தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில் எம்.ஆர். மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி ரித்விக், சாய் ப்ரியா, ஸ்ரீனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘டைனோசர்ஸ்’.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயகுமார் பேசியதாவது..
இந்த படத்தின் டிரெய்லர் முடிந்ததும் தயாரிப்பாளர் நம்பிக்கையுடன் பேசினார், அதை வைத்தே சொல்லுகிறேன் அவர் மட்டுமல்லாது படக் குழுவினர் அனைவரும் அதே நம்பிக்கையோடு உள்ளனர்.
கதையின் நாயகன் உதய் கார்த்திக் என் குடும்பத்தின் பிள்ளை அவருக்காகத் தான் இங்கு வந்தேன்.. படக்குழுவினர் அனைவரும் புதிது என்றனர். இப்போது படத்தின் கதையும் படமும் தான் முக்கியம் எனவே மக்கள் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்வார்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
நடிகர் அருண் விஜய் பேசியதாவது…
எனக்கு இங்குள்ள அனைவரது மனநிலை தெரியும்.. நானும் அது போலத் தான் பல தடைகளைத் தாண்டி வந்தேன், படத்தின் டிரெய்லரை பார்த்தேன் நன்றாக உள்ளது.
மாதவன் சிறப்பாகத் தனது பணியைச் செய்துள்ளார் வாழ்த்துக்கள், தயாரிப்பாளர் ஸ்ரீனி சார் மிகவும் நம்பிக்கையாகப் பேசுகிறார்.. நான் இப்படி ஒரு தயாரிப்பாளரைப் பார்த்து இல்லை , போனி கபூர் சார் கொடுத்த ஆதரவிற்கு நன்றி மற்றும் இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
arun vijay speech in dienosirs movie trailer luanch