அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கத்தில் சினேகாவுடன் இணையும் யோகி பாபு

அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கத்தில் சினேகாவுடன் இணையும் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினேகா, வெங்கட் பிரபு நடிப்பில் அருணாச்சலம் வைத்யநாதன் தயாரித்து இயக்கும் குழந்தைகளுக்கான திரைப்படமான ‘ஷாட் பூட் த்ரீ’ வேகமாக வளர்ந்து வருகிறது.

பிரசன்னா – சினேகா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அர்ஜுன் நடிப்பில் நிபுணன், மோகன்லால் நடித்த பெருச்சாழி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவரும், சீதக்காதி இணை தயாரிப்பாளருமான அருணாச்சலம் வைத்யநாதன், அவரது அடுத்த படத்தை தற்போது மும்முரமாக தயாரித்து இயக்கி வருகிறார்.

‘ஷாட் பூட் த்ரீ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்தும், குழந்தைகளின் மனதில் வைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது.

சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் பூவையார் (மாஸ்டர்), பிரபல பாடகி பிரணிதி, நடனக் கலைஞர் கைலாஷ் ஹீத் மற்றும் புதுமுகம் வேதாந்த் ஆகியோர் மைய வேடங்களில் நடிக்கின்றனர்.

நான்கு குழந்தைகளை சுற்றிய கதையான ஷாட் பூட் த்ரீ-யின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

‘மகாபாரத கதையில் ஹீரோ துரியோதணன்.; திரவுபதியாக சினேகா’

கோடை விடுமுறை கொண்டாட்டமாக இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

படத்தைப் பற்றி அருணாச்சலம் வைத்யநாதன் கூறுகையில்,…

“குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் தமிழ் படங்கள் மிகவும் குறைவு. அப்படி எடுக்கப்படும் படங்களிலும் காதல், சண்டை காட்சிகள் போன்றவை இடம் பெறும்.

அவ்வாறாக இல்லாமல், குழந்தைகளின் உலகத்தை, குழந்தைகளுக்காக, குழந்தைகளை வைத்தே காட்ட வேண்டும் என்கிற முயற்சி தான் இந்த படம்.

குழந்தைகளுக்கான திரைப்படமாக இருந்தாலும் இது அனைத்து வயதினரையும் கவரும்,” என்றார்.

பொதுவாக குழந்தைகளை வைத்து படத்தை இயக்குவது கடினம் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், அதை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக நாங்கள் மாற்றியுள்ளோம்.

ஒவ்வொரு காட்சியும் படமாக்கப்படுவதற்கு முன்னர் 20 முறை ஒத்திகை பார்க்கப்படுகிறது என்று இயக்குநரும் தயாரிப்பாளருமான அருணாச்சலம் வைத்யநாதன் கூறினார்.

சினேகா மற்றும் வெங்கட் பிரபு உள்ளிட்டோருடன் பணிபுரிவது கூறிய அவர்,…

“நீண்ட இடைவெளிக்கு பிறகு சினேகாவுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. வெங்கட் பிரபுவை இயக்குவது ஜாலியான அனுபவம். யோகி பாபு தனது தனித்துவ பாணியில் படத்திற்கு மெருகு சேர்க்கிறார். குழந்தை நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக நடித்து வருகின்றனர்,” என்றார். அன்புக் கொரு பஞ்சமில்லை என்பதே படத்தின் சாராம்சம் என்று அருண் வைத்தியநாதன் மேலும் கூறினார்.

“கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் தான் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளாரகள்.

OTT தளங்களிலும் கூட குழந்தைகளை கவரும் வகையில் படங்கள் வரவில்லை. இந்தப் படத்தின் கதையை ஆனந்த் ராகவ்வுடன் இணைந்து கொரோனாவுக்கு முன்னரே நான் எழுதி விட்டாலும், அதை எடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட உள்ளோம். இதன் கதை சென்னையில் நடைபெற்றாலும், உலகத்தில் உள்ள எந்த குழந்தையும் இதை தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். தயாரிப்பு ரீதியாகவும் படத்தின் குழுவிலும் நிறைய புதுமைகளை புகுத்தி உள்ளோம்,” என்று அருணாச்சலம் வைத்யநாதன் கூறினார்.

படத்தின் ஒளிப்பதிவை சுதர்ஷன் ஸ்ரீநிவாசன் கையாள, வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா இசையமைக்கிறார்.

படத்தொகுப்புக்கு சதீஷ் சூரியாவும், கலைக்கு ஆறுசாமியும் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த படத்தை தனது சொந்த நிறுவனமான யூனிவெர்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் அருணாச்சலம் வைத்தியநாதன் தயாரித்து இயக்குகிறார்.

Arunachalam Vaidyanathan’s Shot Boot Three starring Sneha Venkat Prabhu taking shape at brisk pace

நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா.? தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு வல்லுநர்கள் அறிக்கை

நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா.? தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு வல்லுநர்கள் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தமிழக அரசின் வழிகாட்டுதல்களின் படி சென்னை ஓமந்தூர் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டார் நடிகர் விவேக்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அரசு மருத்துவமனையில் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.

மேலும் பொதுமக்கள் யாரும் தடுப்பூசி குறித்து அச்சம் கொள்ள வேண்டாம். அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.” எனவும் கேட்டுக் கொண்டார்.

ஆனால் அடுத்த நாள் திடீரென உயிரிழந்தார்.

இதனால் நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என தகவல்கள் பரவியது.

‘‘பசுமை கலாம்’ அமைப்பில் விவேக் பெயரை இணைக்க நடிகர் செல் முருகன் திட்டம்’

இதனையடுத்து விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதன் பின்னர் தேசிய மனித உரிமை ஆணையம் மத்திய சுகாதார ஆணையத்திற்க கடிதம் ஒன்று அனுப்பியது.

அதில் நடிகர் விவேக் மரணம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க வேண்டுமாறு குறிப்பிட்டு இருந்தது.

அதன்படி விசாரணை மேற்கொண்ட தேசிய தடுப்பூசி ஆய்வுக்குழு வல்லுநர்கள் நடிகர் விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்துள்ளனர்.

நடிகர் விவேக் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரழந்து விட்டதாக வல்லுநர் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comedy Actor Vivek’s death not related to vaccine, Union govt’s AEFI panel confirms

சினிமாக்காரர்கள் வாழ்த்தல.. மீடியா பேட்டி எடுக்கல..; நொந்து போன நந்தா பெரியசாமி

சினிமாக்காரர்கள் வாழ்த்தல.. மீடியா பேட்டி எடுக்கல..; நொந்து போன நந்தா பெரியசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதர்ஷ் குரானா இயக்கத்தில் டாப்ஸி நாயகியாக நடித்துள்ள ஹிந்தி படம் ‘ராஷ்மி ராக்கெட்’.

ஓட்டப்பந்தய வீராங்கனை பற்றிய இந்தப் படத்தின் கதையை தமிழ் திரைப்பட இயக்குனரான நந்தா பெரியசாமி எழுதியிருந்தார்.

இந்த ஹிந்திப் படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்தப் படத்தை ஹிந்தி திரைப்பட பத்திரிகை விமர்சகர்களும் ஊடகங்களும் பாராட்டி வருகின்றன.

ஆனால், இந்தப் படம் குறித்து தமிழ் பத்திரிகைகள் எதையும் குறிப்பிடவில்லை என வேதனையுடன் நந்தா பெரிய சாமி தன் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘வெண்பாவுக்காக காத்திருக்கும் சிவப்புக் கம்பளம்..; நந்தா பெரியசாமியின் பெரிய மனசு’

அதில்… “ராஷ்மி ராக்கெட் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சிக்காக அந்த படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் என்னை மும்பை அழைத்திருக்கிறார்கள்.

ஆனால் இங்கே சினிமாக்காரர்கள் ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை. எந்த ஒரு மீடியாவும் ஒரு பேட்டியும் எடுக்கவில்லை.

கதையில் ராஷ்மிக்கு இழைக்கப்பட்ட அநீதி நிஜத்தில் படத்தின் கதாசிரியருக்கும் நடந்திருக்கிறது. வாழ்க தமிழ்… வேதனையுடன் நந்தா பெரியசாமி,” என அவர் பதிவிட்டுள்ளார்.

தற்போது தமிழில் சேரன், கௌதம் கார்த்திக், வெண்பா, சிவாத்மிகா, சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தை இயக்கி முடித்துள்ளார் நந்தா பெரியசாமி.

இந்த படம் தீபாவளிக்கு பிறகு தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது.

Director Nandha Periyasamy’s sad post on facebook

பிரேக்கிங் நியூஸ் அப்டேட் : அமெரிக்க ரோபோக்களுடன் நடிகர் ஜெய் செம ஃபைட்

பிரேக்கிங் நியூஸ் அப்டேட் : அமெரிக்க ரோபோக்களுடன் நடிகர் ஜெய் செம ஃபைட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகுல் பிலிம்ஸ் சார்பில் கே.திருக்கடல் உதயம் தயாரிப்பில், ஜெய் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பிரேக்கிங் நியூஸ்’.

ரோபோடிக்ஸ் டெக்னாலஜி மற்றும் அனிமேஷனை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் கதாநாயகியாக பானுஸ்ரீ, பிக்பாஸ் சினேகன், பழ.கருப்பையா, தயாரிப்பாளர் அழகிய தமிழ்மணி, தேவ்கில், ராகுல் தேவ், போன்றோர் நடிக்கின்றனர்.

அதிக பொருட்செலவில் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே நிறைந்த இப்படத்தில் ஜெய் ரோபோட்ஸ்களுடன் சண்டைபோடும் காட்சிகள் எடுக்கப்பட்டு VISUAL EFFECTS வேலைகள் நடந்துக் கொண்டு இருப்பதாக படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில், ஒளிப்பதிவாளர் ஜானிலால்/வில்லியம்ஸ், எடிட்டர் ஆண்டனி, கலை மகேஷ், VFX பிரபாகரன், இசை விஷால் பீட்டர் பணியாற்றியுள்ளனர்.

சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் ஐந்தாயிரம் துணை நடிகர்களோடு, பிக்பாஸ் சினேகன் போராட்டக்களத்தில் போராளியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்க, இத்திரைப்படத்தின் டிரெய்லர் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது…..

Breaking news updates Actor Jai Fights with American Robots

சிம்புக்கு கொலை மிரட்டல்..; முதல்வர் ஸ்டாலின் வீட்டு முன்பு டிஆர் உண்ணாவிரதம்

சிம்புக்கு கொலை மிரட்டல்..; முதல்வர் ஸ்டாலின் வீட்டு முன்பு டிஆர் உண்ணாவிரதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னாள் எம்.எல்.ஏ.,வான மைக்கேல் ராயப்பன் என்பவர் திரைப்படங்களை தயாரித்து வருபவர்.

இவர் ஆதிக் இயக்கத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்த ‘அன்பானவன் அசரவாதவன் அடங்காதவன்’ என்ற படத்தை தயாரித்தார்.

இந்த படம் பெறும் தோல்வியை தழுவியது. சிம்பு சரியாக கால்ஷீட் கொடுக்காத காரணத்தால் படத்தை சரியாக எடுக்கவில்லை என்றும் இதனால் தனக்கும், பட வினியோகஸ்தர்களுக்கும் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது என மைக்கேல் ராயப்பன் குற்றஞ்சாட்டி வந்தார்.

எனவே சிம்பு தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாதபடி, ரெட் கார்டு தயாரிப்பாளர் சங்கத்தால் போடப்பட்டது.

இதன்பின்னர் சிம்புவுக்கு எதிரான ரெட் கார்டு தடை நீக்கப்பட்டது.

ஆனாலும் தயாரிப்பாளர் மைக்கேல் பிரச்னை தீர்வில்லை.

‘நான் கெட்டவன்தான்; தனுஷ் முன்னிலையில் AAA தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் சிம்பு’

இது தொடர்பாக உஷா டி.ராஜேந்தர் பேசியதாவது…

மைக்கேல் ராயப்பனின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சம்பளத்தைக்கூட விட்டுக்கொடுத்து சிம்பு நடித்தார்.

ஆனால் படத்தை விநியோகிக்கையில் அந்தப் படத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. எனவே நஷ்டத்தை நடிகர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

நஷ்டத்தை ஒரு நடிகரின் மீது சுமத்தி, ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போதும் பிரச்சனை செய்கிறார்கள்” என்றார் உஷா.

இந்த நிலையில் சிம்புவின் பட வெளியீட்டிற்கு சிலர் நெருக்கடி கொடுப்பதாகச் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இது தொடர்பாக டிஆர் பேசும்போது…

“மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர், சிம்புவுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இப்பிரச்னையை, முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில், அவரது (முக ஸ்டாலின்) வீடு முன் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.

Producer Michael Rayappan threatening Simbu says TR

இந்திய கௌரவ விருதை பெறும் ரஜினி.; தனுஷ்-விஜய்சேதுபதிக்கும் அதே மேடையில் விருது

இந்திய கௌரவ விருதை பெறும் ரஜினி.; தனுஷ்-விஜய்சேதுபதிக்கும் அதே மேடையில் விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் தந்தையாக போற்றப்படும் தாதா சாகேப் பால்கே அவர்கள் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் இந்திய சினிமாவின் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது கருதப்படுகிறது.

வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை ஏற்கெனவே பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களும் பெற்றுள்ளனர்.

‘‘அண்ணாத்த’ படத்தில் மருதாணி பாட்டு…; ரஜினி குஷ்பூ மீனா கீர்த்தி ஆட்டம்’

இவர்களின் வரிசையில் 2019-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக விருது விழா நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் வருகிற (அக்டோபர்) 25ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் விழாவில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மேடையில் மற்ற கலைஞர்களுக்கும் விருது வழங்கப்படவுள்ளது.

‘First on Net அசத்தல்.. அருமை.. அதிரடி.; அசுரன் விமர்சனம் (4.25/5)’

2019ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷிற்கு வழங்கப்பட உள்ளது

மேலும் சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக) பெறவிருக்கிறார்.

விஸ்வாசம் படத்தின் சிறந்த இசையமைப்புக்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும், பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக சிறந்த ஜூரி விருதையும், நாக விஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் பெறவுள்ளனர்.

Rajini Dhanush Vijay Sethupathi will receive awards at national awards

More Articles
Follows