143 தயாரிப்பாளரை அணுகினேன்.. சினிமா எட்டி உதைக்கிறது – மாதவன்

143 தயாரிப்பாளரை அணுகினேன்.. சினிமா எட்டி உதைக்கிறது – மாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில் எம்.ஆர். மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி ரித்விக், சாய் ப்ரியா, ஸ்ரீனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘டைனோசர்ஸ்’.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் M R மாதவன் பேசியதாவது…

சினிமா கண்டிப்பாக அனைவரையும் எட்டி உதைக்கும்.. நாம் தான் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.. படம் வெற்றி பெறுவது எனக்கு முக்கியம் என்பதை விடப் படத்தில் பணி புரிந்துள்ள 100 பேருக்குத் தான் முக்கியம்.

இந்தப்படம் 33 கதாநாயகர்களிடம் சென்றது. ஆனால் கார்த்திக் இப்படத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார்.

பல நண்பர்களின் முயற்சியால் தான் நான் இங்கு வந்தேன், தயாரிப்பாளர் ஸ்ரீனி சார் என் தந்தை போன்றவர், நான் கேட்ட அனைத்தும் செய்து கொடுத்தார், நான் வாழ் நாள் வரை அவரை மறக்க மாட்டேன்,

143 தயாரிப்பாளரை நான் அணுகியுள்ளேன். ஆனால் இவர் தான் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார், என்னை இந்த தயாரிப்பாரிடம் அழைத்துச் சென்றது இயக்குநர் H வினோத் தான் அவருக்கு மிகவும் நன்றி. கதாநாயகன் உதய் கார்த்திக்பெரிய நடிகர்களான அஜித், விஜய் போன்று நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இரவு பகல் பாராமல் பணி செய்துள்ளார்.

ரமணா சார் மிகவும் எளிமையானவர் அவரது எளிமை மிகவும் ஆச்சரியமாக உள்ளது. கதாநாயகி தமிழ் பேசும் நடிகையாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்தேன் அது போல அவர் அழகாக நடித்துள்ளார்.

ஸ்ரீனி நடிப்பு இந்த படத்தில் சிறப்பாகப் பேசப்படும், ஒளிப்பதிவாளர் என்னுடைய பாதி வேலையை அவரே செய்தார், இந்தப் படத்திற்கு இசையமைத்த போபோ சசி அதிக மெனக்கெடலுடன் உழைத்துள்ளார். இசை அருமையாக வந்துள்ளது.

இயக்குநர் மிஷ்கின் சாருடன் இணைந்து பணி செய்ய நீண்ட நாட்களாக முயற்சி செய்தேன் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் இங்கு அவர் வந்ததற்கு நன்றி. நடிகர் அருண் விஜய் சார் மற்றும் விஜய் குமார் சாருக்கு நன்றி.

இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குச் சிறந்த பொழுது போக்காக இருக்கும் நான் கலைப் படம் பண்ணவில்லை காலாய் படம் பண்ணியுள்ளேன். என் வளர்ச்சிக்கு முழுமுதல் காரணமாக இருக்கும் என் அம்மாவிற்கு நன்றி. கண்டிப்பாக இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும், அனைவருக்கும் நன்றி.

director MR madhavan speech in dienosirs movie trailer luanch

பா. ரஞ்சித் படத்தின் சூட்டிங் அப்டேட் கொடுத்த நடிகர் பாலசரவணன்

பா. ரஞ்சித் படத்தின் சூட்டிங் அப்டேட் கொடுத்த நடிகர் பாலசரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தை இயக்கியவர் அதியன் ஆதிரை.

அதியன் அதிரை இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் இணைந்து நடிக்கும் படம் ‘தண்டகாரண்யம்’.

தண்டகாரண்யம்

இப்படத்தில் ரித்விகா, வின்சு சாம், ஷபீர் கல்லரக்கல், பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லெர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷனுடன் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, தொழில்நுட்பக் குழுவில் பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார், செல்வா ஆர்கே படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.

தண்டகாரண்யம்

இந்நிலையில், ‘தண்டகாரண்யம்’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் இன்றுடன் முடிவடைந்தது.

இரண்டாவது ஷெட்யூலின் கடைசி நாள் படப்பிடிப்பின் படங்களைப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் பால சரவணன். அதில், ‘தண்டகாரண்யம்’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் முடிந்தது மாபெரும் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.

தண்டகாரண்யம்

pa ranjith’s ‘Thandakaaranayam’ second schedule wrapped up

போனிகபூரை தெரியாது.. ஆனால் ஸ்ரீதேவியை தெரியும்.. – மிஷ்கின்

போனிகபூரை தெரியாது.. ஆனால் ஸ்ரீதேவியை தெரியும்.. – மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில் எம்.ஆர். மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி ரித்விக், சாய் ப்ரியா, ஸ்ரீனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘டைனோசர்ஸ்’.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் போனி கபூர் பேசியதாவது…

இங்குப் பேசிய அனைவரும் படத்தைப் பற்றி நம்பிக்கையாகப் பேசினார்கள். இந்தக்குழு கோவிட் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இப்படத்தை நான் பார்த்து விட்டேன் மிக அற்புதமாக இருந்தது. உதய் கார்த்திக் மிக நன்றாக நடித்துள்ளார் டான்ஸ் ஃபைட் ரொமான்ஸ் எல்லாம் நன்றாக வருகிறது. நன்றாக முத்தம் கொடுக்கிறார் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது…

இந்தப்படம் பற்றி அனைவரும் மிகுந்த நம்பிக்கையோடு பேசுகிறார்கள். டிரெய்லர் நன்றாக உள்ளது படக்குழுவினரின் உழைப்பு தெரிகிறது. எனக்கு போனிகபூரைத் தெரியாது ஆனால் ஸ்ரீதேவியைத் தெரியும் இந்த உலகில் வாழ்ந்த மிகச்சிறந்த நடிகைகளுள் ஒருவர் அவர்.

இன்று போனிகபூர் சாரை சந்தித்தது மகிழ்ச்சி. இயக்குநர் ரமணா அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி. இந்தக்குழு என்னை அழைத்த போது என்ன பெரிதாகச் செய்திருக்கப் போகிறார்கள் என்று நினைத்தேன் ஆனால் ஒரு குழுவாக அனைவரும் உழைப்பும் துடிப்பும் தெரிகிறது. புதுமையாகச் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் புரிகிறது.. படம் மிகப்பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இப்படத்தினை தயாரிப்பாளர் ராகுல் அவர்களின் ரோமியோ பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

டைனோசர்ஸ்

mysskin speech in dienosirs movie trailer luanch

உதய் கார்த்திக் என் குடும்பத்தின் பிள்ளை.. – விஜயகுமார்.; தடைகளை தாண்டி வந்தவன் நான் – அருண்விஜய்

உதய் கார்த்திக் என் குடும்பத்தின் பிள்ளை.. – விஜயகுமார்.; தடைகளை தாண்டி வந்தவன் நான் – அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில் எம்.ஆர். மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி ரித்விக், சாய் ப்ரியா, ஸ்ரீனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘டைனோசர்ஸ்’.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயகுமார் பேசியதாவது..

இந்த படத்தின் டிரெய்லர் முடிந்ததும் தயாரிப்பாளர் நம்பிக்கையுடன் பேசினார், அதை வைத்தே சொல்லுகிறேன் அவர் மட்டுமல்லாது படக் குழுவினர் அனைவரும் அதே நம்பிக்கையோடு உள்ளனர்.

கதையின் நாயகன் உதய் கார்த்திக் என் குடும்பத்தின் பிள்ளை அவருக்காகத் தான் இங்கு வந்தேன்.. படக்குழுவினர் அனைவரும் புதிது என்றனர். இப்போது படத்தின் கதையும் படமும் தான் முக்கியம் எனவே மக்கள் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்வார்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நடிகர் அருண் விஜய் பேசியதாவது…

எனக்கு இங்குள்ள அனைவரது மனநிலை தெரியும்.. நானும் அது போலத் தான் பல தடைகளைத் தாண்டி வந்தேன், படத்தின் டிரெய்லரை பார்த்தேன் நன்றாக உள்ளது.

மாதவன் சிறப்பாகத் தனது பணியைச் செய்துள்ளார் வாழ்த்துக்கள், தயாரிப்பாளர் ஸ்ரீனி சார் மிகவும் நம்பிக்கையாகப் பேசுகிறார்.. நான் இப்படி ஒரு தயாரிப்பாளரைப் பார்த்து இல்லை , போனி கபூர் சார் கொடுத்த ஆதரவிற்கு நன்றி மற்றும் இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

டைனோசர்ஸ்

arun vijay speech in dienosirs movie trailer luanch

விஜய்சேதுபதி-யின் 50வது படத்தில் பாலிவுட் பிரபலம்.; டைட்டில் மாஸா இருக்கே.!

விஜய்சேதுபதி-யின் 50வது படத்தில் பாலிவுட் பிரபலம்.; டைட்டில் மாஸா இருக்கே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி.

விஜய்சேதுபதி தனது ஐம்பதாவது படத்தை நெருங்கி உள்ளார்.

இவரது ஐம்பதாவது படத்தை ‘குரங்கு பொம்மை’ பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்க உள்ளார்.

இப்படத்தில் ‘நட்டி’ நடராஜ் , முனீஷ்காந்த், அருள்தாஸ், மணிகண்டன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ‘மகாராஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்குமுன்பு விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அனுராக் காஷ்யப் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Anurag Kashyap joins vijay sethupathis 50th movie

வாடிவாசல் படம் குறித்து 2 முக்கிய அப்டேட்டுகளை வெளியிட்ட தாணு!

வாடிவாசல் படம் குறித்து 2 முக்கிய அப்டேட்டுகளை வெளியிட்ட தாணு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாடி வாசல் படத்தை பிரமாண்டமாக தயாரிக்கும் கலைப்புலி எஸ் தாணு, இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் படம் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

சோதனை படப்பிடிப்பு நடந்ததில் இருந்து கடந்த ஒரு வருடமாக நூற்றுக்கணக்கான காளைகள் தங்க வைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பகிர்ந்து கொண்டார்.

கால்நடைகளுக்கான தீவனம் மட்டுமின்றி பணியாளர்களுக்கு மட்டும் இதுவரை சுமார் ஒன்றரை கோடி செலவாகியுள்ளது.

லண்டனை சேர்ந்த நிறுவனம் கிராபிக்ஸ் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் தாணு மேலும் கூறினார்.

Vaadi Vaasal official update given by producer thanu

More Articles
Follows