வைரமுத்து வரிகளுக்கு டி ஆர் பாட்டு.; பிரபு மற்றும் வெற்றியை இணைத்த ‘ஆண்மகன்’

வைரமுத்து வரிகளுக்கு டி ஆர் பாட்டு.; பிரபு மற்றும் வெற்றியை இணைத்த ‘ஆண்மகன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வைரமுத்து வரிகளுக்கு டி ஆர் பாட்டு.; பிரபு மற்றும் வெற்றியை இணைத்த ‘ஆண்மகன்’

பிரபு – வெற்றி – கிருஷ்ண பிரியா நடிக்கும் ஆண் மகன்*

முதன்மை கதாபாத்திரத்தில் அப்பாவாக பிரபு நடிக்க.. 8 தோட்டாக்கள் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.. கதாநாயகியாக கேரளத்து பைங்கிளி கிருஷ்ண பிரியா அறிமுகம் ஆகிறார்.

இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை, மற்றும் பலர் நடிக்கின்றனர்.

கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் இளம் தயாரிப்பாளர் KM சபி மற்றும் பாரூக் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக திரைப்படம் உருவாகிறது.

*மகாகந்தன் அறிமுக இயக்குனர்*

வெற்றிப்பட இயக்குனர்களான வசந்த் சாய் மற்றும் நந்தா பெரியசாமி அவர்களுடன் பணிபுரிந்த மகா கந்தன் இயக்கத்தில் கத்திரி வெயிலிலும் அதிதி புதிரியாய் தயாராகிறது.

*வைரமுத்து – T ராஜேந்தர் – நவ்பல் ராஜா*

ஆண்மகனின் அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து பட்டைதீட்ட… அடுக்குமொழி நாயகர் டி ஆர் ஒரு பாடலை பாடுவது இப்படத்தின் தனிச்சிறப்பு.

நாடி நரம்புகளை நடனம் ஆட வைக்கும் துள்ளல் இசையோடு நவ்பல் ராஜா தமிழ் திரை உலகுக்கு புதிய இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்!

கிராமப்புற காட்சிகளை கண்ணுக்கு குளுமையாக ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனி படம் பிடித்துள்ளார் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம், தூத்துக்குடி, மரக்காணம், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

Prabu Vettri Krishna Priya starring Aanmagan

ராம் கந்தசாமி இயக்கத்தில் கமல்குமார்.; ஆட்டுக்குட்டி புஜ்ஜி-யை தேடி ஒரு பயணம்

ராம் கந்தசாமி இயக்கத்தில் கமல்குமார்.; ஆட்டுக்குட்டி புஜ்ஜி-யை தேடி ஒரு பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம் கந்தசாமி இயக்கத்தில் கமல்குமார்.; ஆட்டுக்குட்டி புஜ்ஜி-யை தேடி ஒரு பயணம்

குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் திரைப்படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’

ஹாலிவுட்டில் குழந்தைகளின் திரைப்பட உலகம் மாபெரும் வணிகப் பரப்பாக உள்ளது. ஆனால் இந்தியத் திரையுலகில் உள்ள மாபெரும் குறை குழந்தைகள் இடம்பெறும் வகையில் படங்கள் உருவாகின்றன.

ஆனால் அவை குழந்தைகளுக்கான படங்களாக இருப்பதில்லை. இந்நிலையில் குழந்தைகளுக்கான ஒரு திரைப்படமாக உருவாகி இருப்பதுதான் புஜ்ஜி அட் அனுப்பட்டி. இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.

இப்படத்தில் கமல்குமார்,
நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி,
கார்த்திக் விஜய் ,
குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன்,
லாவண்யா கண்மணி,
நக்கலைட்ஸ் ராம்குமார் ,
நக்கலைட்ஸ் மீனா ,
வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை என்ன?

அண்ணன் சரவணன், தங்கை துர்கா இருவரும் ஊத்துக்குளி கிராமத்தில் பெற்றோர்களுடன் ஒரு பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்கள். பண்ணையின் உரிமையாளர் சிவா குழந்தைகள் மேல் பிரியம் கொண்டவர். சரவணன் ஓர் அசைவப் பிரியன்.

ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பும் பொழுது இருவருக்கும் வழியில் ஓர் ஆட்டுக்குட்டி கிடைக்கிறது..
துர்கா அதைத் தன்னுடன் வீட்டுக்கு எடுத்து வந்து,அதற்கு புஜ்ஜி என்று பெயர் வைத்து பிரியமுடன் வளர்க்கிறாள்.

ஆனால் சரவணனோ அதை உணவாகப் பார்க்கிறான். நிலைமை இப்படி இருக்க சில நாட்கள் கழித்து ஆட்டின் உரிமையாளர் அதைத் தேடி வந்து எடுத்துச் செல்கிறார். இதனால் மனமுடைந்து போகிறாள் துர்கா. ஆட்டுக்குட்டியைப் பிரிந்து துர்கா மனம் வருந்துவதைப் பார்த்து சிவா புஜ்ஜியைத் தேடிக் கண்டுபிடித்து மீட்டுக் கொண்டு வந்து துர்காவிடம் சேர்க்கிறான்.

சில மாதங்களில் புஜ்ஜி வளர்ந்து பெரிய கிடா ஆகிறது. இந்நிலையில் குழந்தைகளின் குடிகார அப்பா முருகேசன் குடிப்பதற்குப் பணம் இல்லாமல் தவிக்கும் பொழுது புஜ்ஜியை விற்றுக் குடித்து விடுகிறார். ஆட்டுக்குட்டியைக் காணாமல் தவிக்கும் துர்காவைச் சமாதானம் செய்ய இம்முறை ஆட்டுக்குட்டியைத் தேடிப் புறப்படுகிறான் அண்ணன்.

தன் தங்கையையும் உடன் கூட்டிச் செல்கிறான். புஜ்ஜியைத் தேடிப் புறப்படும் இருவரின் பயணமே மீதிக்கதை.

குழந்தைகளின் மனஉலகத்தைக் காட்சிகளாகக் கண்முன் விரித்துக் காட்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ராம் கந்தசாமி எழுதி இயக்கி தனது கவிலயா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார்.

கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். அருண்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சரவணன் மாதேஸ்வரன் படத்தொகுப்பு செய்துள்ளார். கு. கார்த்திக் பாடல்களை எழுதியுள்ளார்.

புஜ்ஜி படத்தைப் பற்றி இயக்குநர் ராம் கந்தசாமி பேசும்போது,

” குழந்தைகளின் உலகம் அன்பானது . அந்த உலகத்துக்குள் நாம் நுழைந்து விட்டால் இந்த உலகமே நமக்கு அழகானதாக மாறிவிடும். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நமது உணர்வில் மாற்றம் ஏற்படும்.

ஓர் உயிரைத் தேடிப் பயணம் செய்யும் இரு உயிர்களின் கதையாக இப்படக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

படம் பார்த்த பிறகு அனைவரும் கூறியது இதுதான் ‘இது குழந்தைகள் மட்டுமல்ல அனைவருக்குமான படம்’ என்பது தான். புஜ்ஜி விரைவில் திரைக்கு வருகிறது ” என்றார். புஜ்ஜி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டிய சென்சார் அதிகாரிகள்!

‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ திரைப்படத்தை 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

குழந்தைகள் உலகத்தைத் திரையில் காட்டும் அனுபவமாக விரைவில் இப்படம் வெளியாக உள்ளது..

Kamalkumar staaring Bujji Journey of Goat

மாசி வீதி இட்லியும் மட்டன் சுக்காவுமாக ‘உயிர் தமிழுக்கு’.; பாராட்டு மழையில் படக்குழு

மாசி வீதி இட்லியும் மட்டன் சுக்காவுமாக ‘உயிர் தமிழுக்கு’.; பாராட்டு மழையில் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாசி வீதி இட்லியும் மட்டன் சுக்காவுமாக ‘உயிர் தமிழுக்கு’.; பாராட்டு மழையில் படக்குழு

ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இதில் அமீர்,சாந்தினி ஸ்ரீதரன் இமான் அண்ணாச்சி குட்டி புலி சரவணசக்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.. இந்த படம் குறித்து சில பிரபலங்கள் தெரிவித்துள்ளதாவது..

அமீர் நடித்த
“உயிர் தமிழுக்கு“ ப்ரிவீவ் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது
நான் யோகி, வடசென்னை ராஜன் மனநிலையில் உள்ளே அமர்ந்திருந்தேன்.

ஆனால் அவர் தோன்றும் முதல் காட்சியிலேயே அந்த இமேஜை உடைத்து சிரிக்க வைத்து காதல்,காமெடி, ஆக்‌ஷன், அரசியல் பகடியென
படம் முழுக்க மாஸ் எண்டர்டைனராக ஆச்சர்யப்படுத்துகிறார் நடிகர் அமீர்
சமீபத்தில் நடிகரான இயக்குநர்கள் கதை நாயகனாகவே திரையில் தோன்றினார்கள் அமீர் தொழில்முறை கதாநாயகனாகவே அதகளப்படுத்தியிருக்கிறார்.

படம் முழுவதும் அவருடைய நடிப்பில் பருத்திவீரன் கார்த்தியின் உடல் மொழியும் குறும்பும் அச்சு அசலாக தெரிகிறதென நினைத்தேன் சற்று தாமதமாகத்தான் உணர்ந்தேன் அந்த பருத்திவீரனே இவர்தானென்று எதார்த்தமான,
கலகலப்பான, நேர்த்தியான திரைப்படமாக இருந்தது ‘உயிர் தமிழுக்கு “ இப்படத்தின்
மூலம் திறமையான இயக்குநர் அமீர் தன்னை தவிர்க்கமுடியாத கமர்சியல் ஹீரோவாகவும் நிலை நிறுத்தியிருக்கிறார்.

இத்திரைப்படத்தை தியேட்டரில் ரசிகர்கள் சிரிப்பும், கும்மாளமாகவும் கொண்டாடுவதைக்கான ஆவலோடு இருக்கிறேன்.

அறிமுக இயக்குநர் ஆதம் பாவாவிற்கும்,அமீர் சாருக்கும் வாழ்த்துக்கள் 💐
நாராயணன்
உதவி இயக்குநர்

———-

உயிர் தமிழுக்கு
முதல் பிரதி பார்த்தேன்
அருமையான மாஸ்
கமர்சியல் படம்.

படம் பக்கா theatre mood ல்உள்ளது அமீரின் உடல் மொழி மற்றும் வாய் மொழி இரண்டும் ஒரு பக்கா கம்ப்ளீட் கமர்சியல் ஹீரோவாக முன்னிருத்துகிறது காதல், சண்டை காட்சிகளிலும் அவர் நடிப்பில் ஒரு மாஸ் இருந்தது அமீர் அண்னனுக்கு இயல்பாகவே உள்ள நகைச்சுவை உணர்வை நானறிவேன் அது படத்தில் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

என்னை அறியாமல் பல காட்சிகளில் சிரித்து ரசிக்க முடிந்தது ஒவ்வொரு காட்சியிலும் அண்ணனின் நடிப்பு அசால்ட் மதுரை ரகம் வடசென்னை ராஜனை பார்த்த ரசிகர்கள் இந்த அழகான எம் ஜி ஆர் பாண்டியனை நிச்சயம் ரசிப்பார்கள் படம் பிரம்மாண்டமாக ரிச்னஸ்ஸாக இருந்தது.

இமான் அண்ணாச்சி + அமீர் . சத்யராஜ்+ கவுண்டமணி கூட்டனியை பல இடங்களில் நினைவுபடுத்துவது.. ஆரோக்ய காமெடி கமர்ஷியல் கலாட்டா இவை அனைத்தும் ஒரு கமர்சியல் படஆடியன்ஸுக்கு புல் மீல்ஸ் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள்.

அமீர் அண்ணனுக்கும், இயக்கி தயாரித்த ஆதம் பாவாவுக்கும், வெளியிடும்
நண்பர் சுரேஷ் காமாட்சிக்கும்
உயிர் தமிழுக்கு முக்கியமான படம் வாழ்துக்கள் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..

அன்புடன் அஸ்லம்

——-

ஒரு மதிய வேளை, திடீரென அமீர் நடித்த ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் முன்னோட்ட காட்சி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

மதுரை, தேனி பின்னணியில் வரும் படங்கள் என்றாலே ஒரு தனி குஷி தான். அதுவும் அரிவாள்களைத் தவிர்த்து.. மதுரை வட்டாரத்தின் இன்னொரு பரிமாணமான நட்பு, லந்து, அலப்பரை, காதல்,அரசியல் என மாசி வீதி இட்லியும், மட்டன் சுக்காவுமாக ஒரு ட்ரீட் கிடைத்தால்.. டபுள் குஷி தானே.!!

சமீபத்தில் திரையரங்குகளுக்குள் நுழைந்தாலே.. இடைவிடாது சுடும் எந்திரத் துப்பாக்கிகள், திடீரென துண்டிக்கப்பட்டு உருளும் தலைகள், திரையெங்கும் நிறையும் ரத்த சகதிகள், வெடித்து சிதறும் கார்கள்.. இவைதான் நம் கண்களிலும், காதுகளிலும் ரீங்காரமிடுகின்றன. கண்ணையும் காதையும் மூடினாலும் இந்த ரீங்காரங்கள் நிற்பதில்லை.

‘உயிர் தமிழுக்கும்’ அப்படியான ரத்தம் தெறிக்கும் அரசியல், கேங்கஸ்ட்டர் படமாகத் தான் இருக்குமென்ற எதிர்பார்ப்போடு அரங்கில் உட்கார்ந்தேன்.

ஆனால், ரத்த படலத்தை முற்றிலுமாகத் தவிர்த்து.. ஒரு அழகான காதல் கதையை அரசியல் பின்னணியில் நகைச்சுவையும், கொண்டாட்டமும் நிறைத்து சொல்லியிருக்கிறார்கள்.

மதுரை பகுதிகளின் ஆளுமைகளுக்கு ஒரு அலட்சியமும், திமிரும், லந்தும் கலந்த வசீகரமான மேனரிசம் இருக்கும்‌. அமீரிடம் இந்த மேனரிசம் ஒரு மாஸ் கதாநாயகனுக்கான கரிஷ்மாவாக அழகாக விளையாடுகிறது.

சில காட்சிகள் பார்த்து பழகிய காட்சிகள் என்றாலும் அதை அமீர் மதுரை அலப்பரையோடு நிகழ்த்தும் போது.‌. நமக்கு ஒரு புது சுவாரஸ்யம் கிடைக்கவே செய்கிறது.

சமகால வாழ்க்கைச் சூழலில்.. சிரித்து கொண்டாடி மனதை லேசாக்கும் ஒரு படம் கொடுத்ததற்கு ‘உயிர் தமிழுக்கு’ குழுவினருக்கு மனநிறைந்த பாராட்டுக்கள்.

எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ஆதம் பாவா தமிழ் திரையுலகிற்கு ஒரு நல்வரவு. வித்யாசாகரின் மறுவரவு.. படம் நமக்கு கொடுக்கும் இன்னொரு ட்ரீட்.

படத்தை தன் தோளில் சுமக்க வல்ல ஒரு கரிஸ்மேட்டிக் ஹீரோ இந்தப் படத்தின் மூலம் அவதரித்துள்ளார் என்றால் அது மிகையல்ல‌.!

தமிழ் வெல்லும் 💐💐
அருண்
உதவி இயக்குநர்

Good response for Uyir Tamizhuku from all

‘தீரா என் ஆசை என் ஓசைகள் நீ..’.. எலக்சன் படத்திலிருந்து லவ் டூயட் இதோ..

‘தீரா என் ஆசை என் ஓசைகள் நீ..’.. எலக்சன் படத்திலிருந்து லவ் டூயட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தீரா என் ஆசை என் ஓசைகள் நீ..’.. எலக்சன் படத்திலிருந்து லவ் டூயட் இதோ..

*விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!*

*ரீல் குட் ஃபிலிம்ஸின் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!*

விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘சேத்துமான்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் மேற்கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.

மே மாதம் 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற
‘தீரா என் ஆசை என் ஓசைகள் நீ..’ என தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுத பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். மெலோடி பாடலாக தயாராகி இருக்கும் இந்தப் பாடல் திரையிசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம் பெற்று சார்ட் பஸ்டர் ஹிட்டாகியிருக்கிறது.

Romantic duet song from Election is here

அதர்வா பிறந்த நாளில் DNA ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நெல்சன் வெங்கடேசன்

அதர்வா பிறந்த நாளில் DNA ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நெல்சன் வெங்கடேசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதர்வா பிறந்த நாளில் DNA ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நெல்சன் வெங்கடேசன்

நடிகர் அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு ’டிஎன்ஏ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது!

‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார் தயாரிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘ஃபர்ஹானா’ படப்புகழ் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்கிறார்.

விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘சித்தா’ படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்ற நிமிஷா சஜயன், கதாநாயகியாக நடிக்கிறார்.

அதர்வா முரளியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் அதர்வா முரளியின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்தான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இயக்குநர் நெல்சன் தனது வெவ்வேறு ஜானர்களைத் தனது முந்தையப் படங்களில் முயற்சி செய்து வெற்றியும் கண்டவர்.

இவருடன் ‘டிஎன்ஏ’ படத்தில் திறமையான நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் டிரைலர், ஆடியோ மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

DNA first look launched on Atharvaa Birthday

பெண்கள் தங்கள் நலனை சிந்திப்பது சுயநலமா.? சத்யபாமா நிகழ்ச்சியில் சமந்தா பேச்சு

பெண்கள் தங்கள் நலனை சிந்திப்பது சுயநலமா.? சத்யபாமா நிகழ்ச்சியில் சமந்தா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்கள் தங்கள் நலனை சிந்திப்பது சுயநலமா.? சத்யபாமா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சமந்தா பேச்சு

*சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் அன்பு என்ற புதிய ஆரோக்கிய மேம்பாட்டிற்கான “ஷீ ஃபர்ஸ்ட்” சேவையை டாக்டர் மரியஜீனா ஜான்சன் மற்றும் சமந்தா தொடங்கி வைத்தனர்.*

சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, மே மாதம் 5 ஆம் தேதி, 2024 அன்று பெண்கள் மேம்பாட்டுக்கான ‘அன்பு’ என்ற புதிய சேவையை பெருமையுடன் தொடங்கியது.

பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான அன்பு ஹெல்த் கார்டுகளை பெண் ஊழியர்கள், மாணவிகள் மற்றும் பொது வாழ்வில் உள்ள பெண்களுக்கு சத்யபாமாவின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் அவர்கள் வழங்கினார்.

வரவேற்புரையை துணைத் தலைவர் மரிய பெர்னாடெட் தமிழரசி & இந்த முயற்சியின் சிறப்பம்சங்களை துணைத் தலைவர் கேத்தரின் ஜான்சன் பகிர்ந்து கொண்டனர்.

இந்த விழாவில் தலைவர் டாக்டர் மேரி ஜான்சன் மற்றும் துணைத் தலைவர் அருள் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

வேந்தர் டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் அவர்கள் தனது உரையில், ஒவ்வொரு பெண்ணும் தனது ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வது குடும்பத்தின் அஸ்திவாரமாகத் தொடர உதவுவதற்கு மிக முக்கியமான அம்சமாகும் என்று வலியுறுத்தினார்.

இந்த முயற்சி ஒவ்வொரு பெண்ணின் மனதையும் சென்றடைய மேற்கொண்ட முயற்சியாகக் குறிப்பிட்டு, பெண்களிடையே நல்வாழ்வை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி, பெண்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தம் வகையில் துவக்கியுள்ளோம்” என்றார்.

“ஆரோக்கியமான பெண் குடும்பத்தை எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பார்” என்று கூறி தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பெண்கள் சுய சுகாதார முன்னேற்ற கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.

இந்த நிகழ்விற்கு புகழ்பெற்ற நடிகை சமந்தா கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்… அவர் தன்னை சத்யபாமா குடும்பத்துடன் இணைத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், இந்த சேவை முயற்சிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும்… “பெண்கள் தங்கள் நலனைப் பற்றி சிந்திப்பது சுயநலம் என்று கருதி முக்கியத்துவம் தருவதில்லை” மற்றும் தற்போது பெண்களின் ஆரோக்கியம் பற்றிய புள்ளி விவரங்கள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.. அதனால் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை.” என்றார்.

சத்யபாமாவின் அன்பு ஹெல்த் கார்டு முயற்சி இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள பெண்களின் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்” என்று நடிகை சமந்தா கூறினார்.

இந்த ஹெல்த் கார்டுகள் மூலம் பொது மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் தரமான பராமரிப்பு சேவைகளை வழங்கும் சத்யபாமா மருத்துவமனையில் மேமோகிராம், இரத்த பரிசோதனை பகுப்பாய்வு, நீரிழிவு நோய்க்கான பரிசோதனை, கண் பராமரிப்பு, வாய்வழி சுகாதாரம், வயிற்று ஸ்கேன், ஹெச்பி எண்ணிக்கை ஆகியவற்றை இலவசமாகப் பெறலாம்.

சத்யபாமா மருத்துவமனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மிக உயர்ந்த தரமான பராமரிப்பை வழங்க உறுதிபூண்டுள்ளது.

பெண்களின் ஆரோக்கியம் மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க பிரிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அடுத்த தலைமுறையை வாழ்வில் கொண்டு வருவது பெண்கள் தான். எனவே, அவர்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது முக்கியம்.

சத்யபாமா பொது மருத்துவமனையில் பின்வரும் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஆலோசனை சேவைகள்..:
கண்
காது மூக்கு தொண்டை
மகளிர் நோய் மருத்துவ இயல்
மருத்துவ சேவைகள்
பொது அறுவை சிகிச்சை
குழந்தை மருத்துவம்
இரையகக் குடலியவியல் (Gastroentrology)
நீரிழிவு நோய்
பல்
இரத்த சோதனை:
முழுமையான இரத்த எண்ணிக்கை
கல்லீரல் செயல்பாடு சோதனை
சிறுநீரக செயல்பாடு சோதனை
எலக்ட்ரோலைட்டுகள்
HbA1c
டைபாய்டு பரிசோதனை

மற்ற சேவைகள்
எக்ஸ்ரே
ஈசிஜி
அனைத்து பகுதிகளிலும் அல்ட்ராசவுண்ட் குறிப்பாக வயிறு பகுதி
மேமோகிராம்
தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி

“ஒவ்வொரு பெண்ணும் கண்ணியம், மரியாதை மற்றும் தனிப்பட்ட கவனத்துடன் நடத்தப்படும் உங்கள் ஆரோக்கியத்திற்கான பயணம் இங்கே தொடங்குகிறது” என்று சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் கூறினார்.

Samantha speech at Sathyabama Deemed University event

More Articles
Follows