தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றதன் மூலம் இந்திய சினிமா இசையை உலகறிய செய்தவர் ஏ.ஆர். ரஹ்மான். இந்நிலையில் விரைவில் ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருக்கிறாராம் ரஹ்மான்.
பிரபல பாடகியான எம்.எஸ். சுப்புலட்சுமியின் 100வது பிறந்தநாள் விழா இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி ஐ.நா.சபையில் கொண்டாடப்படவுள்ளது. எனவே, எம்.எஸ். சுப்புலட்சுமியை கௌரவப்படுத்தும் வகையில் தனது சன்சைன் இசைக்குழுவுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.
50 வருடங்களுக்கு முன்பு (1966) ஐ.நா. சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.