‘போர் தொழிலில் நடித்த போது..; நிம்மதி இல்லாமல் தவித்த நிகிலா விமல்

‘போர் தொழிலில் நடித்த போது..; நிம்மதி இல்லாமல் தவித்த நிகிலா விமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா நடித்த ‘போர் தொழில்’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நிகிலா விமல் பேசுகையில்…

”இந்தப் படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக இருந்தது, இந்தப் படத்தின் மூலம் பலருக்கு நான் அறிமுகமாகியுள்ளேன். படத்தின் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தில் நடிக்கும்போது எனக்குத் தூக்கமே இல்லை. படம் முழுக்க முழுக்க இரவு நேரத்தில் தான் இருந்தது.

எனக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. அசோக் மற்றும் சரத்குமார் சாருக்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பில் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள், இந்த கதாபாத்திரத்தை எழுதிய இயக்குநருக்கு நன்றி.

E4 என்டர்டெயின்மென்ட் இன் முதல் படத்தில் நான் இருந்தேன். அதே போல் இந்தப் படமும் வெற்றி என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது,
ஊடக பத்திரிக்கையாளர் அனைவருக்கும் என் நன்றி” என்றார்.

Sleepless nights at Por Thozhil time says Nikhila Vimal

நிறைய படம் பண்ணிருக்கேன்னு சொன்னாலும் நடிச்சு காட்ட சொன்னார்… சுந்தர்

நிறைய படம் பண்ணிருக்கேன்னு சொன்னாலும் நடிச்சு காட்ட சொன்னார்… சுந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா நடித்த ‘போர் தொழில்’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் OAKசுந்தர் பேசுகையில்…

” விக்னேஷ் சார் என்னைக் கூப்பிட்டுப் பேசியபோது என்னை நடித்துக் காட்டச் சொன்னார். நான் நிறையப் படங்கள் செய்துள்ளேன் என்றேன். ஆனால் எனக்காகச் செய்து காட்டுங்கள் என்றார்.

அப்போதே என்னை பெண்டு நிமிர்த்த ஆரம்பித்து விட்டார். சரத்குமார் சார் சிரிக்காமல் நடித்த ஒரே படம் இது தான். அவரால் சிரிக்காமல் இருக்க முடியாது. இப்படத்தில் அவரை பார்த்து ரசித்தோம். படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. படத்திற்கு ஆதரவு தந்ததற்கு நன்றி” என்றார்.

நடிகர் ஹரீஷ் பேசுகையில்….

” படம் ரிலீஸுக்கு அப்புறம் என்னோட ஃப்ரண்ட்ஸ் என்னைப் பார்த்துப் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். நான் நடித்ததில் மிக வித்தியாசமான கேரக்டர் இது தான். என் பெற்றோருக்குப் பிடித்த படம் இது தான். என்னைப் போன்ற புதுமுகத்துக்கு திறமையை மதித்து இம்மாதிரி கேரக்டர் தந்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். இந்த மாதிரி படத்தை வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு நன்றி” என்றார்.

For Every Actor Director made audition says Sundar

இயக்குநரின் மனைவி எங்கள் அனைவருக்கும் கடிதம் எழுதினார் – பி.எல்.தேனப்பன்

இயக்குநரின் மனைவி எங்கள் அனைவருக்கும் கடிதம் எழுதினார் – பி.எல்.தேனப்பன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா நடித்த ‘போர் தொழில்’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தேனப்பன் பேசுகையில்…

” இந்த கம்பெனியை பற்றி நான் பெரிதும் கேள்விப் பட்டதில்லை. ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகு அனைவருக்கும் தெரியும், படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

இயக்குநரின் மனைவி எங்கள் அனைவருக்கும் ஒரு வாழ்த்து கடிதம் எழுதினார். அது எனக்கு மறக்க முடியாத தருணம், இயக்குநர் தனக்குத் தேவையானது கிடைக்கும் வரை விட மாட்டார், அது தான் அவருக்கு இப்படி ஒரு வெற்றியைக் கொடுத்துள்ளது.

கண்டிப்பாக அவர் நல்ல நல்ல படங்களை எடுப்பார். அவருக்கு எனது வாழ்த்துகள், படக்குழு அனைவருக்கும் நன்றி” என்றார்.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா நடித்த ‘போர் தொழில்’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை லிசா சின்னு பேசுகையில்…

” முதல் முறையாக நான் ஒரு மேடையில் நிற்கிறேன். மிகவும் பெருமையாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பல நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர், பத்திரிக்கையாளர் அனைவருக்கும் நன்றி. நீங்கள் தான் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்துள்ளீர்கள்.

இயக்குநர் விகனேஷ் ராஜா என்னைத் தேர்வு செய்யும்போதே சொன்னார். இது சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும், உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்குமென்று சொன்னார். அது நடந்து விட்டது, அதற்கு நன்றி , படக்குழு அனைவருக்கும் நன்றி” என்றார்.

Mrs Vignesh Raja wrote letter for all says PL Thenappan

‘போர் தொழில்’ தந்த நம்பிக்கை.; விக்னேஷ் ராஜா சிறப்பாக வருவார் – சக்திவேலன்

‘போர் தொழில்’ தந்த நம்பிக்கை.; விக்னேஷ் ராஜா சிறப்பாக வருவார் – சக்திவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான சைக்கோ திரில்லர் படம் ‘போர் தொழில்’.

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளை திருவிழாக்கோலமாக மாற்றியிருக்கிறது. இன்று வரையிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கும் இப்படத்தின் வெற்றி விழா, நேற்று சென்னையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசுகையில்…

‘ இந்தப் படம் எங்களுக்கான வெற்றி மட்டும் இல்லை, தமிழ் சினிமாவிற்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது.

நல்ல படத்திற்கு ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். அது போல இந்த படத்திற்கும் ஆதரவு கொடுத்தீர்கள். நன்றி, படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது, இது ஒரு சாதாரண விஷயமில்லை, அது மட்டுமல்ல.. திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் எங்களுக்கு நன்றி கூறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது , இயக்குநர் ஒரு அசாத்திய வெற்றியைக் கொடுத்து விட்டு அமைதியாக அமர்ந்துள்ளார்.

இவர் கண்டிப்பாக ஒரு சிறந்த இயக்குநராக வருவார் என்பதில் ஆச்சரியம் இல்லை , தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நன்றி.

அவருக்குத் தேவையான வெற்றியை இப்படம் கொடுத்துள்ளது, பத்திரிக்கையாளர் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

Por Thozhil success gave huge confidence says Sakthivelan

2023 ஆண்டில் மட்டுமே ரூ 600+ கோடியை சம்பாதிக்கும் உலகநாயகன் கமல்.!

2023 ஆண்டில் மட்டுமே ரூ 600+ கோடியை சம்பாதிக்கும் உலகநாயகன் கமல்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் என்றால் சினிமா… சினிமா என்றால் கமல் என்னும் அளவிற்கு இந்த இரண்டையும் நம்மால் பிரித்து பார்க்க முடியாது..

எத்தனையோ நடிகர்கள் சினிமாவில் இருந்தாலும் சகலகலா வல்லவர் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் மட்டுமே.

நடிப்பு தயாரிப்பு இயக்கம் பாடல் இசை நடனம் மாறுபட்ட கதாபாத்திரங்கள் என அனைத்தையும் கற்று சினிமாவுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் இவர்.

எனவேதான் இவரை உலக நாயகன் என்கிறோம்.

சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவிலேயே முதலீடு செய்து சினிமாவிற்கான பந்தத்தை 70 வயதிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்.

தற்போது கூட சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம்.. சிம்பு நடிப்பில் ஒரு படம் என தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் விரைவில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படத்தில் தயாரித்து நடிக்க ரெடியாக வருகிறார் கமல்ஹாசன்.

இந்த நிலையில் இந்த ஆண்டில் 2023 மட்டும் கமல் சம்பாதிக்கும் பணம் மட்டும் ரூபாய் 600 கோடியை தாண்டும் என்கிறது சினிமா வட்டாரம்.

பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க 150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக வந்த தகவல்களை பார்த்தோம்.

மேலும் இந்த ஆண்டில் ‘பிக் பாஸ் சீசன் 7’ தொடங்குகிறது இதில் மட்டும் கமல் சம்பளம் 120+ கோடிக்கு மேல் என்கிறார்கள்.

தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் கமல். இதன் சூட்டிங் திருப்பதியில் நடந்து வருகிறது. இந்த படத்தில் ரூ.்100 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது

இவை இல்லாமல் எச் வினோத் இயக்கத்தில் ஒரு படம்.. மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என் அதிரடியான படங்கள் கமல் கைவசம் உள்ளன.

ஆக அவரின் இந்த ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 600+ கோடிக்கு மேல் தாண்டும் என சொல்லப்படுகிறது.

Kamalhassan plans to earn Rs 600+cr in 2023

#Indian2 –
#BiggbossTamil7 –
#KH233 – H vinoth
#ProjectK –
#KH234 – Maniratnam

‘மாவீரன்’ பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனங்கள்

‘மாவீரன்’ பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார்.

‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.

சமீபத்தில் ‘மாவீரன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி வருகிற ஜூலை 2ம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘மாவீரன்’ படத்தின் ஓவர் சீஸ் உரிமையை பிரபல நிறுவனமான் ஹாம்சினி மற்றும் ஹகிம்சா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

maaveeran movies overseas release rights bagged by hansini entertainments

More Articles
Follows