விஜய் பட அறிவிப்பால் அஜித்துக்கு வந்த தல வலி..; வலிமை அப்டேட் கொடுத்த அஜித் பிஆர்ஓ

விஜய் பட அறிவிப்பால் அஜித்துக்கு வந்த தல வலி..; வலிமை அப்டேட் கொடுத்த அஜித் பிஆர்ஓ

நேர் கொண்ட பார்வை படத்துக்கு பிறகு
நடிகர் அஜித்… இயக்குனர் வினோத்… தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் இணையும் படம் “வலிமை”.

இந்த படத்தில் தல அஜித் போலீசாக நடிக்கிறார்.

சமீப காலமாகவே அஜித் படங்களில் சால்ட் பெப்பர் லுக்கில் இருந்தார்.

வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார்.

இந்த நிலையில் விஜய் ‘மாஸ்டர்’ தனது 65வது பட அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த படத்தின் அறிவிப்பு நேற்று (டிசம்பர் 10) வெளியானது.

இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரத்தில் ‘வலிமை’ பட அப்டேட் குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அஜித்தும் போனி கபூரும் இணைந்து ‘வலிமை’ படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுப்பார்கள்.

முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு பாதிப்பு தரவும்.. என பதிவிட்டுள்ளார்.

Valimai update

Ajith’s pro Suresh Chandra’s tweet regarding Valimai update

சீக்கிய காவலராக சல்மான் கான் நடிக்கும் ANTIM..; வைரலாகும் கெத்து வீடியோ

சீக்கிய காவலராக சல்மான் கான் நடிக்கும் ANTIM..; வைரலாகும் கெத்து வீடியோ

‘ஆண்டிம்’ (Antim) என்ற படத்தில் ஒரு சீக்கிய காவலராக நடிக்கிறார் சல்மான்கான்.

இந்த படத்தில் சல்மானுடன் அவரது மைத்துனர் ஆயுஷ் ஷர்மாவும் (Aayush Sharma) நடிக்கிறார்.

மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கி வரும்இப்படத்தில் நிகிதின் தீரூம்ஒரு கேங்க்ஸ்டர் கேரக்டரில் நடிக்கிறார்.

இந்த படத்தில் சல்மான் வித்தியாசமான தோற்றத்தில் வருவார் என கூறப்பட்டது.

எனவே சல்மானின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக அவரின் லுக்காக காத்திருந்தனர்.

இதனிடையில் ‘ஆண்டிம்’ பட காட்சியை ஆயுஷ் இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.

அதில் சல்மான் செம கெத்தாக சீக்கியர்கள் மதப்படி தலைப்பாகை அணிந்துள்ளார்.

அவர் மார்கெட்டுக்கு வருவதை போல காட்சி உள்ளது.

ரியல் எஸ்டேட் மாஃபியாக்களை அழிக்கும் ஒரு போலீஸ்காரராக நடிக்கிறாராம் சல்மான்கான்.

Salman Khan’s look in Antim unveiled, see here

திராவிட கட்சிகளுக்கு கடைசி காலம்.. ரசிகர்களுக்கு கட்சி பதவி.. விமர்சித்தவர்களுக்கு விரைவில் பதிலடி..; ரஜினி அண்ணன் சத்யநாராயணா பேட்டி

திராவிட கட்சிகளுக்கு கடைசி காலம்.. ரசிகர்களுக்கு கட்சி பதவி.. விமர்சித்தவர்களுக்கு விரைவில் பதிலடி..; ரஜினி அண்ணன் சத்யநாராயணா பேட்டி

sathya narayanan rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை டிசம்பர் 12ஆம் தேதி தன் 70வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

இதனை முன்னிட்டு திருவண்ணாமலை அருணகிரிநாதர் கோயிலில் அவரது மூத்த சகோதரர் சத்தியநாராயணா சிறப்பு அபிஷேகம் செய்து இறைவனை வழிபட்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது…

“கட்சி பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் இன்னும் அனுமதி தரவில்லை.

பல்வேறு கட்சியைச் சேர்ந்த பிரபலங்கள் கட்சியில் இணைய காத்திருக்கின்றனர்.

அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

திமுக., அதிமுக ஆட்சிகளை அகற்றி, மக்கள் நல்லாட்சியைக் கொண்டுவர வேண்டும்.

திராவிட இயக்கங்களுக்கு இது கடைசி காலம் என்றார்.

ரஜினி ரசிகர் மன்றத்தில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு கட்சியில் உயர் பதவிகள் வழங்கப்படும்.

ரஜினி குறித்து விமர்சனங்கள் செய்யும் அரசியல் கட்சியினருக்கு ஜனவரி மாதம் ரஜினிகாந்த் தக்க பதிலடி கொடுப்பார்.”

இவ்வாறு சத்யநாராயணா பேசினார்.

Rajinikanth Brother Satyanarayana On Super Star’s Political Entry

ஒரே ஷாட்டில் விமலின் ஹாரர் படம்.; வீராவுக்கு சிங்காரவடிவேலன் நன்றிக்கடன்!

ஒரே ஷாட்டில் விமலின் ஹாரர் படம்.; வீராவுக்கு சிங்காரவடிவேலன் நன்றிக்கடன்!

Producer Singara Vadivelanகழுகு 2 படத்தை தொடர்ந்து மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவடிவேலன் தயாரிக்கும் புதிய ஹாரர் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார்..

மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

“1 பந்து 4 ரன் 1 விக்கெட்” பட இயக்குனர் வீரா இந்த படத்தை இயக்குகிறார்..

இதில் ஹைலைட்டான அம்சம் என்னவென்றால் இந்தப்படம் ஒரே ஷாட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில், துணைத்தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன் போட்டியிட்டபோது, அவருக்கு உறுதுணையாக, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் இயக்குனர் வீரா.

இதனால் அவரை கவுரவப்படுத்தும் விதமாக, நன்றிக்கடனாக இந்த பட வாய்ப்பை, அவருக்கு வழங்கியுள்ளார் சிங்காரவடிவேலன்.

வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது.

Actor Vimal’s next film is produced by Singara Vadivelan

கூகுள் தேடலில் ட்விட்டர் ட்ரெண்டிங்..; ‘சூரரைப் போற்று’ பட அசாத்திய சாதனை

கூகுள் தேடலில் ட்விட்டர் ட்ரெண்டிங்..; ‘சூரரைப் போற்று’ பட அசாத்திய சாதனை

soorarai pottruஒரு படம் மக்களை எந்தளவுக்குச் சென்று அடைந்துள்ளது என்பதைப் பல வழிகளில் தெரிந்து கொள்ளலாம்.

மக்களிடையே அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம், நடிகரின் நடிப்பு ஏற்படுத்திய பிரமிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் சமூக வலைதளத்தில் எதிரொலிக்கும். மேலும், பலரும் ஒரு படத்தைப் பற்றிப் பேசும் போது “அப்படி என்ன இந்தப் படத்தில் இருக்கும்” என்கிற ஆர்வத்தைப் பார்க்கத் தூண்டும்.

இப்படி அனைத்து வழிகளிலும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஒரு அசாத்திய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

சுதா கொங்கரா துல்லியமான இயக்கத்தில், சூர்யாவின் பிரமிப்பூட்டும் நடிப்பில், ஜி.வி.பிரகாஷின் சிலிர்ப்பூட்டும் இசையில் வெளியான படம் ‘சூரரைப் போற்று’.

2டி நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்திருந்தது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட நாடுகளில் நவம்பர் 12-ம் தேதி வெளியானது.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்த இந்தப் படத்துக்கு இணை தயாரிப்பாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரப்பாண்டியன் பணிபுரிந்திருந்தார்.

மேலும், 2டி நிறுவனமும் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தியது.

இந்தப் படம் வெளியான முதலே, திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என அனைவருடைய பாராட்டு மழையிலும் நனைந்தது. தமிழ்த் திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி, இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலருமே படத்தைப் பார்த்துப் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

பலரும் படத்தைப் பாராட்டி ட்வீட் செய்யவே, #SooraraiPottru என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் தளத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. 2020-ம் ஆண்டு இந்திய அளவில் அதிகப்படியாக ட்வீட் செய்யப்பட்ட படங்களின் ஹேஷ்டேக்குகளில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதனை ட்விட்டர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அடுத்த மகுடமாக அமைந்துள்ளது கூகுள் தேடல். 2020-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலை அறிவித்துள்ளார்கள்.

அதிலும் 2-ம் இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளது ‘சூரரைப் போற்று’. இந்த தேடல் பட்டியலில் முதல் 10 இடங்களில்
இடம்பெற்றுள்ள ஒரே தென்னிந்தியப் படத்தின் பெயர் ‘சூரரைப் போற்று’ மட்டுமே.

மக்கள் மத்தியில் தங்களுடைய கடும் உழைப்பு எந்தளவுக்குப் போய் சென்றுள்ளது என்பதை இந்த 2 சாதனைகள் மூலம் தெரிய வந்துள்ளதால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.

Suriya’s Soorarai Pottru adds two more feathers to its cap!

மீண்டும் டாப் ஸ்டார் பிரசாந்துக்கு ஜோடியாகும் சிம்ரன்…; ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் அப்டேட்ஸ்

மீண்டும் டாப் ஸ்டார் பிரசாந்துக்கு ஜோடியாகும் சிம்ரன்…; ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் அப்டேட்ஸ்

ஒரு பெரிய எதிர்பார்ப்பு சமீபத்தில் ஒரு படத்துக்கு உருவாகியுள்ளது என்றால் அது ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்கிற்குத் தான்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘அந்தாதூன்’.

2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றதுடன் 3 தேசிய விருதுகளையும் வென்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை கடும் போட்டிக்கு இடையே தியாகராஜன் கைப்பற்றினார். பொன்மகள் வந்தாள்’ படத்தின் மூலம் அனைவருடைய பாராட்டையும் பெற்ற இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார்.

இதில் நாயகனாக பிரசாந்த் நடிக்கவுள்ளார். இதற்காக உடல் இழைத்து தயாராகி வருகிறார்.

தற்போது முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘அந்தாதூன்’ படத்தில் தபுவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது.

தமிழ் ரீமேக்கில் அந்தக் கதாபாத்திரத்தில் தனது நடிப்பு, நடனம் என அனைத்து வகையிலும் ஆட்கொண்ட சிம்ரன், நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், கண்டிப்பாக இவருடைய நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.

அந்தாதூன்’ ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறித்து சிம்ரன் “இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் திரைப்படம் ‘அந்தாதூன்’.

பல்வேறு பகுதி மக்களைச் சென்று சேர்ந்தது. தபு அவர்களின் கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு. துணிச்சலான, அதே நேரம் சவாலான கதாபாத்திரம். இந்தப் படத்தில் மீண்டும் பிரசாந்துடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சமீபத்தில் நான் பார்த்த படங்களில் பொன்மகள் வந்தாள் மிகவும் அர்புதமாக இருந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் ப்ரெட்ரிக் உடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாயிருக்கிறேன். படம் முழுவதும் வரும் இந்தக் கதாபாத்திரம் எனது மகுடத்தில் இன்னொரு மாணிக்கமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதர கதாபாத்திரங்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. காமெடி, த்ரில்லர் என அனைத்தும் கலந்த வித்தியாசமான படமான ‘அந்தாதூன்’ தமிழிலும் மாபெரும் வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை.

Actress Simran is on board for Andhadhun Tamil remake

Andhadhun Tamil

More Articles
Follows