ஜிவி. பிரகாஷை இயக்கும் விஜய்-அஜித்தின் சூப்பர் ஹிட் டைரக்டர்

ஜிவி. பிரகாஷை இயக்கும் விஜய்-அஜித்தின் சூப்பர் ஹிட் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith and Vijays Hit film director Ezhil team up with GV Prakashவிஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் எழில்.

இவர் தற்போது ஜிவி. பிரகாஷ் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு…

பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.

இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படத்தை இன்று துவங்கி  உள்ளார்கள்.

எளிமையாக ஒரு கோயிலில் இதன் துவக்க விழா நடை பெற்றது. C.சத்யா என்பவர் இசையைமக்கிறார்.

மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.

எழில் பார்முலா எப்படியோ அப்படியே தான் இதுவும் காமெடி  சப்ஜெக்ட். மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Ajith and Vijays Hit film director Ezhil team up with GV Prakash

Ajith and Vijays Hit film director Ezhil team up with GV Prakash

குடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் “கண்களை மூடாதே“

குடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் “கண்களை மூடாதே“

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kangalai moodathe stillsசெயிண்ட் ஜார்ஜ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் K.E.எட்வர்ட் ஜார்ஜ் தயாரிக்கும் படம் “கண்களை மூடாதே“.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து,தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார் “K.E.எட்வர்ட் ஜார்ஜ்“ நாயகியாக சித்ராய் நடித்துள்ளார்.

மற்றும் போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், கிங்காங், சின்னதம்பி, மார்த்தாண்டம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – திஷாத் சாமி

எடிட்டிங் – தமிழ்மணி சங்கர்

துணை இயக்கம் – அந்தோணி பிச்சை, எஸ்.ராயப்பன்

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

முற்றிலும் வித்தியாசமான காதல் கலந்த குடும்பகதை தான் இந்த படம். திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி எப்படியெல்லாம் இருக்கவேண்டும், நம் பாரம்பரியம் என்ன என்பதை உணர்த்தும் கதை.

படம் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் நமக்கு இது போல மனைவி கிடைக்காதா என்று மனதில் தோன்றும். அதே மாதிரி எல்லா பெண்களுக்கும் தங்களுக்கு இதுபோல் கணவன் அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று ஏங்குவார்கள் அப்படியான திரைக்கதை இது.

படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

படம் பிப்ரவரி 28ம் தேதி வெளியாகிறது என்றார் இயக்குனர் K.E.எட்வர்ட் ஜார்ஜ்.

சின்னத்தம்பி படத்தயாரிப்பாளருடன் இணையும் விஷால்-கௌதம் மேனன்

சின்னத்தம்பி படத்தயாரிப்பாளருடன் இணையும் விஷால்-கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and gautham menonகௌதம் மேனனின் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரமின் துருவ நட்சத்திரம் மற்றும் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள காக்க காக்க 2 படத்தை இயக்குவார் என கூறப்பட்டது.

இதனிடையில் விஷாலை வைத்து ஒரு படத்தை விரைவில் இயக்கவுள்ளாராம் கௌதம்.

இப்படத்தை கே.பி.பிலிம்ஸ் கே.பாலு தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முக்கியமான படமான சின்னதம்பி உட்பட பல படங்களை தயாரித்தவர் தான் இந்த கே.பாலு.

கடந்த சில வருடங்களாக படங்களை இவர் தயாரிக்கவில்லை. மாறாக படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பைனான்ஸ் மட்டும் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா காவல்துறை விழிப்புணர்வு படத்தில் ரஜினியின் 2.0

ஆஸ்திரேலியா காவல்துறை விழிப்புணர்வு படத்தில் ரஜினியின் 2.0

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 point 0 rajiniமேற்கு ஆஸ்திரேலியா டெர்பி மாநில டிராபிக் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு நபர் அதிக போதையில் வாகனத்தை ஓட்டியுள்ளார்.

அவரை பரிசோதித்தபோது அவரது மூச்சுக்காற்றில் 0.341 அளவிற்கு ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த அளவு மயக்க மருந்தானது ஒருவர் கோமா நிலையில் இருப்பது சமம் அல்லது ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது கொடுக்கும் மருந்திற்கு சமம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

அதனை குறிப்பிடும் வகையில் ரஜினியின் 2.0 படத்தில் வரும் வசனம் உள்ள காட்சியை இதற்கு படமாக பதிவிட்டு ஒரு படத்தை டிசைன் செய்துள்ளனர்.

இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் அந்த பதிவை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்

இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RJ Balajiஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 பட படப்பிடிப்பு கடந்த ஜனவரி 18ல் தொடங்கியது.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் கமலுடன் காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

வில்லன் கேரக்டரில் நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஆர்.ஜே.பாலாஜி ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் நெடுமுடி வேணுவின் உதவியாளராக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதாவது அந்நியன் படத்தில் கம்பீரமான போலீஸ் பிரகாஷ் ராஜ் உடன் காமெடி போலீஸ் விவேக் இருப்பது போல இந்த கேரக்டர் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

காதலர் தின வாழ்த்து சொல்லி தன் திருமணத்தை அறிவித்த ஆர்யா

காதலர் தின வாழ்த்து சொல்லி தன் திருமணத்தை அறிவித்த ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya and sayeshaகோலிவுட்டின் முன்னணி நாயகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. இவருக்கு தற்போது 38 வயது ஆகிறது.

இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இதனிடையில் ஒரு டிவியில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தனக்கான மணப்பெண்ணை தேடினார்.

ஆனால் அதில் எந்த பெண்ணையும் இவர் தேர்வு செய்யவில்லை.

அதன்பின்னர் இவர் கஜினிகாந்த் படத்தில் நடித்த போது நடிகை சாயிஷாவுடன நெருக்கமாகி அவருடன் காதல் கொண்டார்.

அதன்பின்னர் சாயிஷாவும் காதலிக்க, தற்போது அது திருமணம் வரை சென்றுள்ளது.

இந்நிலையில், காதலர் தினத்தில் சாயிஷாவுடனான தனது காதலை வெளிப்படுத்தி ட்வீட் செய்துள்ளார் ஆர்யா.

அத்துடன் திருமண அறிவிப்பையும் வெளியிட்டார்.

இவர்களின் திருமணம் வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதி ஐதராபாத்தில் இருவீட்டார் முன்னிலையில் நடக்கவுள்ளது.

More Articles
Follows