கமல்-ரஜினி அரசியல் வருகை குறித்து அருண்விஜய் பேட்டி

கமல்-ரஜினி அரசியல் வருகை குறித்து அருண்விஜய் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijay talks about Rajini and Kamals Political entryதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார் நடிகர் அருண்விஜய்.

அவருடன் அவரது மனைவி ஆர்த்தியும் உடனிருந்தார்.

சாமி தரிசனம் முடித்துவிட்டு வந்த அவரை வழக்கம்போல செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர் பேசியதாவது…

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நான் அடிக்கடி வருவேன்.

அப்போது இங்குள்ள யானை ருக்குவிடம் ஆசி வாங்குவேன். ஆனால் இப்போது அந்த யானை இல்லாதது வருத்தமாக உள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் நான் நடித்துள்ள ‘தடம்’ என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

அதனையடுத்து மணிரத்தினம் இயக்கும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடிக்க உள்ளேன்.

அதுபோல் பிரபாசுடன் சாகோ என்ற படத்திலும் நான் நடிக்கிறேன்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் நலிந்த நடிகர்கள் பயன் பெறுவார்கள்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்துள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது.”

இவ்வாறு அருண்விஜய் கூறினார்.

Arun Vijay talks about Rajini and Kamals Political entry

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி & ஆராய்ச்சி நிறுவன பொன்விழா கொண்டாட்டம்

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி & ஆராய்ச்சி நிறுவன பொன்விழா கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NITTTR 50 Years Anniversary Celebrations1964ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட NITTTR எனும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சுயாட்சி நிறுவனமாகும்.

தென்னிந்திய தொழில்நுட்ப கல்லூரிகளின் திறனை மேம்படுத்த, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், இப்போது பல துறைகளை கொண்டு இயங்கி வருகிறது.

ஆந்திரா, கேரளா, கர்நாடக, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த தொழில் நுட்ப நிறுவன ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டை செயல்படுத்தி வருகிறது.

மேலும் இந்நிறுவனம் ஹைதராபாத், பெங்களூரு, கலாமாசேரி & விஜயவாடா போன்ற நகரங்களிலும் இயங்கி வருகிறது. 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள இந்த நிறுவனத்தின் பொன் விழா கொண்டாட்டம் வெகு விமரிசையாக சென்னையில் நடைபெற்றது.

விழாவில் முக்கிய விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைக்க, விழா மலர் வெளியிடப்பட்டது.

கடந்த 50 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் பணி புரிந்த இயக்குனர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், மற்ற பணியாளர்கள் ஆகியோரை டாக்டர் அல்லம் அப்பாராவ் மற்றும் டாக்டர் சுதீந்திரநாத் பண்டா ஆகியோர் கவுரவித்தனர்.

விழாவில் துவக்கத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் பெயரில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடத்தை டாக்டர் அல்லம் அப்பாராவ் திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய சேர்மன் டாக்டர் சுதீந்திரநாத் பண்டா, இந்நிறுவனத்தின் தூண்களாக விளங்கியவர்களை பற்றியும், நிறுவனத்தின் பெருமைகளையும் பட்டியலிட்டார்.

அவர் கூறும்போது, “தொழில்நுட்ப முறையில் ஆசிரியர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பான ஆசிரியர்கள் உருவாக்கியிருக்கிறோம்.

உலகம் முழுவதில் இருந்தும் ஆண்டுக்கு 250 பேர் வீதம் இங்கு வந்து பயிற்சி பெறுகிறார்கள்.

அவர்களுக்கு தங்கும் வசதிகள் உட்பட சகல வசதிகளையும் செய்து தருகிறது இந்நிறுவனம். 532க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பாடங்களை (Educational Films) வீடியோவாக தயாரித்து வெளியிடப்பட்டிருக்கிறது.

IIT, NIT, Anna University உட்பட பெருமைமிகு நிறுவனங்களுக்கும் மற்றும் இதர தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கும் (Faculty Development Course) ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களான TNEB, TNSCB, CPWD, PWD ஆகிய நிறுவனங்களுக்கு ஆலோசனை & திட்டங்களை வழங்கி வருகிறது” என்றார்.

இவ்விழாவில் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் அல்லம் அப்பாராவ், முன்னாள் முதல்வர் நாராயண ராவ், முன்னாள் இயக்குனர் ஜெய்பிரகாஷ் நாராயண், பேராசிரியர் சைனி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

NITTTR 50 Years Anniversary Celebrations

NITTTR 50 Years Anniversary Celebrations

இலவச ஊட்டச்சத்து ஆலோசனை மையம்; திவ்யா சத்யராஜ் அதிரடி!

இலவச ஊட்டச்சத்து ஆலோசனை மையம்; திவ்யா சத்யராஜ் அதிரடி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

divya sathyarajஇலவச மருத்துவம், இலவச கல்வி இதை தரும் அரசுதான் நல்ல அரசு. சத்யராஜ் அவர்களின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார் என்பதை அனைவரும் அறிவோம்.

சில நாட்களுக்கு முன் சென்னையில் ஈழத்து தமிழர்களுக்கும், தமிழகத்தில் வசிக்கும் வசதியில்லாத மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து முகாம் ஒன்றை நடத்தினார்.

இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் ஊட்டச்சத்து சம்பந்தமான ஆலோசனையும், இலவச விட்டமின் மாத்திரைகளையும் வழங்கினார்.

இது பற்றி திவ்யா சத்யராஜ் அவர்கள் கூறியது

சிறுவயது முதலே ஊட்டச்சத்து நிபுணராக வேண்டும் என்பது என் ஆசை.

என் படிப்பு தமிழ்நாட்டில் வாழும் ஏழை மக்களுக்கும், ஈழத்து தமிழர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது என் பெருங்கனவாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை பற்றியும், ஊட்டச்சத்து குறைபாடு பற்றியும் ஆராய்ச்சி செய்து வந்தேன். மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து கொண்டேன்.

இனி ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் ஊட்டச்சத்து ஆலோசனை மையம் சென்னையில் தொடங்க உள்ளேன்.

ஊட்டச்சத்து மாத்திரைகள் தொடர்ச்சியாக இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

ஆரோக்கியமான வாழ்க்கை வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான் என்கிற நிலைமை மாற இது ஃபர்ஸ்ட் ஸ்டெப்பாக இருக்கும் என கூறுகிறார்.

தமிழர்களுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஓங்கி ஒலிக்கும் முதல் குரல் சத்யராஜ் அவர்களுடையது.

அதைப்போல மருத்துவ உலகில் புதியதோர் விதி செய்ய தொடங்கியிருக்கும் திவ்யா சத்யராஜ் அவர்களை அனைவரும் பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவோம்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பது பழமொழி அல்ல. நம் கண் காண நிஜமொழி.

சாய் பல்லவியின் கரு படத்தலைப்பை மாற்றினார் விஜய்

சாய் பல்லவியின் கரு படத்தலைப்பை மாற்றினார் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

diya tamil movieவிஜய் இயக்கத்தில் சாய் பல்லவி, குழந்தைன் நட்சத்திரம் வெரோனிகா நடித்துள்ள படம் ‘கரு’. ‘

லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து சென்சாரும் முடிந்துவிட்டது.

சென்சாரில் U/A சர்டிஃபிக்கெட் கிடைதுள்ள இந்த படம் மிக விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பெயர் இப்போது ‘தியா’ என்று மாற்றப்பட்டுள்ளது.

‘கரு’ என்று இருந்த டைட்டிலை ‘தியா’ என்று மாற்றி வைத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து எந்த தகவலையும் படக்குழுவினர் இதுவரை வெளியிடவில்லை.

செல்வராகவன்-சூர்யாவுடன் இணைந்தார் தீரன் நாயகி; ட்விட்டரில் கருத்து

செல்வராகவன்-சூர்யாவுடன் இணைந்தார் தீரன் நாயகி; ட்விட்டரில் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rakul preet singhதமிழ் சினிமாவில் 50 நாட்களாக வேலை நிறுத்தம் நடைபெற்று வந்தது. எனவே எந்த படத்தின் சூட்டிங் நடக்காமல் இருந்தது.

தற்போது ஸ்டிரைக் நிறைவு பெற்றதால், பெரும்பாலான படத்தின் சூட்டிங்குகள் தொடங்கிவிட்டன.

சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படத்தின் 2ஆம் கட்டப் படப்பிடிப்பை இன்று சென்னையில் துவங்கியிருக்கிறார் செல்வராகவன்.

இதில் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்கும் கலந்துக் கொண்டுள்ளார் என்பதை அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மற்றொரு நாயகியாக சாய் பல்லவி நடிக்க, வில்லனாக ஜெகபதிபாபு நடிக்கிறார்.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

துல்கர் படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நிவேதா பெத்துராஜ்

துல்கர் படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dulquer salman and nivetha pethurajதேசிங்கு பெரியசாமி இயக்கும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்து வருகிறார் மலையாள நடிகர் துல்கர் சல்மான்.

நாயகியாக ரிது வர்மா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ரக்‌ஷன் நடிக்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைன் காதலர் தினத்தில் வெளியாகி வைரலானது.

இப்படத்தை முடித்துவிட்டு ரா.கார்த்திக் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார் துல்கர்.

பயணம் சம்பந்தப்பட்ட இந்த கதையில் துல்கர் ஜோடியாக 4 நாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேகா ஆகாஷ் மற்றும் ஷாலினி பாண்டேவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்யும் இதன் படப்பிடிப்பை வருகிற அக்டோபர் மாதம் துவங்க உள்ளனர்.

இதில் ஒரு நாயகியாக நடிகை நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிவேதா நடிப்பில் டிக் டிக் டிக் மற்றும் பார்ட்டி ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.

இதனையடுத்து விஜய் ஆண்டனியின் `திமிரு பிடிச்சவன்’ படத்தில் போலீசாக நடித்து வருகிறார்.

More Articles
Follows