‘மக்களுக்கு முதல் வணக்கம்’ நிகழ்ச்சி..; வருத்தம் தெரிவித்தார் ‘பிக் பாஸ்’ ஆரி

‘மக்களுக்கு முதல் வணக்கம்’ நிகழ்ச்சி..; வருத்தம் தெரிவித்தார் ‘பிக் பாஸ்’ ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aari (2)‘பிக் பாஸ்’ சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனார் நடிகர் ஆரி அர்ஜுனன்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஓரிரு படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஆனால் பொது நிகழ்ச்சிகளில் ஆரி பங்கேற்கவில்லை.

‘மக்களுக்கு முதல் வணக்கம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் முதன்முறையாக மக்களை சந்திக்க சென்றார்.

இது சென்னையில் நேற்று 21.02.2021ல் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் தன் ட்விட்டரில் ஆரி வருத்தம் தெரிவித்து இருந்தார்.

அதில்…
“மக்களுக்கு முதல் வணக்கம்”
21.2.21 என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.
வந்திருந்த அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ள, காலமும் சூழலும், மெரினா மாலில் ஒத்துழைக்காததிற்கு வருந்துகிறேன்.
புகைப்படம் எடுக்க வரிசையில் நின்ற உங்கள் பண்பிற்கும் அன்பிற்கும் இந்த ரசிகனின் ராயல் சல்யூட்.”

என பதிவிட்டுள்ளார் ஆரி.

Bigg Boss Aari message to his fans

100 நாட்களுக்கு பிறகு FDFS கொண்டாடிய ‘சூரரைப் போற்று’.; தடை போட்ட தியேட்டர் உரிமையாளர்களை கடுப்பேற்றிய சூர்யா ரசிகர்கள்

100 நாட்களுக்கு பிறகு FDFS கொண்டாடிய ‘சூரரைப் போற்று’.; தடை போட்ட தியேட்டர் உரிமையாளர்களை கடுப்பேற்றிய சூர்யா ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soorarai pottru (2)சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி, ஊர்வசி, காளி வெங்கட், ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘சூரரைப் போற்று’.

ஜிவி பிரகாஷ் இசையமைக்க சூர்யாவே இப்படத்தை தயாரித்து இருந்தார்.

குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கும் முயற்சியை இந்தியாவில் முன்னெடுத்த ஏர் டெக்கான் நிறுவன தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்ட சமயத்தில் இதன் ஓடிடி ரிலீசை அறிவித்தார் சூர்யா.

இதனால் சூர்யாவுக்கு பலத்த எதிர்ப்பு உருவானது.

சூர்யா தன் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேண்டும்.

அவர் தன் ஓடிடி முடிவை மாற்றாவிட்டால் இனி சூர்யா நடித்த தயாரித்த படங்களை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என அறிவித்தனர்.

இந்த அறிவிப்புக்கு சூர்யா ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சூர்யா தன் முடிவை விட்டு விலகாமல் ‘சூரரைப் போற்று’ பட லாபத்தை திரைத்துறை மற்றும் மக்களுக்கு பகிர்ந்து அளித்தார்.

அந்த சூழ்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது.

ஆனாலும் தியேட்டர்களில் படத்தை வெளியிடாமல் நவம்பர் 12ல் ‘சூரரைப் போற்று’ படத்தை அமேசான் ஓடிடியில் ரிலீஸ் செய்தார் சூர்யா.

இப்படம் ரிலீசாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. தற்போது 100 நாட்களை கடந்துள்ளது இந்த படம்.

சென்னையில் 18வது சர்வதேச திரைப்பட விழா வரும் 18ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற்று வரும் தற்போதைய நிலையில் இதே படம் சென்னை சத்யம் தியேட்டரில் திரையிடப்பட்டது.

முதல் நாள் முதல் காட்சி FDFS போல ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டரில் ரசித்தனர்.

எந்த (சூர்யா) படத்தை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என கூறினார்களோ இப்போது அதே படத்தை நாங்கள் திரையில் பார்த்து விட்டோம் என சூர்யா ரசிகர்கள் இணையங்களில் பதிவிட்டு தியேட்டர் உரிமையாளர்களை கடுப்பேற்றி வருகின்றனர்.

*கூடுதல் தகவல்கள்…*

18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடைபெறவுள்ளது.

இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது.

உலகெங்கிலும் உள்ள 53 நாடுகளில் இருந்து 37 மொழிகளில் (10 இந்திய மொழிகள் உட்பட) 92 திரைப்படங்கள் பங்குபெறவுள்ளன.

18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி 18.2.2021 அன்று பிவிஆர் மல்டிபிளெக்ஸின் சத்யம் திரையில் நடைபெற்றது.

25.2.2021 அன்று பிவிஆர் மல்டிபிளெக்ஸின் சத்யம் திரையில் நிறைவு விழா நடைபெறவுள்ளது.

Chennai film festival turned into fans show

‘பிக்பாஸ்’ புகழ் கணேஷ் வெங்கட்ராம் நடிக்கும் ரொமான்ஸ் திரில்லர் ‘உன் பார்வையில்’

‘பிக்பாஸ்’ புகழ் கணேஷ் வெங்கட்ராம் நடிக்கும் ரொமான்ஸ் திரில்லர் ‘உன் பார்வையில்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Un Paarvaiyil (2)பிக்பாஸ் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தற்போது ஒரு ரொமான்ஸ் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார்.

“உன் பார்வையில்” எனும் இப்படத்தை Kaho na pyar hai, Pardes, Taal போன்ற பாலிவுட் மெஹா ஹிட் படங்களின் ஒளிப்பதிவாளர் கபிர் லால் இப்படத்தினை இயக்குகிறார்.

இது தமிழில் இவருக்கு அறிமுகப்படமாகும்.

இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு டேராடூன், உத்ராகண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு, மராட்டி பெங்காலி மொழிகளில் படமாகிறது. தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராமன், பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ரொமான்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் சைக்லாஜிஸ்ட் ஆகவும், பார்வதி நாயர் பிஸினஸ் உமனாகவும் நடிக்கிறார்கள்.

படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி அனைவரையும் கவரும்படி அமைந்துள்ளது.

நடிகர் கணெஷ் வெங்கட்ராம் கூறியதாவது…

Kaho na pyar hai, Pardes, welcome back போன்ற பல படங்களில் கபிர் அவர்கள் ஒளிப்பதிவில் செய்த மேஜிக் கண்டு பிரமித்திருக்கிறேன். அவர் என்னிடம் கதை சொன்னபோது படு பரபரப்பான சுவாரஸ்யம் மிகுந்த கதையாக இருந்தது.

ரன் கதாப்பாத்திரம் பல அடுக்குகள் கொண்டதாக இருந்தது. இம்மாதிரியான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கவே காத்திருந்தேன். படம் அழகாக உருவாகி வருகிறது.

பார்வதி நாயர் கூறியதாவது..,

நடிப்புக்கு சவால் தரும் கதாப்பத்திரம் என்னுடையது. என் முழு உழைப்பை தந்து நடித்திருக்கிறேன். கணேஷ் வெங்கட்ராம் மிகச்சிறந்த நடிகர். படப்பிடிப்பில் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தார்.

கபீர் அவர்கள் ஒவ்வொரு காட்சியையும் அமைக்கும் விதம் அதை படமாக்கும் விதம் பிரமிப்பானது.

“உன் பார்வையில்” படத்தினை Lovely World Production சார்பில் அஜய் சிங் தயாரிக்கிறார். பரபரப்பாக உருவாகிவரும் இப்படத்தினை வரும் ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Ganesh Venkat Ram and Nisha joins for Un Paarvaiyil

‘மீம்’ கலைஞராக ‘சாம்பியன்’ விஷ்வா நடிக்கும் த்ரில்லர் படம்

‘மீம்’ கலைஞராக ‘சாம்பியன்’ விஷ்வா நடிக்கும் த்ரில்லர் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Champion Vishwa (2)சுசீந்திரன் இயக்்்இய சாம்பியன் படத்திிிிில் கால்பந்து வீரராக அறிமுகமானவர் விஷ்வா.

கால் பந்து பயிற்சி பெற்று நடித்து, முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது ‘மீம்’ கலைஞன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதுபற்றி அவர் கூறியதாவது:-..

“சாம்பியன்” படத்தில் என் நடிப்பை பார்த்து பிடித்து விட்டு
KH பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஹரி பாஸ்கரன் சார் என்னை பாராட்டினார்.

அதன் பின், டைரக்டர் பாரதி பாலா கதையை சொல்லி அதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று சொல்லி என்னை தேர்ந்தெடுத்தார்.

இப்படம் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் திரில்லர் படமாக இளைஞர்களை கவரும் படியாக இருக்கும்.

நான் அறிமுகமான முதல் படத்தில் கால்பந்து வீரராக பயிற்சி எடுத்தேன். இப்போது ‘மீம்’ கலைஞனாக பயிற்சி எடுத்து வருகிறேன்.

வினோத் என்கிற ‘மீம்’ கலைஞரோடு பயிற்சி எடுத்து வருகிறேன்.

அவரிடம் ‘மீம்’ பற்றி நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்,என்றார்.

மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு நடைப்பெற்று வருகிறது.

தயாரிப்பு: கோமளா, ஹரி பாஸ்கரன்
நிறுவனம்: KH picturs

Champion Vishwa’s next thriller film details

சரிடா பொத்திட்டு போடா..; ‘ஜகமே தந்திரம்’ ஓடிடி-யில் ரிலீஸ்.. தயாரிப்பாளரை தவிர்த்த தனுஷ்.!

சரிடா பொத்திட்டு போடா..; ‘ஜகமே தந்திரம்’ ஓடிடி-யில் ரிலீஸ்.. தயாரிப்பாளரை தவிர்த்த தனுஷ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush (3)கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’.

ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்ற ரகிட ரகிட.. பாடல் முன்பே வெளியாகி செம ஹிட்டானது.

கடந்தாண்டு 2020 மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

எனவே மாதங்கள் செல்ல செல்ல.. ‘ஜகமே தந்திரம்’ படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய தனுஷ் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் தயாரிப்பாளர் ஓடிடி ரிலீசுக்கு விலை பேசியதாக தகவல்கள் வந்தன.

எனவே படத்தை தானே ரிலீஸ் செய்யும் முடிவில் தனுஷ் இருந்ததாகவும் கூறப்பட்டது.

மேலும் ‘மாஸ்டர்’ படம் தியேட்டர்களில் வெளியான போது தனுஷ் ஆதரவு தெரிவித்து ‘ஜகமே தந்திரம்’ படத்தை திரையரங்கில் வெளியிட விருப்பம் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த படத்தை நெட்பிளிக்சில் நேரடியாக (ஓடிடியில்) ரிலீஸ் செய்ய முடிவு செய்து அதன் டீசரை இன்று (பிப்ரவரி 22ல்) வெளியிட்டு அறிவித்துவிட்டனர்.

தியேட்டர்களில் வெளியிட வேண்டிய படத்தை ஓடிடியில் வெளியிடுவது மோசமான முடிவு என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘ஜகமே தந்திரம்’ ஓடிடி ரிலீஸ் முடிவில் தனுஷுக்கு மகிழ்ச்சி இல்லை என்பது தெரிந்துவிட்டது.

எனவே தான் இதுவரை பட டீசரை தன் ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிடவில்லை.

சரிடா பொத்திக்கிட்டு போடா என்று இந்த பட டீசரில் தனுஷ் சொல்வது போல இறுதி காட்சி உள்ளது.

Dhanush is not happy with OTT release of his new film ?

கமலின் முன்னாள் மேனஜரும் ‘குணா’ படத்தயாரிப்பாளருமான DNS காலமானார்

கமலின் முன்னாள் மேனஜரும் ‘குணா’ படத்தயாரிப்பாளருமான DNS காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜ் கமல் பிலிம்ஸ் முன்னாள் நிர்வாகி் டி.என்.எஸ். அவர்கள் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

இவரின் முழுப்பெயர் DN சுப்ரமணியம்.

பிரபு, குஷ்பூ, ரஞ்சிதா நடிப்பில் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கிய ‘சின்ன வாத்தியார்’ என்ற படத்தை தயாரித்து இருக்கிறார்.

மேலும் கமல் நடித்த ‘குணா’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.

இவர் நடிகர் கமல்ஹாசனிடம் மேனேஜராக பல ஆண்டுகள் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Guna film producer passes away

DNS

More Articles
Follows