தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான படம் ‘போர் தொழில்’.
இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
ஜூன் மாதம் 9-ம் தேதி வெளியான இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
உலக அளவில் ரூ.50 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாக கடந்த வாரம் படக்குழு தெரிவித்திருந்தார்.
இந்தப் படம் ஜூலை 7-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது.
இந்த நிலையில் ஆனால், ‘போர் தொழில்’ படம் திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் குவித்து வருவதால், ஓடிடி ரிலீஸ் தேதியை தள்ளிவைக்குமாறு தயாரிப்பு நிறுவனம், சோனி நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டது.
இதனால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ‘போர் தொழில்’ படம் சோனி லைவ் தளத்தில் வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
ashok selvan’s por thozhil movie ott release postponed