உடல்நிலை சரியில்லை… விரைவில் சந்திக்கிறேன்… – ‘பிக்பாஸ் வின்னர்’ ஆரி

Aari (3)பிக்பாஸ் 4 சீசனில் வெற்றி பெற்றார் நடிகர் ஆரி.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் அதில் கலந்து கொண்டவர்கள் தங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வெற்றிக் கோப்பையுடன் ‘எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கே’ என ஆரியும் நன்றி கூறினார்.

இந்த நிலையில் நடிகர் ஆரி தனது இன்ஸ்டாகிராம் பதிவில்…

“எனக்கு உடல்நிலை சரியில்லை. டிக்கெட் டாஸ்க் முதலே எனது உடல்நிலை சரியில்லாமல் உள்ளது.

விரைவில் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். இந்த வெற்றி என்னுடைய வெற்றி அல்ல. உங்களுடைய வெற்றி.

நேர்மைக்கு நீங்கள் கொடுத்த வெற்றி. நான் என்றைக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.

விரைவில் சோஷியல் மீடியா வாயிலாக சந்திக்கிறேன். என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக தேர்வு செய்து அன்புடன் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி” என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Aari says he will meet his fans soon

Overall Rating : Not available

Latest Post