விஜய்-62 பட்ஜெட் ரூ100 கோடி; ஆனால் மொத்த யூனிட்டுக்குமே ரூ. 35 கோடிதானாம்

விஜய்-62 பட்ஜெட் ரூ100 கோடி; ஆனால் மொத்த யூனிட்டுக்குமே ரூ. 35 கோடிதானாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 62 teamசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர். முருகதாஸ் இயக்கிவரும் படம் விஜய் 62.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர்.

50 நாட்கள் கோலிவுட் ஸ்டிரைக் முடிவுக்கு வந்த நிலையில் ‘விஜய்-62’ படத்தின் ஷூட்டிங் சென்னையிலுள்ள ஆச்சி ஹவுசில் மீண்டும் துவங்குகிறது.

இப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த ரூ.100 கோடியில் விஜய் சம்பளம் ரூ.35 கோடி எனவும். ஏ.ஆர். முருகதாஸ் சம்பளம் ரூ.25 கோடி, கீர்த்திசுரேஷ் சம்பளம் ரூ.1 கோடி, ஏஆர்.ரகுமான் சம்பளம் ரூ.4 கோடி எனவும் சொல்லப்படுகிறது.

மீதமுள்ள ரூ. 35 கோடியில்தான் மொத்த யூனிட்டின் சம்பளமும் படமும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

பிரியா வாரியருடன் நடித்த நூரின் ஷெரிஃபின் வைரலாகும் வீடியோ

பிரியா வாரியருடன் நடித்த நூரின் ஷெரிஃபின் வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oru Adar love fame Noorin Shereef video goes viralஒரு அதார் லவ் என்ற மலையாள படத்தில் பிரியா வாரியர், நூரின் ஷெரிஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இடம் பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடலின் மூலம் பிரியா வாரியர் உலக அளவில் புகழ்பெற்றார்.

இந்நிலையில் இதே பாடலில் ப்ரியா வாரியருடன் சேர்ந்து நடித்த நூரின் ஷெரிப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் வெஸ்டர்ன் பாடலுக்கு பரதநாட்டியம் ஒன்றை ஆடியுள்ளார்.

இந்த வீடியோவை ப்ரியா வாரியர் அளவுக்கு வைரலாக்க ஒரு கூட்டம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆகட்டும்.. ஆகட்டும்…

Oru Adar love fame Noorin Shereef video goes viral

நரை படத்திற்கு கைகொடுக்கும் கண் சிமிட்டல் அழகி பிரியா வாரியர்

நரை படத்திற்கு கைகொடுக்கும் கண் சிமிட்டல் அழகி பிரியா வாரியர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Narai movie first look will be released by Wink beauty Priyaபிரியா வாரியர் என்று கேட்டால் தெரியாத ஆளே இல்லை என்னுமளவுக்கு அவர் உலக புகழ் பெற்றுவிட்டார்.

அவரது சமூக வலைத்தள பக்கங்கள் பாலோயர்களால் நிரம்பி வழிகிறது.

எனவே அவருக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

விரைவில் தமிழ் சினிமாவிலும் தடம் பதிப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் நரை என்ற தமிழ் படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று ஏப்ரல் 25ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிடவுள்ளார்.

Narai movie first look will be released by Wink beauty Priya

narai priya

பிரசன்னா-மடோனா-ஆண்ட்ரியாவின் த்ரில்லர் படத்தில் யோகி பாபு

பிரசன்னா-மடோனா-ஆண்ட்ரியாவின் த்ரில்லர் படத்தில் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prasanna Andrea and Madonna in Vidiyum Munn directors nextபவர் பாண்டி, நிபுணன் மற்றும் திருட்டுப் பயலே-2 ஆகிய படங்களை தொடர்ந்து பிரசன்னா ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கிறாராம்.

முக்கிய கேரக்டரில் மடோனா செபாஸ்டியன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

`விடியும் முன்’ படத்தை இயக்கிய பாலாஜி குமார் இப்படத்தை இயக்கவுள்ளார்.

மற்றொரு முக்கிய கேரக்டரில் யோகி பாபு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Prasanna Andrea and Madonna in Vidiyum Munn directors next

அவசரமா எடுத்து அவஸ்தை படனுமா..? அஜித்தின் விஸ்வாச முடிவு

அவசரமா எடுத்து அவஸ்தை படனுமா..? அஜித்தின் விஸ்வாச முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajiths Viswasam movie may not release for 2018 Diwaliவிவேகம் படத்தில் இணைந்த சத்யஜோதி, அஜித், சிவா ஆகியோர் மீண்டும் இணையும் படம் விஸ்வாசம்.

இதில் அஜித்துடன் நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடிக்க, இமான் இசையமைக்கிறார்.

இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியான போதே 2018 தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்திருந்தனர்.

ஆனால் மார்ச் மாதம் துவங்க இருந்த படப்பிடிப்பு படஅதிபர்கள் போராட்டத்தால் தள்ளிப்போனது.

அடுத்த மாதம் மே 4-ஆம் தேதிதான் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கவுள்ளது.

எனவே படத்தை அதற்குள் முடித்து தீபாவளிக்கு வெளியிட முடியுமா? என்ற சந்தேகம் படக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளதாம்.

மேலும் அவசரமாக படத்தை எடுத்து அவஸ்தை படனுமா? என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.

எனவே படம் வெளியீட்டில் தாமதம் ஆகும் என தெரிய வந்துள்ளது.

மேலும் இப்படத்தின் முக்கிய கேரக்டர்களில் போஸ் வெங்கட் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிக்கவிருப்பதாக வந்த தகவல்களை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

நம் தளத்தில் அந்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ajiths Viswasam movie may not release for 2018 Diwali

ஜீன் மாதத்திற்குள் 25 படங்கள் ரிலீஸ்; கலை கட்டும் தமிழ் சினிமா

ஜீன் மாதத்திற்குள் 25 படங்கள் ரிலீஸ்; கலை கட்டும் தமிழ் சினிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamil cinemaகடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை சுமார் 50 நாட்களாக எந்த தமிழ்ப் படமும் வெளியாகவில்லை.

ஏப்ரல் 20ம் தேதிதான் ‘மெர்க்குரி மற்றும் முந்தல்’ ஆகிய படங்கள் வெளியாகின.

தற்போது புதிய விதிமுறைகளை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ளது.

டங்களின் சென்சார் தேதியைப் பொறுத்தே புதிய படங்களுக்கான வெளியீட்டுத் தேதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஒவ்வொரு தயாரிப்பாளரிடமிருந்தும் அவர்களது படங்களை வெளியிட 3 தேதிகளைக் குறிப்பிட சொல்லுமாறு கேட்டு இருக்கிறார்களாம்.

அதற்காக அமைக்கப்பட்ட ஒரு குழு அந்தப் படங்களைப் பரிசீலித்து ஒன்றுகொன்று அதிகமான மோதல் இல்லாதபடி அனைத்துப் படங்களுக்கும் சரியான வெளியீட்டுத் தேதியை பிரித்துக் கொடுத்து வருகிறார்கள்.

அதன்படி இப்போதைக்கு ஜுன் மாதம் வரையிலான படங்களுக்கான தேதியை கொடுத்துவிட்டதா கூறப்படுகிறது.

மேலும் ஒரு வருடத்திற்கு உண்டான படங்களின் வெளியீட்டுத் தேதியை குறித்துக் கொடுக்க உள்ளார்களாம்.

அதன்படி, “பக்கா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், பாடம், தியா ஆகிய நான்கு படங்கள் ஏப்ரல் 27ல் இந்த வாரம் வெளியாகிறது.

இதனையடுத்து ஜீன் 7ல் காலா ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலா ரிலீஸை அறிவித்துவிட்டதால் மற்ற படங்களும் விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர்.

ஜீன் மாதத்திற்குள் கீழே உள்ள படங்கள் வெளியாகவுள்ளன.

விஸ்வரூபம் 2, டிக் டிக் டிக், இரவுக்கு ஆயிரம் கண்கள், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஒண்ணு போதும் நின்னு பேசும், செம போத ஆகாத, வல்லவனுக்கும் வல்லவன், மோகினி, கீ, கோலி சோடா 2, இரும்புத் திரை, காளி, கடைக்குட்டி சிங்கம், சர்வர் சுந்தரம், செம, ஆண்டனி, ஒரு குப்பைக் கதை, மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

More Articles
Follows