2015ல் ஆர்யா-சூர்யா-விஜய் இருந்தாங்க… ஆனா 2016ல் அஜித் மட்டும்தான்!

2015ல் ஆர்யா-சூர்யா-விஜய் இருந்தாங்க… ஆனா 2016ல் அஜித் மட்டும்தான்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vijay suriya aryaபிரபல ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்று கோலிவுட் நட்சத்திரங்கள் பற்றிய Most Sensational Celebrities 2016 ஆய்வு ஒன்றை நடத்தியது.

இதில் நிக்கி கல்ராணி, நயன்தாரா, மடோனா, பார்வதி ஆகிய 4 நடிகைகள் இடம் பெற்றுள்ளனர்.

5வது இடத்தில் நடிகர் அஜித் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

கடந்த 2015 ஆண்டில் நடைபெற்ற ஆய்வின் போது, அமலா பால், ஆர்யா, சூர்யா, விஜய் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் வரிசையாக இடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தப்ப சரிகட்ட நினைக்கிறவன மன்னிக்கவே மாட்டேன்…’ விஷால் பன்ச்

‘தப்ப சரிகட்ட நினைக்கிறவன மன்னிக்கவே மாட்டேன்…’ விஷால் பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal actionசுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கத்தி சண்டை.

ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் கூறப்பட்டது.

ஆனால் பல்வேறு காரணங்களால் இப்படம் நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை சற்றுமுன் வெளியிட்டனர்.

அதில்…. தப்பு பண்றவங்கள கூட மன்னிச்சுடுவேன். ஆனா செஞ்ச தப்ப சரி கட்டும்னு நினைக்கிறவன மன்னிக்கவே மாட்டேன் என பன்ச் டயலாக் பேசியுள்ளார்.

இறுதியாக இந்த டீசரில் ஐயம் பேக் என்றபடி வடிவேலு வருகிறார்.

இந்தாண்டும் அஜித் ரசிகர்களுக்கு ‘தல தீபாவளி’ தான்

இந்தாண்டும் அஜித் ரசிகர்களுக்கு ‘தல தீபாவளி’ தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithகடந்த ஆண்டு (2015) தீபாவளிக்கு அஜித் நடித்த வேதாளம் படம் வெளியானது.

படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதால், தல தீபாவளியாக கொண்டாடி தீர்த்தனர் அஜித் ரசிகர்கள்.

ஆனால் தற்போது நடித்து வரும் தல 57 படத்தின் சூட்டிங்கை இதுவரை நிறைவடையவில்லை.

ஆனால் இப்படத்ன் எல்லா பாடல்களையும் அனிருத் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இப்படம் தொடர்பான எந்தவொரு போஸ்டரும் இதுநாள்வரை வெளியாகவில்லை.

இந்நிலையில் தல 57 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை தீபாவளியன்று வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.

எனவே இந்தாண்டும் தல தீபாவளி கொண்டாட அஜித் ரசிகர்கள் ரெடியாகி விடுவார்கள் என்றே தெரிகிறது.

சிவகார்த்திகேயனுக்கு ரஜினி கொடுத்த தைரியம்

சிவகார்த்திகேயனுக்கு ரஜினி கொடுத்த தைரியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini sivakarthikeyanதன்னை வேலை செய்ய விடாமல் சிலர் தடுப்பதாக பேசிய சிவகார்த்திகேயன் ரெமோ படத்தின் நன்றி விழாவில் அழுதார்.

எனவே, இவருக்கு சிம்பு, விஷால் மற்றும் மனோபாலா பலரும் ஆறுதலாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும், சிவகார்த்திகேயனை தொடர்பு பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது, இதுவரை நடந்தவைகளை கேட்டறிந்த ரஜினி, தைரியமாக இருக்க சொல்லி, ஆறுதலாக பேசினாராம்.

சில்ட்ரன்ஸ், பேமிலி ஆடியன்சுக்கு உங்கள பிடிச்சிருக்கு. அப்புறம் என்ன? சந்தோஷமா இருங்க.

பேமிலி, ப்ரெண்ஸ் கூட எங்கேயாவது போய் வா. மனநிம்மதி கிடைக்கும் என்றும் சிவாவிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

சந்தானம்-ரோபா சங்கர் கூட்டணியில் காமெடி விருந்து

சந்தானம்-ரோபா சங்கர் கூட்டணியில் காமெடி விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanam vtv ganesh robo sankar‘தில்லுக்கு துட்டு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்து வருகிறார் சந்தானம்.

இந்நிலையில் சற்றுமுன் சந்தானத்தின் அடுத்த பட பூஜை சென்னையில் நடைபெற்றது.

விடிவி கணேஷ், தன் விடிவி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக இப்படத்தை தயாரிக்கிறார்.

சேதுராமன் இயக்கவுள்ள இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இதில் முக்கிய வேடத்தில் ரோபா சங்கர் நடிக்கவிருக்கிறாராம்.

சந்தானம் மற்றும் ரோபா சங்கர் இருவரும் காமெடியில் சிறந்தவர்கள்.

எனவே இவர்கள் கூட்டணியில் உருவாகும் இப்படம் ரசிகர்களுக்கு காமெடி விருந்தாய் அமைவதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்-அஜித் ஒதுங்கினாலும், ரசிகர்களுக்காக நின்ற ரஜினிகாந்த்

விஜய்-அஜித் ஒதுங்கினாலும், ரசிகர்களுக்காக நின்ற ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ajith rajiniதமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சூட்டிங்கை தமிழ்நாட்டில் வைக்க மாட்டார்கள்.

சூட்டிங் நடப்பது அறிந்துவிட்டால், திரளும் ரசிகர்களை சமாளிக்க முடியாது என்பதால், பெரும்பாலும் தமிழ்நாட்டில் சூட்டிங் வைப்பதையே தவிர்த்து வருகிறார்கள்.

அண்மையில் விஜய்யின் பைரவா படத்திற்காக, தமிழக பின்னணியை ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு படம் பிடித்தனர்.

அதன்பின்னர் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி பகுதியில் சில காட்சிகளை ஷூட் செய்தனர்.

அதுபோல் அஜித்தின் 57வது படத்தின் முக்கிய காட்சிகளை சென்னையின் முக்கியமான வீதிகளில் படமாக்க நினைத்தாராம் சிவா.

ஆனால் அஜித் மறுக்கவே, பின்னர் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டது.

ஆனால், ரஜினியின் 2.ஓ சூட்டிங்கை சென்னையை அடுத்துள்ள திருக்கழுங்குன்றம் பகுதியில் நடத்தியுள்ளார் ஷங்கர்.

அங்கே ரஜினியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தினம் வந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ரஜினி பாதுகாப்பாகவும், சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இருந்தபோதிலும் தன் ரசிகர்களோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு நடித்துக் கொடுத்துள்ளார் இந்த சூப்பர் ஸ்டார்.

More Articles
Follows