அசோக் செல்வனின் ஃபீல் குட் டிராமா ‘நித்தம் ஒரு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அசோக் செல்வனின் ஃபீல் குட் டிராமா ‘நித்தம் ஒரு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அசோக் செல்வன் தனது அடுத்த படமான ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

வீரா, பிரபா மற்றும் அர்ஜுன் ஆகிய மூன்று கதாபாத்திரங்களுக்காக அவர் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார்.

தற்போது, ​​’நித்தம் ஒரு வானம்’ நவம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி

இதை இன்று புதிய போஸ்டர் மூலம் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

ரோலக்ஸ், டில்லி ஒன்றாக இணையும் தருணம் – கார்த்தியின் சூப்பர் ரிப்ளை

ரோலக்ஸ், டில்லி ஒன்றாக இணையும் தருணம் – கார்த்தியின் சூப்பர் ரிப்ளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹைதராபாத்தில் நடந்த ‘சர்தார்’ தெலுங்கு ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், ரோலக்ஸ் மற்றும் டில்லி LCU இல் எப்போது சந்திக்கிறார்கள் என்று கார்த்தியிடம் கேட்கப்பட்டது.

“ரோலக்ஸும் டில்லியும் சந்திப்பார்களா என்று தெரியவில்லை.

இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம்தான் கேட்க வேண்டும். ஆனால், கண்டிப்பாக அடுத்த ஆண்டு கைதி 2 படத்தைத் தொடங்குவோம்.

கார்த்தி 2019 ஆம் ஆண்டு வெளியான ‘கைதி’ படத்தில் டில்லியாகவும், ‘விக்ரம்’ படத்தில் சூர்யா ‘ரோலக்ஸ்’ ஆகவும் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளியை முன்னிட்டு புல் மீல்ஸ் வழங்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம்

தீபாவளியை முன்னிட்டு புல் மீல்ஸ் வழங்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்.

கமர்ஷியல் படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்ததில்லை… என்ன ஒன்று, அதை ரசிகர்களின் பல்ஸ் அறிந்து கொடுக்க வேண்டும்.. அவ்வளவுதான்..

தங்களது தயாரிப்பில் உருவாகி தீபாவளி ரிலீஸாக நாளை (அக்-21) வெளியாகும் சர்தார் படத்தை அப்படி ஒரு புல் மீல்ஸ் ஆக ரசிகர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கிறது பிரின்ஸ் பிக்சர்ஸ்.

கார்த்தியின் டபுள் ஆக்சன், ராஷி கண்ணா, ரஜிஷா விஜயனின் கலர்புல் காம்போ, இருக்கையில் அமர்ந்ததுமே ரசிகர்களை கதையோட்டத்திற்குள் இழுத்து செல்லும். ஜி.வி பிரகாஷின் இசை என ரசிகர்களின் முழு திருப்திக்கு நான் கியாரண்டி என்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்.

அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே சர்தார் படத்திற்கான எதிர்பார்ப்பு லெவல் எகிறியதால் இந்தப் படத்தின் வியாபாரத்திலும் அது பெரிய அளவில் எதிரொலித்துள்ளது..

குறிப்பாக அதிக அளவிலான திரையரங்குகள் இந்தப் படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் தீபாவளி ரேஸில் சர்தார் முன்னிலையில் இருக்கிறது.

அழகான தரமான எண்டெர்டெய்ன்மெண்ட் படங்களைத் தொடர்ச்சியாக மக்களின் பார்வைக்கு தந்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ், அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்த்து இன்னும் பிரமிப்பூட்டும் படைப்புகளைத் தர இருக்கிறது என்கிறார் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்.

Karthi starrer Sardar takes front position in Diwali race

சூட்டிங் அப்டேட் : பக்கா ப்ளானில் ‘பத்து தல’ சிலம்பரசன்

சூட்டிங் அப்டேட் : பக்கா ப்ளானில் ‘பத்து தல’ சிலம்பரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து சிம்பு ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இப்படத்தை ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார்.

இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘பத்து தல’ படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

டிசம்பர் 14-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்து தல

‘pathu Thala’ has been release December14

அல்லு அரவிந்த் உடன் இணையும் ‘கந்தாரா’ ஹீரோ

அல்லு அரவிந்த் உடன் இணையும் ‘கந்தாரா’ ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அல்லு அரவிந்த் இன்று தனது கீதா ஆர்ட்ஸ் பேனரில் ‘கந்தாரா’ நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் இணையப்போவதாக அறிவித்தார்.

இவர் ஏற்கனவே, சாண்டல்வுட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்

அல்லு அர்ஜுனின் ஹோம் பேனருடன் இணைந்திருப்பது அவருக்கு ஒரு நல்ல பலனைத் தரப் போகிறது.

‘கந்தாரா’ படத்திற்கு கிடைத்த பெரும் புகழின் பின்னணியில் அவர் தெலுங்கில் தனது மார்க்கெட்டை விரிவுபடுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

பரத் நடிக்கும் ‘மிரள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பரத் நடிக்கும் ‘மிரள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “மிரள்”.

பரத் உடன் வாணி போஜன், கே.எஸ்.ரவிகுமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர் .
இப்படத்திற்கு எஸ்.என். பிரசாந்த் இசையமைக்கிறார்.

திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி ‘மிரள்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharat starrer Miral release date announcement

More Articles
Follows