விஜய் படத்தை எப்போது தொடங்குகிறார் ஏஆர்.முருகதாஸ்.?

விஜய் படத்தை எப்போது தொடங்குகிறார் ஏஆர்.முருகதாஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Murugadoss starts Vijay 62 shooting from January 2018மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பைடர் படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.

வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இப்படத்தில் தனது முந்தைய படங்களைப் போல் இல்லாமல் விஜய்யை வேறொரு கோணத்தில் காட்டப்போகிறேன் என ஏஆர்.முருகதாஸ் முன்பே தெரிவித்திருந்தார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தை ஜனவரியில் தொடங்கவிருக்கிறாராம்.

தற்போது விஜய்யுடன் நடிப்பவர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

AR Murugadoss starts Vijay 62 shooting from January 2018

கடவுளுக்கும் அன்பானவளுக்கும் நன்றி… நயன்தாராவை புகழும் விக்னேஷ்சிவன்

கடவுளுக்கும் அன்பானவளுக்கும் நன்றி… நயன்தாராவை புகழும் விக்னேஷ்சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara Vignesh Shivanநானும் ரௌடிதான் படத்தை இயக்கியபோதே நயன்தாராவின் காதல் வலையில் விழுந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இவர்கள் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், இருவரும் ஒன்றாகவே இருக்கின்றனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தன் பிறந்தநாளை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நயன்தாராவுடன் கொண்டாடி வருகிறார் என்பதை பார்த்தோம்.

தற்போது அவரே அந்த படங்களை பகிர்ந்து தன் ட்விட்டரில் பகிர்ந்து நயன்தாராவை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது…

“இப்படியான ஒரு பிறந்தநாள் வரும் என கனவு கூட கண்டதில்லை. கடவுளுக்கு முதலில் நன்றி.

இந்த வாழ்க்கையை அழகாகவும், பிரகாசமாகவும் மாற்றிய என் அன்பானவளுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி? கல்யாணம் எப்போ விக்கி?

Vignesh Shivan says thanks to Nayanthara to made his life beautiful

Vignesh ShivN‏Verified account @VigneshShivN
Have Never ever dreamt of havin a b’day like this! Thanking God first! & My Dear Sunshine For making this life soo beautiful & bright

சூர்யாவை தொடர்ந்து கார்த்தியும் எல்லா தகவல்களை வெளியிட்டார்

சூர்யாவை தொடர்ந்து கார்த்தியும் எல்லா தகவல்களை வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthis Theeran Adhigaram Ondru Teaser Trailer Movie Release date updatesசூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர், பாடல்கள், ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அனைத்து தகவல்களையும் நேற்று நள்ளிரவில் வெளியிட்டனர்.

இதனை தொடர்ந்து அவரது தம்பி கார்த்தி நடித்து வரும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் அனைத்து தகவல்களையும் வெளியிட்டுள்ளனர்.

இப்பட டீசர் செப்டம்பர் 27ஆம் தேதியும், ட்ரைலர் அக்டோபர் 17ஆம் தேதியும் படத்தை நவம்பர் 27ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சதுரங்க வேட்டை பட இயக்குனர் இயக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார்.

‘சிறுத்தை’ படத்திற்கு பிறகு இதில் மீண்டும் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் கார்த்தி.

ஜிப்ரான் இசையமைக்க, நாயகியாக ராகுல் பிரித்தி சிங் நடித்து வருகிறார்.

ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை வினோத் இயக்கி வருகிறார்.

Karthis Theeran Adhigaram Ondru Teaser Trailer Movie Release date updates

theeran

ஒருவழியாக விழித்திரு பட ரிலீசுக்கு விடை கிடைத்தது

ஒருவழியாக விழித்திரு பட ரிலீசுக்கு விடை கிடைத்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Finally Vizhithiru movie got release date on October 2017சில படங்கள் தான், ரிலீஸ் தாமதம் ஆனாலும் அதன் எதிர்பார்ப்பு என்றுமே குறையாமல் இருக்கும்.

கிருஷ்ணா, வித்தார்த், வெங்கட் பிரபு மற்றும் தன்ஷிகா நடிப்பில் தயாரான ‘விழித்திரு’ தனது கதையம்சத்தினால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளது.

இப்படம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாமதம் குறித்து இயக்குனர் மீரா கதிரவன் கூறியதாவது…

” இந்த தாமதம் மிகுந்த மனவலியை தந்தது. ஆனால் இந்த தொழிலில் இவ்வாறான எதிர்பாராத காரியங்கள் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

எங்கள் படத்தை ரிலீஸ் செய்யவுள்ள ‘சவுந்தர்யன் பிக்சர்ஸ்’ நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்களின் கதை இன்றும் புதுமையாக இருக்கும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. தரமான கதையை சுவாரஸ்யமாக.

தந்திருப்பதால் இப்படத்தை சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார் இப்படத்தின் இயக்குனர் மீரா கதிரவன்.

Finally Vizhithiru movie got release date on October 2017

VIZTHIRU OCT 6 TH FINAL

 

மீண்டும் ஒரு பண்டிகையில் இணையும் விக்ரம்-சூர்யா

மீண்டும் ஒரு பண்டிகையில் இணையும் விக்ரம்-சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pithamaganஒரு சில ஹீரோக்கள் மட்டுமே ஈகோ பார்க்காமல் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பார்கள்.

அதில் முக்கியமானவர்கள் சூர்யா மற்றும் விக்ரம் என்று சொன்னால் அது மிகையாகாது.

பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

அப்படம் கடந்த 2003 ஆம் ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியானது.

அதன்பின்னர் தற்போது மற்றொரு பண்டிகையில் இவர்கள் இருவரும் இணைந்து வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் 2018 பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இதேநாளில் விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் படமும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இம்முறை விக்ரம் மற்றும் சூர்யா இருவரும் ஒரே படத்தில் இணையவிட்டாலும் பண்டிகை தினத்தில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Thaana Serndha Kootam and Sketch movies plans to release on 2018 Pongal

3000 பெண்களுக்கு பட்டுப் புடவை பரிசளித்த ‘மகளிர் மட்டும்’ படக்குழு

3000 பெண்களுக்கு பட்டுப் புடவை பரிசளித்த ‘மகளிர் மட்டும்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

magalir mattum saree presentபிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்னன், மாதவன், நாசர், பாவல் நவகீதன் முதலானோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து, கடந்த 15-ஆம் தேதி வெளியான படம் ‘மகளிர் மட்டும்’.

சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்த இப்படம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

இந்த படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதால் ‘ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு பட்டுப் புடவை’ என்ற பரிசு திட்டத்தை அறிவித்திருந்தனர்.

அதன்படி ‘மகளிர் மட்டும்’ படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த பெண்களுக்கு பட்டுப் புடவை பரிசாக வழங்கப்பட்டது.

படம் வெளியாகி முதல் 3 நாட்களுக்கு ஒவ்வொரு திரையரங்கிலும், ஒவ்வொரு காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபருக்கு பட்டுப் புடவை பரிசாக வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதுமாக இதுவரை 3000 காட்சிகளில் 3000 பெண்களுக்கு 3000 பட்டுப் புடவைகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Magalir Mattum producers gifted sarees to 3000 ladies those watched movie

saree presentation at magali mattum show

More Articles
Follows