தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான படம் ‘போர் தொழில்’.
இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
‘போர் தொழில்’ படம் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது.
சில தினங்களுக்கு முன்பு ‘போர் தொழில்’ திரைப்படத்தின் வெற்றியை படக்குழு ரசிகர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடினர்.
‘போர் தொழில்’ திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
‘போர் தொழில்’ படம் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ‘போர் தொழில்’ படம் கடந்த ஜூலை 7-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது. இப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் குவித்து வருவதால் ஓடிடி ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Ashok Selvan and Sarathkumar’s ‘Por Thozhil’ to premiere on OTT