பிரச்சினை இல்லாமல் மணிரத்னம் படத்தை முடித்து கொடுத்தார் சிம்பு

Simbu completed his portions in Chekka Chivantha Vaanam and Shoot wrapped

சிம்பு நடிப்பில் வளர்ந்து வந்த செல்வராகவனின் கான் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

அதற்கு முன் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படமும் பல பிரச்சினைகள் தாண்டியே வெளியானது.

சிம்பு சூட்டிங்குக்கு சரியாக வராத காரணத்தால் படத்தின் கதையையே மாற்றியதாக ஏஏஏ (அன்பானவன் அசராதவன் அடங்காதவன்) படக் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இப்படிதான் அண்மை காலமாக சிம்பு படத்தின் செய்திகளை பார்த்து வந்தோம்.

ஆனால் முதன்முறையாக எந்த பிரச்சினையும் இல்லாமல் ஒரு படத்திற்கு கால்ஷீட் கொடுத்து அதை சரியாக முடித்துக கொடுத்துள்ளார் சிம்பு.

அந்த படம்தான் மணிரத்னம் இயக்கி வரும் செக்கச் சிவந்த வானம் திரைப்படம்.

இப்படத்தில் சிம்பு உடன் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் துபாயில் படப்பிடிப்பை முடித்த மணிரத்னம், அடுத்ததாக செர்பியாவில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தார்.

தற்போது சிம்பு காட்சிகள் நிறைவடைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது.

விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்க இருப்பதாகவும் படத்தை வருகிற செப்டம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Simbu completed his portions in Chekka Chivantha Vaanam and Shoot wrapped

Overall Rating : Not available

Related News

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில்…
...Read More
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று சாமி…
...Read More

Latest Post