நான் எப்பவுமே ஹீரோ.. – பாக்யராஜ்..; கேஜிஎஃப் Vs பீஸ்ட் ஒப்பிடாதீர்கள் – ஆரி.; ‘3.6.9’ விழா ஹைலைட்ஸ்

நான் எப்பவுமே ஹீரோ.. – பாக்யராஜ்..; கேஜிஎஃப் Vs பீஸ்ட் ஒப்பிடாதீர்கள் – ஆரி.; ‘3.6.9’ விழா ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிஜிஎஸ் சரவணகுமார் தயார்ப்பில் இயக்குநர் சிவ மாதவ் இயக்கத்தில், 21 வருடங்களுக்கு பிறகு திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘3.6.9’. உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக, நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது இப்படம்.

24 கேமராக்களில் ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்க, 75 க்குமேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. பரபரப்பான ஒரு சயின்ஸ் பிக்சன் திரில்லராக வெளியான இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.

தயாரிப்பாளர் பி ஜி எஸ் சரவணகுமார் பேசியதாவது…

எங்களுக்கு ஒரு ஐடியாவாக தோன்றியதை செய்யலாம் என முடிவெடுத்து திட்டமிட்டோம். பாக்யாராஜ் சாரிடம் சொன்ன போது அவர் வழிகாட்டினார், எல்லாம் நல்லபடியாக நடந்தது, உங்களுக்கு படம் பிடிக்குமென நம்புகிறோம் நன்றி.

நடிகர் ஆரி பேசியதாவது…

இந்த படத்திற்கு வருமுன் படத்தை பற்றிய விசயங்களை கேட்டேன். சயின்ஸ் பிக்சன் படம் என்றார்கள். ‘3.6.9’ எனது கார் நம்பர். அந்த நம்பர் பற்றி பலர் சொன்ன பிறகுதான் தெரிந்தது.

உலகில் எந்த விசயத்தை எடுத்து கொண்டாலும் அது ‘3.6.9’ நம்பரில் அடங்கிவிடும். அப்படியான பவர் அந்த நம்பருக்கு உண்டு. அந்த கருத்தில் தான் இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள் என நினைக்கிறேன்.

இங்கு பேசிய படக்குழுவினர் அனைவரும் அவர்களின் தாய் தந்தையரை வாழ்த்தி பேசியது பிடித்திருந்தது. இப்போது சினிமாவில் ஒரு பஞ்சாயத்து போய் கொண்டு இருக்கிறது. பீஸ்ட் Vs கேஜிஎஃப். முதலில் இதை ஓப்பிடுவதே தவறு.

கேஜிஎஃப் ஒரு பான் இந்திய படம், ஆனால் பீஸ்ட் ஒரு மொழிக்கான படம், அதற்காக பீஸ்டை தாழ்த்தி பேசுவது மிகவும் தவறு. தமிழ் சினிமா செய்யாத சாதனைகளே இல்லை. இங்கு தான் ஒத்த செருப்பு போன்ற படம் வந்தது.

உலகின் 100 சிறந்த படங்களில் பட்டியலிடப்பட்ட நாயகன் படமும் இங்கு தான் உருவானது. தமிழ் படங்களை தாழ்த்தி பேசக்கூடாது.

இதோ இந்தப்படமும் 81 நிமிடத்தில் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இப்படி பட்ட படங்களை நாம் கொண்டாட வேண்டும். முன்னெடுத்து செல்ல வேண்டும். இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். பாக்யராஜ் சார் 21 வருடங்கள் கழித்து நாயகன் என்கிறார்கள். ஆனால் அவர் எப்போதும் ஹீரோ தான். அவரளவு சாதனைகள் எவரும் செய்ய முடியாது. சின்ன வீடு எனும் அடல்ட் படத்தை கூட குடும்பத்தோடு பார்க்கும் படி எடுப்பவர். ஒரு அடல்ட் படம் எப்படி எடுக்க வேண்டும் என அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் மாதிரி அடல்ட் படம் எடுத்தால் நான் நடிக்க தயார்.

இப்போது கூட அவர் நடிக்கும் படங்களில் சாதனை செய்கிறார். இப்படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்.

நடிகர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமனண் பேசியதாவது….

இன்றைய திரைப்பட உலகம் வெவ்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஒரு பக்கம் 1000 கோடியில் படமெடுக்கிறார்கள், பாக்யராஜ் சிஷ்யன் பார்த்திபன் ஒரு ஷாட்டில் படமெடுத்தார். இங்கே இவர்கள் புதிய சாதனை படைத்துள்ளார்கள்.

ஒரு தயாரிப்பாளராக இப்படத்தை எடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். இவர்களின் தைரியமும் திட்டமிடலும் கவர்கிறது. இயக்குநரின் தெளிவு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் . தமிழ் சினிமாவில் தற்போது திரைக்கதை தான் பெரிய சிக்கலாக இருக்கிறது.

எந்த படத்திலும் திரைக்கதை சரியில்லை என்று தான் முதலில் பேச்சு வருகிறது, திரைக்கதையில் வித்தகரான பாக்யராஜ் இப்போது இருக்கும் திரை ஆர்வலர்களுக்கு ஒரு திரைக்கதை வகுப்பை நடத்த வேண்டுமென இங்கு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

இயக்குநர் நடிகர் பாக்யராஜ் பேசியதாவது…

21 வருஷம் ஆச்சு என்று சொல்லி திரும்ப திரும்ப போட்டு என்னையே சங்கடப்படுத்தி விட்டார்கள். படத்தில் ஸ்கீரினில் வர்றவன் தான் ஹீரோவா கதை திரைக்கதை எல்லாம் சும்மாவா, அது இருந்தால் தான் ஹீரோ. நான் அவ்வப்போது நடித்துகொண்டு தான் இருக்கிறேன் நான் எப்போதும் ஹீரோ தான்.

இங்கு இயக்குநர் என்னை படைத்த அப்பா அம்மாவுக்கு என ஆரம்பித்தது எனக்கு பிடித்திருந்தது. நான் இதுவரை கிறிஸ்தவன் கெட்டப் போட்டதில்லை. இந்தப்படம் தான் முதல் முறை. இப்படம் சயின்ஸ் பிக்சன் என்றார்கள் இவர்கள் திட்டமிட்டது எல்லாம் பார்க்க பிரமிப்பாக இருந்தது.

81 நிமிடம் தான் எடுப்பார்கள் என்பதால் 3 நாள் ரிகர்சல் செய்தாரகள். யாராவது சொதாப்பினால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது .ஆனால் இவர்கள் 1 மாதம் ரிகர்சல் செய்து வந்திருந்தார்கள். மிக கச்சிதமாக திட்டமிட்டு எடுத்தார்கள். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். படத்தில் நான் மறந்து விடுவேன் என பாண்டி எனக்கு டயலாக் சொல்லி அசத்தினார். அனைவரும் சிறப்பாக நடித்து படத்தை எடுத்து விட்டார்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் மாரீஸ்வரன் பேசியதாவது…

இந்தப்படம் ஒரு மிகப்பெரிய முயற்சி. 450 க்குமேற்பட்ட தொழில் நுட்ப கலைஞர்கள் பின்ணனியில் வேலை பார்க்க 75 நடிகர்கள் நடித்தார்கள். அவர்கள் அனைவரின் ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமானது. அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா பேசியதாவது..

எனக்கு ஒரு கனவு இருந்தது. என் தந்தையின் காலத்து நாயகர்களுக்கு இசையமைக்க வேண்டுமென்பது என் ஆசை. அது இந்தப்படத்தில் நிறைவேறியிருக்கிறது. பாக்யராஜ் சார் படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சி. எனக்கு இந்த வாய்ப்பை தந்த சிவ மாதவ் அவர்களுக்கு நன்றி. இந்தப்படம் எப்படி எடுக்க போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் படத்தை சிறப்பாக திட்டமிட்டு எடுத்து விட்டார்கள். எல்லோருக்கும் நன்றி. ஒரு சாதனை படைப்பில் நானும் இருப்பது மகிழ்ச்சி.

இயக்குநர் சிவ மாதவ் பேசியதாவது…

சினிமாவுக்கு வரவேண்டும் என முடிவெடுத்த போது, சினிமாவில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்று நினைத்தேன். ஏனெனில் இங்கு இருப்பவர்கள் எல்லாம் ஜாம்பாவான்கள். அவர்களை மிஞ்ச முடியாது. ஆனால் அவர்கள் செய்யாத விசயத்தை முயற்சி செய்யலாம் என நினைத்தேன். அதே போல் சிந்தனையில் தயாரிப்பாளர் சரவணன் இருந்ததால் அவருடன் பயணிக்க முடிந்தது. நான் தனித்துவமாக இருக்க வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தேன். எனக்கு சினிமாவில் உருவம் கொடுத்து உயிர் தந்தவர் பாக்யராஜ் சார். அவரிடம் முழு கதையையும் விவாதித்தேன். அவர் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர் நடித்து கொடுத்துவிட்டார்.

என் தம்பி தான் ஒளிப்பதிவாளர் அவனிடம் முதலில் இந்த ஐடியாவை சொல்லி செய்ய முடியுமா? என்று கேட்டேன், முடியும் என்றான், அதனால் தான் இந்தப்படம் நடந்தது. என்னை புரிந்து கொண்டு என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி. நான் உழைத்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன், படம் பார்க்கும் போது உங்களுக்கு அது தெரியும். 369 படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்: சிவ மாதவ்,
ஒளிப்பதிவு மாரீஸ்வரன்,
இசை கார்த்திக் ஹர்ஷா
படத்தொகுப்பு ஸ்ரீநாத்
தயாரிப்பு பி ஜி எஸ் சரவணகுமார்.
இணை தயாரிப்பு கேப்டன் எம் பி ஆனந்த்.

Bhagyaraj and Aari speech at 369movie press meet

நன்றி மறப்பது நன்றன்று.. விஜய்யால் வந்த லாபத்தை மறந்துட்டீங்களா.? பிரமுகர் குமுறல்

நன்றி மறப்பது நன்றன்று.. விஜய்யால் வந்த லாபத்தை மறந்துட்டீங்களா.? பிரமுகர் குமுறல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த இரண்டு நாட்களாக சில தொலைக்காட்சி விவாதங்கள், யூ ட்யூப் பேட்டிகள் மற்றும் சமூக வலைதளங்களில் *பீஸ்ட்* படத்தையும், *நடிகர் விஜய்* பற்றியது மட்டம் தட்டும் விதமாக சில திரையரங்க உரிமையாளர்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றார்கள்..

*KGF2* என்பது சினிமாவில் அரிதாக வரும் ஒரு பிரம்மாண்ட படைப்பு மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..

ஆனால் அதே சமயம் *பீஸ்ட்* திரைப்படமும் மிகப்பெரிய வசூல் செய்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தமிழ்நாட்டில் எந்த தியேட்டருக்கு MG அடிப்படையில் படத்தை திரையிடவில்லை, யாருக்கும் நஷ்டம் ஏற்படவும் இல்லை, 2022ல் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படம் *பீஸ்ட்* என்பதே நிதர்சனமான உண்மை, நடிகர் விஜய் படத்தை திரையிட்ட அனைத்து திரையரங்குகளுமே பெரிய லாபம் அடைந்துள்ளனர்,

கொரோனா காலத்தில் அனைத்து திரையரங்குகள் எதிர்காலம் என்னவென்றே தெரியாமல் பாதிக்கப்பட்டு இருந்து போது OTTல் படத்தை திரையிடாமல் அந்த கடுமையான கொரோனா சூழலிலும் *மாஸ்டர்* படம் திரையரங்கிற்கு கொண்டு வர காரணம் *நடிகர் விஜய்* அன்று அவரை *திரையரங்குகளுக்கு வாழ்வு தந்த விஜய்* என்று புகழ்ந்த திரையரங்க உரிமையாளர்கள் இன்று எதோ ஒரு உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே *பீஸ்ட்* படத்தை பற்றி எதிர்மறை கருத்துக்களை பரப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது…

அனைத்து படங்களையுமே மிக நேர்த்தியாகவும், மாபெரும் வெற்றி படமாக எந்த நடிகராலும் தரமுடியாது சில படங்களில் குறைகளை இருக்கத்தான் செய்யும் அதை ரசிகர்கள் விமர்சிக்கலாம் ஆனால் அந்த நடிகர் படம் மூலம் லாபம் அடைந்த திரையரங்க உரிமையாளர்கள் இன்று அவர்களையே ஏளனம் செய்வது மிகவும் தவறான செயல்…

*நன்றி மறப்பது நன்றன்று*

— *K.ராஜமன்னார்*
கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டர்.

Raja Mannar supports Thalapathy Vijay in beast

Exclusive விஜய் – அஜித்தின் வெற்றிக்காக காத்திருக்கும் ரஜினி.; நிலைமை தலைகீழ் ஆச்சே.. இனிமே இப்படித்தானா.?

Exclusive விஜய் – அஜித்தின் வெற்றிக்காக காத்திருக்கும் ரஜினி.; நிலைமை தலைகீழ் ஆச்சே.. இனிமே இப்படித்தானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகில் என்றும் மவுசு குறையாத சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் ரஜினிகாந்த்.

இவரின் பட வெற்றிக்காக திரையுலகமே காத்திருக்கும். காரணம் இவரால் தியேட்டர் உரிமையாளர்கள் முதல் கேன்டீன் பாய் வரை லாபம் அடைவர்.

அதுபோல் திரையுலகினரும் ரஜினி படத்திற்காக காத்திருப்பார்கள்.

அதாவது ரஜினியுடன் பணிபுரிந்த இயக்குனர்கள் மற்றும் இளம் நடிகைகளை தங்கள் படத்தில் பயன்படுத்திக் கொள்ள ஆசைப்படுவர் இளம் நடிகர்கள்.

அப்போதுதான் தன் படத்திற்கு கூடுதல் விளம்பரம் கிடைக்கும் என்பதும் இவர்களின் கணக்காகும்.

ரஜினியுடன் நடித்த மீனா முதல்… இந்த கதை தொடர்கிறது.

ரஜினியின் ‘சந்திரமுகி’ படத்தில் நடித்த நயன்தாராவை ‘சிவகாசி’ படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் ஆடவைத்தனர்.

‘பேட்ட’ படத்தில் நடித்த மாளவிகாவை ‘மாஸ்டர்’ படத்தில் தன் ஜோடியாக்கினார் விஜய்.

‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுஷ்கா ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தின் நாயகினார்

அதுபோல் ‘காலா’ நாயகி ஹூமா குரேஷி ‘வலிமை’ படத்தில் அஜித்தின் நாயகினார்.

இந்த நிலையில் தற்போது நிலைமை மாறிவிட்டது.

ரஜினிக்காக காத்திருந்த அஜித் விஜய் … என்பது இப்போது மாறி… விஜய் அஜித்தின் வெற்றிக்காக காத்திருக்க தொடங்கி விட்டார் ரஜினிகாந்த்.

அஜித்தின் ‘விஸ்வாசம்’ வெற்றியடையவே அப்பட இயக்குனர் சிவாவுக்கு கால்ஷீட் கொடுத்தார் ரஜினி.

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியதால் நெல்சனுக்கு வாய்ப்பளித்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன தலீவரே இப்படியாச்சே.? இனி இப்படித்தானா தலைவா.?

Rajinikanth’s director selection based on Ajith and Vijay film ?

ஒரே கலரில் 5 நாய்கள்.. ஆனால் 10 நாட்களில் உயரத்தில் மாற்றம்.. அதான் PLAN B போட்டோம் – இயக்குனர் சரோவ்

ஒரே கலரில் 5 நாய்கள்.. ஆனால் 10 நாட்களில் உயரத்தில் மாற்றம்.. அதான் PLAN B போட்டோம் – இயக்குனர் சரோவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் வெளியான அமேசான் ஒரிஜினல் “ஓ மை டாக்” திரைப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, குழந்தைகளது இதயத்தை வென்று, செல்லபிராணிகள் வளர்ப்பவர்களது மனதையும் வென்றுள்ளது.
விரைவில் வெளியாகவிருக்கும் இந்த தமிழ் எண்டர்டெயினர் திரைப்படம், அர்ஜூனுக்கும் ( ஆர்ணவ் விஜய் ), அவனது செல்லபிராணி சிம்பாவிற்கு இடையில் உள்ள பந்தம் மற்றும் அன்பை பற்றிய கதையை கூறுகிறது.

நாம் டிரைலரில் பார்த்தது போல், ஒவ்வொரு நாய் பிரியர்களும் சந்தோஷப்படும் அளவிற்கு, பல 4 கால் நண்பர்களின் நேரத்தை எடுத்துகொள்ளும் படமாக இது இருக்கும்.

சமீபத்திய உரையாடலில், நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் சரவ் சண்முகம் கூறும்போது.., இந்த படத்திற்காக 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு பயிற்சி கொடுத்து பணியாற்றியுள்ளோம் என்றனர்.

100 நாய்களுடன் பணியாற்றியது பற்றி அருண் விஜய் பகிர்ந்துகொண்டதாவது….

இவ்வளவு நாய்களுடன் ஒரே நேரத்தில் வேலை செய்வது சவாலான விஷயமாக இருந்தது.

100-க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளது. ட்ரெயர்னர் ராஜவிற்கு ஒரு பெரிய நன்றி.

மேலும் இயக்குனர் சரவ், எல்லா விஷயங்களும், சிக்கலில்லாமல் செல்ல அதிக கவனம் செலுத்தினார். இந்த அழகான கதையில் இணைந்து பணியாற்றியது எங்கள் அனைவருக்கும் பெரிய மகிழ்ச்சி.”

இயக்குனர் சரோவ் சண்முகம் பகிர்ந்து கொண்டதாவது…

“நாங்கள் முதலில் ஒரே மாதிரி இருக்கும் மூன்று நாய்களை வாங்கி அதற்கு பயிற்சி கொடுத்தோம். படபிடிப்பிற்கு முன்னர், 5-6 வயதுடைய நாய் குட்டியை அதே கலரில் கொண்டு வந்தோம். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை நாய்களின் உயரத்தில் மாற்றம் ஏற்படும். அதற்கு நாங்கள் பிளான் B வைத்திருந்தோம்.

இந்த கணிப்புகளையும், நேரத்தையும் கவனிப்பதில் நாங்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்தோம். ட்ரெயர்னர் ராஜா , நாய் ஹாஸ்டல் வைத்திருந்தார், அங்கு தான் பயிற்சிகள் கொடுத்தார்.

படத்தில் விளையாட்டு போட்டி ஒரு பிரதானமான விஷயம், நான் அவரை ஊக்குவித்து, நாய்கள் எப்படி விளையாட வேண்டும் என்ற பயிற்சியை கொடுக்க சொன்னேன். இது உலகம் முழுக்க உள்ள ஒரு சாம்பியன்ஷிப் போட்டி. அது இங்கும் நிகழ்கிறது.

ஓ மை டாக் திரைப்படம், அர்ஜூன் மற்றும் அவனது நாய் குட்டி சிம்பாவிற்கும் இடையே இருக்கும் காதல் மற்றும் அரவணைப்பை கூறும் ஒரு உணர்வு பூர்வமான கதை. அர்ஜூன், சிம்பாவை சந்திக்கிறான், அது அவனை காப்பாற்றுகிறது, அவன் அதை அவன் சொந்த நாய் போல் வளர்க்கிறான்.

பின்னர் அர்ஜூன் மற்றும் சிம்பா அவர்கள் பாதையில் வரும் தடங்கல்களை கடந்து, வெற்றிப்பாதையை அடைகிறார்கள்.

“ஓ மை டாக்” திரைப்பட தயாரிப்பு: ஜோதிகா-சூர்யா, இணை தயாரிப்பு: ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் RB Talkies-ன் S. R. ரமேஷ் பாபு, இசை: நிவாஷ் பிரசன்னா, ஒளிப்பதிவு: கோபிநாத்.

இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில், ப்ரைம் வீடியோவில், இந்தியா உட்பட 240 நாடுகளின் பகுதிகளில் ஏப்ரல் 21, 2022-ல் பிரீமியர் ஆகவுள்ளது.

Actor Arun Vijay narrates the paw-fect experience of working in Oh My Dog

மோடிஜி பற்றி இளையராஜா எழுதியதில் என்ன தவறு?.. – இசையமைப்பாளர் தினா

மோடிஜி பற்றி இளையராஜா எழுதியதில் என்ன தவறு?.. – இசையமைப்பாளர் தினா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய தலைவர் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு ‘அம்பேத்கர் அன்ட் மோதி’ என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் சர்ச்சையாகியுள்ளன.

திமுக விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோர் இளையராஜாவை கடுமையாக விமர்சித்தனர்.

எனவே பாஜக பலரும் அவர்களின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர்
தினா தன் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில்…

மோடிஜி பற்றி எழுதிய புத்தகத்தில் இசைஞானி இளையராஜா தலையங்கம் எழுதியதில் என்ன தவறு உள்ளது?
பிடித்தவர்கள் கொண்டாடுங்கள்.
பிடிக்காதவர்கள் அமைதியாக இருப்பது நல்லது.”. என இசையமைப்பாளர்
தினா தன் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/Ccczdprps73/?igshid=MDJmNzVkMjY=

Music director Dhina supports Ilaiyaraaja

சிபி – தன்யா இணைந்த ‘மாயோன்’ பட ரிலீஸ் தேதி இதோ

சிபி – தன்யா இணைந்த ‘மாயோன்’ பட ரிலீஸ் தேதி இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நட்சத்திர நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட, ஆன்மீக அறிவியல் உணர்வை பிரதிபலிக்கும் டிஜிட்டல் செல்லுலாய்ட் படைப்பான ‘மாயோன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இன்றைய திரை உலக சூழலில் பான் இந்திய படங்களுக்கு வரவேற்பு இருப்பது புதிய டிரெண்ட் என்றால், தரமான உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் படங்களுக்கு எப்போதும் டிமாண்ட்டும், வரவேற்பும் இருக்கிறது.

தமிழ் திரை உலகில் ஒரு திரைப்படம் உருவான பிறகு, அதன் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் என ஏதேனும் ஒரு வகையில் வெளியாகி ரசிகர்களை கவரும்.

‘மாயோன்’ பட குழுவினர், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வித்தியாசமான முறையில் சிந்தித்து, இந்தியாவில் இதுவரை யாரும் செய்திராத வகையில் முதன் முதலாக பார்வை சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் படைப்பை உணர்ந்து கொள்ளும் வகையில் ‘மாயோன்’ பட டீஸரை பிரத்யேக ஒலிக்குறிப்புடன் வெளியிட்டனர். பட குழுவினரின் இந்த புதிய முயற்சிக்கு பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்தது.

இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இசைஞானி இளையராஜா எழுதி இசையமைத்த ‘மாயோனே..’ எனத்தொடங்கும் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டனர்.

இந்த பாடலின் லிரிக்கல் வீடியாவில் இடம்பெற்ற ‘ழ்’ என்ற சொல் குறித்து இணையவாசிகளிடம் பெரிய அளவில் விவாதமும் அரங்கேறியது.

பாடல் முழுவதும் பரவிய ஆன்மீக உணர்வு, திரையிசை ரசிகர்களை துல்லியமாக சென்றடைந்து, பாடல் வெளியான குறுகிய காலத்தில் மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை சென்றடைந்து சாதனை படைத்தது.

இதற்குப் பிறகு ‘மாயோன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்திலும், ரசிகர்களிடத்திலும் அதிகரித்துவிட்டது. படக்குழுவினர் ‘மேஸ்ட்ரோ’ இசைஞானி இளையராஜா இசையில் உருவான ‘ சிங்கார மதன மோகனா..’ என தொடங்கும் ‘மாயோன்’ படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடலை வெளியிட்டனர்.

இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் ‘பகவான் கிருஷ்ணரின் ஆந்தம்’ என குறிப்பிட்டு இந்த பாடலையும் இணையத்தில் கொண்டாடினர்.

டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் படம் குறித்த புதிய தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த தருணத்தில் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தணிக்கைக்காக சென்றது. படத்தை பார்வையிட்ட தணிக்கை குழுவினர், எந்த இடத்திலும் ஒரு காட்சியைக்கூட நீக்காமல் பாராட்டி ‘யு’ சான்றிதழை வழங்கினர். இந்த செய்தி இணையத்தில் வெளியானபோது மக்களிடத்தில் வழக்கத்திற்கு மாறாக படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

பிரம்மாண்டமான பொருட்செலவில் பழங்கால கோவில் ஒன்றை கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘மாயோன்’ திரைப்படம் ஜூன் மாதம் 17ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் முழுமையான திரைப்பட அனுபவத்தை உணர்ந்து நுகரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘மாயோன்’ படத்தின் வெளியீட்டை அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இதில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, என். கிஷோர் (இயக்கம்), பாடல்களுக்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

The Screening Date of Maayon is announced

More Articles
Follows