சாம்ராஜ்யத்தின் செழுமையை, அழகாய் எடுத்துரைக்கும் அதே நேரம், வீரமும் எழுச்சியுமிக்க பேஷ்வா மற்றும் மராத்தா சர்தார்களை பற்றியும், இன்னபிற இராணுவ படைப்பிரிவுகளை பற்றியும், இந்துக்கள், முகமதியர்கள் பிற இன-மத மக்களைப் பற்றியும் பேசுகிறது. இசை இரட்டையர்கள் இந்த பாடலை மிகவும் அருமையாக, நேர்த்தியாக பாரம்பரிய ரசனை பாராமல், அதே சமயம் உலகளாவிய வரவேற்பு கிடைக்கும் வண்ணம் அழகாக படைத்திருக்கிறார்கள். ராஜு கானின் நடன அமைப்பும் மிகவும் பிரம்மாதமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது’

இந்த படம் 14 ஜனவரி 1761 ஆம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாம் பானிபட் யுத்தத்தை, மையக்கருவாக கொண்டு உருவாகியிருக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படம்.

அதிரடி காட்சிகள் நிறைந்த இந்த வரலாற்றுப்படத்தை சுனிதா கோவர்கர் மற்றும் விஷன் வேர்ல்ட் சார்பாக ரோஹித் ஷேலட்கரும் இணைந்து தயாரிக்க, சஞ்சய் தத், அர்ஜுன் கபூர், கிரிதி சாணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, இப்படத்தை ரிலையன்ஸ் எண்டர்டைன்மென்ட் உலகமெங்கும் வெளியிடவிருக்கிறது. அஷுதோஷ் கோவர்கரின் எண்ணத்தில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அதர்வா அடித்த அந்தர் பல்டி?; 6 கோடி ஏமாற்றியதாக மதியழகன் புகார்

அதர்வா அடித்த அந்தர் பல்டி?; 6 கோடி ஏமாற்றியதாக மதியழகன் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rs 6 Crores Cheating case filed against Atharvaதயாரிப்பாளர் மதியழகன் என்பவர் நடிகர் அதர்வா மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரூ.6 கோடி மோசடி புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில்… ‛‛கிக் ஆஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‛செம போத ஆகாத’ என்ற படத்தை தயாரித்தார் அதர்வா. இதனை அவுட்ரேட் முறையில் நான் வாங்கி விநியோகம் செய்தேன். இதற்காக அவருக்கு ரூ.5 கோடி பணம் கொடுத்தேன்.

ஆனால் படத்தை சொன்ன தேதியில் முடிக்கவில்லை ரிலீசும் தாமதம் ஆனது. இதனால் எனக்கு ரூ.5.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

எனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அதர்வா மீது புகார் அளித்தேன். விஷால் தலைமையில் ஒரு கூட்டமும் நடைபெற்றது.

என் பக்கம் நியாயம் இருக்கவே எனக்கு ஒரு படம் செய்து தர சொல்ல அதற்கு அதர்வாவும் ஓகே சொன்னார். அந்த படத்திற்கும் அட்வான்ஸாக பணம் வாங்கினார். ஆனால் சொன்னபடி படத்தில் நடிக்க இல்லை.

இதனால் எனக்கு ஏற்பட்ட ரூ.6 கோடி நஷ்டத்தை பெற்று தரும்படி கேட்டு கொள்கிறேன்.

என புகார் மனுவில் கூறியுள்ளார் மதியழகன்.

Rs 6 Crores Cheating case filed against Atharva

மணிரத்னம் & லைகாவின் ‘வானம் கொட்டட்டும்’ பர்ஸ்ட் லுக் அப்டேட்ஸ்

மணிரத்னம் & லைகாவின் ‘வானம் கொட்டட்டும்’ பர்ஸ்ட் லுக் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vaanam Kottattum first look poster release updates குடும்ப உறவுகளை மையப்படுத்தியும், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன.

இருப்பினும், விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, தனா இயக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் சற்றே வித்தியாசமாக குடும்ப உறவுகளைக் கொண்டாடும் படமாக உருவாகி வருகிறது.

விக்ரம் பிரபுவிற்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, இருவருக்கும் பெற்றோராக சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் நடிக்கிறார்கள்.

மடோனா செபாஸ்டியன் முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார். இவர்களுடன் நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் சுற்று பகுதிகளில் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் & லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் தலைப்பு லோகோ முதல் பார்வை வெளியிட்ட நிலையில், இன்று காலை 11 மணிக்கு முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்படுகிறது.

இதை தொடர்ந்து பாடல் சின்கிள் டிராக், இரண்டாவது பாடல் மற்றும் பாடல் வெளியீட்டு விழா என ஒவ்வொன்றாக விரைவில் வெளியிடப்படும்.

2020 ஜனவரியில் இப்படம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதால் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Vaanam Kottattum first look poster release updates

அமலா பாலுக்கு கை கொடுக்கும் மோகன்லால் & அனிருத்

அமலா பாலுக்கு கை கொடுக்கும் மோகன்லால் & அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mohanlal and Anirudh join hands with Amala Paul for AAPPஅமலா பால் நடிப்பில் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அதோ அந்த பறவை போல’.

ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க முக்கிய வேடங்களில் ஆஷிஸ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

செஞ்சுரி இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அட்வெஞ்சர் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது.

சென்சாரில் இந்த படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை நடிகர் மோகன்லால் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து நாளை நவம்பர் 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளனர்.

Mohanlal and Anirudh join hands with Amala Paul for AAPP

மாரா-வுக்கு தீம் மியூசிக்; சூர்யா ரசிகர்களுக்கு ஜிவி. பிரகாஷ் ட்ரீட்

மாரா-வுக்கு தீம் மியூசிக்; சூர்யா ரசிகர்களுக்கு ஜிவி. பிரகாஷ் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash reveals about Soorarai Pottrus Maara theme music சூர்யா & அபர்ணா பாலமுரளி ஜோடியாக நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நடிகர் ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.

இப்பட சூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சூர்யா ’மாரா’ என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் விரைவில் இப்பட டீசர் வெளியாக உள்ளதாகவும், எனவே மாரா எனும் தீம் மியூசிக்கை உருவாக்கி வருவதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

GV Prakash reveals about Soorarai Pottrus Maara theme music

கேரளா வழியாக தமிழ்நாடு டூ ஆந்திரா; விசிலடிக்கும் விஜய் ரசிகர்கள்

கேரளா வழியாக தமிழ்நாடு டூ ஆந்திரா; விசிலடிக்கும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Bigil made good box office collection in Telugu film industryதமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்த படியாக விஜய்யின் படங்கள் நல்ல வசூலை பெற்று வருகிறது.

100 கோடியில் தொடங்கி 200 கோடி வரை அசால்ட்டாக வசூல் வேட்டையாடி வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டை தாண்டி கேரளாவில் விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

மலையாள நடிகர்களின் படங்களுக்கு நிகராக கல்லா கட்டி வருகிறது.

தற்போது ஆந்திராவிலும் விஜய் படங்கள் கவனம் பெறத் தொடங்கியுள்ளன.

சமீபத்தில் வெளியான ‘பிகில்’ படம் தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் தெலுங்கில் லாபத்தைக் கொடுத்துள்ளதாம். தெலுங்கில் விசில் என்ற பெயரில் ரிலீசானது.

இதன் மூலம் விஜய்க்கு அங்கும் ஒரு நல்ல மார்க்கெட் ஓபன் ஆகும் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோருக்கு தெலுங்கில் நல்ல ஓபனிங் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijays Bigil made good box office collection in Telugu film industry

More Articles
Follows